ஃபேஸ்புக் பயனாளிகள் இனி விதவிதமாக லைக் செய்யலாம்.இதற்கு வசதியாக ஃபேஸ்புக் லைக் வசதியை மேலும் ஆறு விதமான இமேஜ்களாக விரிவாக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
ரியாக்ஷன்ஸ் எனும் பெயரில் இந்த இமேஜ்களை ஃபேஸ்புக் அறிமுகம் செய்திருக்கிறது.
சமூக வலைப்பின்னல் சேவையான ஃபேஸ்புக் பயனாளிகள் மத்தியில் லைக் பட்டன் பிரபலமாக இருக்கிறது. எனினும் லைக் பட்டன் எல்லா சூழல்களுக்கும் பொருத்தமாக இல்லதாததால், இதனுடன் டிஸ்லைக் பட்டன் வசதியும் தேவை எனும் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

கடந்த மாதம் நடைபெற்ற ஃபேஸ்புக் வழி கேள்வி பதிலில், அதன் நிறுவனர் மார்க் சக்கர் பெர்க்கும் டிஸ்லைக் பட்டனுக்கு நிகரான ஒரு வசதியை உருவாக்கி கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
இதனையடுத்து டிஸ்லைக் செய்யும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. டிஸ்லைக் பட்டனுக்கான தேவை பயனாளிகள் மத்தியில் இருந்தாலும் இந்த வசதியை அறிமுகம் செய்வது பல விபரீதங்களை ஏற்படுத்தலாம் என்ற அச்சமும் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே ஃபேஸ்புக் அறிமுகம் செய்ய இருப்பது பரிவு உணர்ச்சியை வெளிப்படுத்துவதற்கான வசதியை தான அறிமுகம் செய்ய இருப்பதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் ஃபேஸ்புக் பயனாளிகள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதி டிஸ்லைக் பட்டன் அல்ல; மாறாக இது ஏற்கெனவே உள்ள லைக் பட்டனின் விரிவாக்கம். ரியாக்ஷன்ஸ் எனும் பெயரில் அறிமுகமாகும் இந்த வசதியில் ஆறு விதமான இமேஜ்கள் உள்ளன.
அன்பு, ஹாஹா, யா, வாவ், சோகம் மற்றும் கோபம் ஆகிய ஆறு விதமான உணர்வுகளை தெரிவிக்கும் இமேஜ்களாக இவை அமைந்துள்ளன. லைக் பட்டனை கிளிக் செய்தால், வழக்கமான லைக் வசதியான உயர்த்திய கட்டை விரலுக்கு அருகே இந்த புதிய இமேஜ்களும் இடம்பெற்றிருக்கும். பயனாளிகள் தாங்கள் தெரிவிக்க விரும்பும் கருத்துக்கு ஏற்ப அவற்றை தேர்வு செய்து கொள்ளலாம்.
இந்த இமேஜ் வசதி முதல் கட்டமாக அயர்லாந்து மற்றும் ஸ்பெயினில் உள்ள ஃபேஸ்புக் பயனாளிகள் மத்தியில் சோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக இது தொடர்பான ஃபேஸ்புக் பதிவில் அதன் சீப் பிராட்க்ட் ஆபிசர் கிறிஸ் காக்ஸ் கூறியுள்ளார்.

பயனாளிகள் தெரிவிக்கும் கருத்துக்கள் அடிப்படையில் இந்த புதிய வசதி மேம்படுத்தப்பட்டு மற்ற ஃபேஸ்புக் பயனாளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
No comments:
Post a Comment