சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

9 Oct 2015

அழகுக்கு முடிவெடுக்கலாம்; முடி எடுக்கலாமா?

ணைந்த புருவங்களைச் செதுக்கி முகத்தைப் பளிச் எனக் காட்டுவதும் உடலில் இருக்கும் தேவை அற்ற முடிகளை அகற்றி சருமத்தைச் சலவைக்கல் போன்று வழவழப்பாக்குவதும் இன்று ஃபேஷன். இதெல்லாம் ஒருபுறம் அழகைக் கூட்டினாலும், இதில் ஆபத்தும் மறைந்து இருக்கிறது என எச்சரிக்கின்றனர் மருத்துவர் மற்றும் அழகுக் கலை நிபுணர்கள். 
'த்ரெட்டிங்’ மற்றும் 'வேக்ஸிங்’ எல்லாம் யார் செய்துகொள்கிறார்கள், ஏன் செய்து கொள்கிறார்கள்... விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணர் பொன்னிலா.
த்ரெட்டிங்:
'புருவ முடிகளை அழகாக வடிவமைத்துக் கொள்வது இன்று சகஜமாகிவிட்டது. முதல் முறைதான் கொஞ்சம் வலி இருக்கும். ஆனால், தொடர்ந்து செய்துகொள்ளும்போது அந்த வலியும் பழகிவிடும். சிலருக்கு எரிச்சல் ஏற்படலாம். இன்னும் சிலருக்குப் புருவப் பகுதியில் உள்ள தோல் லேசாக வீங்கலாம்'' என்று ஆரம்பித்தவர், விளக்கமாகப் பேச ஆரம்பித்தார்.
த்ரெட்டிங் செய்த 15 நாட்களிலேயே பிடுங்கப்பட்ட இடங்களில் மறுபடியும் முடி வளர ஆரம்பித்துவிடும். புருவத்துக்கு நல்ல 'ஷேப்’ வேண்டும் என்று நினைப்பவர்கள் குறைந்தது இரண்டு மாதங்கள் வரை புருவ முடியை நன்றாக வளரவிட்டு, பிறகு அழகு நிலையம் வந்தால் புருவத்தை அழகாகச் செதுக்கிவிடலாம்.


வேக்ஸிங்:
வேக்ஸிங்கில் முக்கியமாக இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று 'ஹாட் வேக்ஸ்’ (Hot wax)மற்றொன்று 'கோல்ட் வேக்ஸ்’ (Cold wax). பொதுவாக ஸ்பா மற்றும் அழகு நிலையங்களில் ஹாட் வேக்ஸ் மட்டும்தான் செய்யப்படுகிறது. கோல்ட் வேக்ஸை சூடு செய்யத் தேவை இல்லை. அதனால் வீட்டிலேயே வேக்ஸிங் செய்ய நினைப்பவர்கள் மட்டும்தான் இதைப் பயன்படுத்துவார்கள். வேக்ஸிங்கில் நிறைய வகைகள் உள்ளன. வறண்ட சருமத்தினருக்கு ஹனி வேக்ஸ், எண்ணெய்ச் சருமத்தினருக்கு ஹனி வித் லெமன் வேக்ஸ் பயன்படுத்துவோம். ஸ்பா, மற்றும் அழகு நிலையங்களில் பயன்படுத்தப்படும் வேக்ஸை, ஹீட்டரில் போட்டு நன்கு சூடாக்குவோம். உருக்கப்பட்ட வேக்ஸை அகலமான கலவைக் கரண்டியில் (Spatula) நனைத்து சருமத்தில் தடவுவோம். பிறகு, ஹார்ட் டிஷ்யூ பேப்பரின்  மேல் வைத்து நன்கு அழுத்தி இரண்டு விநாடிகளுக்குப் பிறகு எடுப்போம். அப்போது எல்லா முடிகளும் வெளியே வந்துவிடும். வேக்ஸிங் செய்த பிறகும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் சின்ன சின்ன முடிகளை த்ரெட்டிங் செய்து அகற்றிவிடலாம்'' என்கிறார் விளக்கமாக.
இயற்கைக்கு எதிராகச் செய்யப்படும் எந்தவொரு செயலுமே எதிர்மறையான பாதிப்புகளையே உண்டாக்கும். அப்படி இருக்க, மென்மையான நமது சருமத்தில் இருந்து மிகவும் அழுத்தமாகப் பிடுங்கப்படும் இந்த த்ரெட்டிங் மற்றும் வேக்ஸிங் முறைகள் எந்த அளவிற்கு நல்லது என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் தோல் நோய் சிகிச்சை நிபுணர் மஞ்சுளாவிடம் கேட்டோம்.
''இந்த இரண்டு முறைகளிலுமே முடி அகற்றப்படுகிறது. இவை இரண்டுமே ஒரே மாதிரியான பாதிப்புகளையே ஏற்படுத்தும். இப்படி முடி அகற்றப்படுவதன் மூலம் சருமத் திசுக்கள் பாதிக்கப்பட்டு ஒவ்வாமை ஏற்படலாம். இந்த மாதிரியான செயற்கை முறைகள் 'ஹைபர்பிக்மென்டேஷன்’ உண்டாக்கக்கூடியவை. அதாவது, தோலின் நிறத்தை மேலும் கறுமையாக்கக் கூடும். இதில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் முடியை அதன் வேரில் இருந்து பிடுங்கிவிடுகின்றன. ஆகவே இது உகந்தது அல்ல. அடிக்கடி முடிகளை அகற்றுவதைக் காட்டிலும் நிரந்தரத் தீர்வு வேண்டும் என்று நினைப்பவர்கள், சரும நோய் சிகிச்சை நிபுணர்களிடம் கலந்து ஆலோசித்து 'லேசர்’ முறையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.  இதில் நிரந்தரமாக முடி அகற்றப்படுவதுடன், வலியோ, பக்கவிளைவோ இருக்காது.  சிகிச்சைக் கட்டணம் அதிகம் என்றாலும் பாதுகாப்பானது' என்றார்.
இயல்பை அழகாக்கிக்கொள்வதும் ஆபத்தாக்கித் தவிப்பதும் நம் கையில்தான் இருக்கிறது. உடலில் தேவையற்ற இடங்களில் இருக்கும் முடிகளை இயற்கை முறையிலேயே அகற்ற வழி சொல்கிறார் இயற்கை அழகுக்கலை நிபுணர் ராஜம் முரளி.
''மஞ்சள் பூசி குளிப்பதையே மறந்து போனதன் விளைவால்தான் பெண்களுக்கு சருமத்தில் முடி சகட்டுமேனிக்கு வளரத் தொடங்குகிறது.  பெண் குழந்தைகள் பிறந்தவுடனேயே, மஞ்சள் தேய்த்து குளிப்பாட்டுவதை வழக்கமாக்குவது அவசியம்.  
அரை கிலோ பயத்தம் பருப்புடன், தலா 50 கிராம் சம்பங்கி விதை, செண்பகப்பூ, பொன் ஆவாரம்பூ  மற்றும் 100 கிராம் கோரைக்கிழங்கை  சேர்த்து மிஷினில் கொடுத்து அரைத்து அந்த பொடியைத் தினமும் உடலுக்குத் தேய்த்துக் குளிப்பதன் மூலம் சருமத்தில் முடிகள் உதிர்ந்து மெழுகு போல் சருமம் மிளிரும்'' என்றார்.

No comments:

Post a Comment