சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

9 Oct 2015

ராதிகா, சிம்புவுக்கு நன்றி: விஷால் குஷால்!

ராதிகா, சிம்புவின் சீற்றத்துக்கு ஆளான விஷால், பாயும் புலியாக சீறுவார் என்று எதிர்பார்த்தால் பவ்யமாக சிரிக்கிறார். '' 'நீங்கள்தான் எல்லோரையும் உங்கள் வலையில் வீழ்த்தி வைத்து இருக்கிறீர்கள்' என்று ராதிகாவும், சிம்புவும் குற்றம் சுமத்துகிறார்களே" அப்படி என்ன உங்கள் மீது அவர்களுக்கு தனிப்பட்ட கோபம் என்று விஷாலிடம் கேட்டோம்.

'நாயகன்' படத்து வேலுநாயக்கர் மாதிரியே 'தெரியலியே...' என்று உதட்டை பிதுக்கியவர், ''எனக்கு ராதிகா மேடம் மேல தனிப்பட்ட கோபம் இல்லீங்க. என்னைபோயி 'விஷால் ரெட்டி' என்று ராதிகா சொல்லி இருக்கார். நல்லது செய்யறதுக்கு சாதி, மதம்னு எந்த  அடையாளமும் தேவை கிடையாதுங்க. நடிகர் சங்கத்துல  சாதின்கிற பேச்சுக்கே இடமில்லீங்க.

முதல்ல ராதிகா மேடத்துக்கு ஒரு உண்மை தெரியணும். நம்ம நடிகர் சங்கத்தோட உண்மையான பேர் 'தென்னிந்திய நடிகர் சங்கம்'. அதிலேயே எல்லாம் அடங்கி இருக்குன்னு எல்லோருக்கும் தெளிவா தெரியும். அடுத்ததா என்னை 'டா...' போட்டு பேசின அந்த தம்பி சிம்புவுக்கு என்மேல என்ன கோபமோ? அவர் பாட்டுக்கு  இஷ்டத்துக்கு என்னைப்பத்தி ஏசினார். அவரோட பேச்சைக் கேட்டு எனக்கு சிம்பு தம்பிமேல கோபமே வரலீங்க. என்னைப்பத்தி வாய்க்கு வந்தமாதிரி இஷ்டத்துக்கு கேவலமா பேசின சிம்புவோட சிறப்புரைக்கு நன்றிங்க.

ஏன்னா தம்பியோட பேச்சுக்கு பிறகுதான் பாண்டவர் அணியோட வெற்றி பக்கா பிரகாசமா தெரியுது. சாதாரணமா வெற்றிபெற இருந்த எங்க அணியை மாபெரும் வெற்றிபெற உதவின மேடம் ராதிகா,  தம்பி சிம்புவோட ஏச்சுப் பேச்சுக்கு ரொம்ப நன்றி.

தேர்தல் பிரசாரம் சும்மா நச்சுன்னு போகுது. நாடக நடிகர்கள் முகத்துல மலர்கிற சந்தோஷத்தை பார்க்கறதுக்கு சந்தோசமா இருக்கு. சேலம் முடிஞ்சுடுச்சு, அடுத்ததா நாமக்கல் போயிக்கிட்டு  இருக்கோம். இனிமே சரத் அணிக்கும், எங்களுக்கு சமரசம்னு யாரும் பேச வராதீங்க. ஏன்னா அப்படி ஒரு பேச்சுக்கே  இடமில்லை. வேணும்னா திரைப்பட கூட்டமைப்புங்க, சரத்குமார் அணியை வாபஸ் வாங்கச் சொல்லட்டும். தலைக்குமேல வேலை நிறைய இருக்கு சாரே கிளம்பட்டா" என்று சேலத்தில் இருந்து நாமக்கல் சென்று கொண்டே நம்மிடம் தெளிவாக பேசினார், விஷால்.

No comments:

Post a Comment