சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

1 Jul 2015

அஜித் என்னைப் படமெடுத்தது என் பாக்கியம்- சிவபாலன் என்கிற அப்புக்குட்டி கண்ணீர்.

அழகர் சாமியின் குதிரை படத்திற்காக தேசிய விருது பெற்ற அப்பு குட்டிக்காக புகைப்படநிபுணராக மாறி போட்டோஸ் எடுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அவரின் இயற்பெயரான சிவபாலன் என்ற பெயரையே இனி பயன்படுத்துமாறும் கூறியுள்ளார். வீரம் படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்தார் அப்புகுட்டி. அந்த நேரத்தில் அப்புக்குடியுடன் நட்பானார் அஜித். அந்த நேரத்தில் நிகழ்ந்த சுவாரஸ்ய நிகழ்வை அப்புக்குட்டியே நம்மிடம் பகிர்ந்துள்ளார்.

“வீரம் படப்பிடிப்பின் போது அஜீத் சார் என்னிடம் தம்பி எல்லாப் படங்களிலும் ஒரே வித தோற்றத்தில் வருவது உங்களது வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும். முடிந்த வரை படத்துக்குப் படம் தோற்றத்தை மாற்றப் பாருங்கள். கிராமியப் படங்களை தவிர நகரத்தில் நடக்கும் கதைகளிலும் நடிக்கும் வகையில் தோற்றத்தில் மாற்றம் வேண்டும் என வலியுறுத்தினார். 

என்னை யார் சார் இப்படி எல்லாம் மாத்துவாங்க , யார் சார் படம் பிடிப்பாங்க என்று நானும் கேட்டேன். புன்னகையோடு விடை பெற்றவர் சில நாட்களுக்கு முன்னர் என்னை அழைத்து 29 ஆம் தேதி நீங்க ப்ரீயா இருந்தா சொல்லுங்க என்றார். நானும் வரேன்னு சொன்னேன் . எங்கே , என்ன , எது எனக் கேட்காமல். அவர் சொன்ன இடத்துக்கு வந்ததுக்கு அப்புறம் தான் தெரிஞ்சிது , அவர் என்னை வைத்து  புகைப் படம் எடுக்க போறார்னு. அதை விட ஆச்சரியம் என்னனா , என் உருவ அமைப்புக்கு ஏற்ப கச்சிதமாக தைக்கப் பட்ட உடைகள், உயர்தரமான அணிகலன்கள்,சிறந்த  ஒப்பனை சாதனங்கள், எனக்காகவே வரவழைக்கப் பட்ட பிரத்தியேக ஒப்பனையாளர்கள் என பிரமாதப்படுத்தி இருந்தார். 

ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தவன் இன்னும் மூடவே இல்லை. தவிர எனது இயற் பெயரைக் கேட்டு தெரிந்து கொண்ட அவர் அந்தப் பெயரான சிவ பாலன் என்றே என்னை அழைத்தார். மற்றவர்களையும் அவ்வாறே அழைக்குமாறு கூறினார். இனிமேல் நானும் எனது பெயரை  சிவபாலன் என்கிற அப்புக்குட்டி.என்று அழைக்கப்படுவதை விரும்புகிறேன்.ஒரு கை தேர்ந்த புகைப்பட  நிபுணர் போல் அவர் காட்டிய ஈடுபாடும் , தொழில் நேர்த்தியும் என்னை  பரவசம் ஊட்டியது..

புகைப்படங்கள் எடுக்கப்பட்ட பிறகு அதைப் பார்த்த எனக்கு பேச்சே  வரவில்லை. இது எனக்கு கிடைத்த மிக பெரிய பாக்கியம் .இது  என்னால்  மறக்க முடியாத ஒரு நாளாகும் என தெரிவித்தார் சிவபாலன் என்கிற அப்பு குட்டி.

சிவபாலன் என்கிற அப்புகுட்டி  இது வரை சினிமாவில் கூட ஏற்றிராத நவ நாகரீக உடைகள் அணிந்து புகைப் படம் எடுத்துக் கொண்டார். ஆனால் அவரது உடைகளோ, நவ நாகரீக தோற்றமோ அவரை உற்சாகமூட்டியத்தை விடவும் அந்த புகைப் படங்களை எடுத்தவரான அஜித் தான் அவரை ஆச்சரியப்படுத்தினாராம்.


No comments:

Post a Comment