சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

2 Jul 2015

‘வீட்டுல யாரு இருக்கீங்க..?’ முதியோரை மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்!

பங்களா டைப் கொண்ட ஒரு வீட்டுக்குள் முதலில் பேன்ட் சர்ட் அணிந்த ஒருவர் செல்கிறார். அடுத்து வெள்ளை சட்டை, வேட்டி அணிந்துகொண்டு அரசியல்வாதியைப்போல ஒருவரும் அவருடன் இரண்டு பேரும் செல்கிறார்கள். கேட்டைத் திறந்து வீட்டின் போர்ட்டிகோவில் நிற்கும் அவர்கள் காலிங் பெல்லை அழுத்துகிறார்கள். அதன்பிறகு அந்த வீடு திறக்கப்பட்டு வயதான ஒருவர் வந்து அவர்களிடம் பேசுகிறார். (அவரது உருவம் சரிவர தெரியவில்லை) சிறிது நேரத்தில் வீட்டிலிருந்து வேகமாக வெளியே வரும் அந்த நான்கு பேரும் தெருவுக்கு வருகிறார்கள். இதில் ஒருவன் கையால் சைகை செய்ததும் ஒரு ஆட்டோ வருகிறது. அதில் ஏறிச் செல்வதுடன் வீடியோ முடிவடைகிறது!
இந்த வீடியோவுக்கு ஒருவர் ஆடியோ (வாய்ஸ்) கொடுத்து இருக்கிறார். அதில் ‘இப்போ நீங்கள் பார்க்கிற இந்த வீடியோ என் வீட்டில் எடுக்கப்பட்டது. சென்னை நீலாங்கரையில் நடந்த சம்பவம். நான் வீட்டில் இல்லாதபோது ஒருமுறை (முதல் தடவை) நன்கொடை கேட்டு வந்த நான்கு பேர் கொண்ட கும்பலிடம் என்னுடைய பெற்றோர் பணம் கொடுத்து இருக்கிறார்கள். மீண்டும் அந்தக் கும்பல் நன்கொடை கேட்டு வந்துள்ளது. அப்போது, இவர்கள் பணம் கொடுக்கவில்லை. அதன் பிறகு, வீட்டில் சி.சி.டி.வி கேமரா பொருத்தினேன். மூன்றாவது முறையாக அந்த நான்கு பேரும் வந்துள்ளனர். நான் வீட்டில் இல்லை. வயதான என் பெற்றோரிடம் நன்கொடை கேட்டு உள்ளனர். பணம் கொடுக்காததால் கேவலமாக, தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.

இவர்களைப் போன்றவர்கள் அனாதை இல்லம், முதியோர் இல்லம் என்று சொல்லி நன்கொடை கேட்கிறார்கள். வீட்டில் தனிமையாக இருக்கும் முதியவர்களை குறிவைத்தே இந்தக் கும்பல் செயல்படுகிறது. இதில் அதிர்ச்சி என்னவென்றால் இவர்கள், அரசியல்வாதிகளுடன் போட்டோ எடுத்துக்கொண்டு, அதைக் காட்டி மிரட்டுகிறார்கள். உதவி செய்ய வேண்டும் என்றால் நீங்களே எல்லா விவரங்களையும் விசாரித்து, அதன் பிறகு உதவி செய்யுங்கள். நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக இதை ஷேர் செய்கிறேன்” என்பதோடு வீடியோ முடிவடைகிறது.
அந்த வீடியோவை ஷேர் செய்தவர், நீலாங்கரையைச் சேர்ந்த கோகுல் என்பதைக் கண்டறிந்து அவரிடம் பேச முயன்றோம். ஆனால், அவர் பேச மறுத்துவிட்டார்.
இதுகுறித்து நீலாங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரனிடம் பேசினோம். “தமிழகம் முழுவதும் தனியாக வசிக்கும் முதியோர்களைக் குறிவைத்து நகை, பணம் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகமாக நடப்பது தெரிந்தது. சில சம்பவங்களில் முதியோர்கள் கொலையும் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இத்தகைய வழக்குகளில் குற்றவாளிகளைப் பிடிப்பதிலும் சிரமம் இருந்தது. வீட்டில் தனியாக இருக்கும் முதியோர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார். அதன்படி, நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் கடந்த செப்டம்பர் மாதம்  முதியோர் பாதுகாப்புக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. முதல்கட்டமாக காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள முதியோர்கள் கணக்கெடுக்கப்பட்டனர்.
அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்திருக்கிறோம். அதன் பிறகு, நீலாங்கரைப் பகுதியில் முதியோர் தொடர்பான குற்றச்செயல்கள் நடக்கவில்லை. தனியாகக் குடியிருக்கும் முதியோர்களின் செல்போனில் போலீஸ் நிலைய எண்ணை ஸ்பீடு டயலாகப் பதிவு செய்து வைத்துள்ளோம். அவசரத் தேவை என்றால், அவர்கள் செல்போனில் இருந்து இரண்டாம் நம்பரை அழுத்தினால் போதும். அவர்களின் அழைப்பு எங்களுக்கு வந்து விடும். உடனடியாக அந்த வீட்டுக்கு  போலீஸார் சென்றுவிடுவார்கள்.
சில தினங்களுக்கு முன்பு, வீட்டில் தனியாக இருக்கும் முதியோரிடம் பணம் பறிக்கும் கும்பல் பற்றிய வீடியோ வாட்ஸ்அப்பில் வந்தது. அந்தக் கும்பல் பற்றிய விவரங்களை சேகரித்துவிட்டோம். விரைவில் அவர்களை கைதுசெய்வோம். ‘வீட்டுல யாரு இருக்கீங்க?’ என்று ஏதோ சொந்தக்காரங்க பேசுவதைப்போல பேசிட்டுத்தான் அந்தக் கும்பல் உள்ளே வர்றாங்க. அதனால் முதியவர்கள் வீட்டில் இருக்கும்போது, யார் அழைத்தாலும் கதவு லென்ஸ் வழியாகப் பார்த்துவிட்டுத்தான் கதவை திறக்க வேண்டும்” என்று சொன்னார்.
அனைத்து மக்களுக்கும் பாதுகாப்புத் தர​வேண்டியது காவல் துறையின் கடமை!
புகைப்படத்தில் அரசியல்வாதிகளுடன்...
நீலாங்கரை சம்பவம் குறித்து தமிழக போலீஸ் வட்டாரங்களில் விசாரித்தோம். “நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் முதியோருக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு போல சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் செய்யப்பட்டு உள்ளது. முதியோர் பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்டதற்காக நீலாங்கரை இன்ஸ்பெக்டர் பாஸ்கரனையும் அவரது டீமையும் கமிஷனர் ஜார்ஜ் பாராட்டி இருக்கிறார். திருப்பூரிலும் இந்தப் பாதுகாப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. முதியோருக்கு போலீஸ் தரப்பில் முழுப்பாதுகாப்பு கொடுக்கப்படுவதால் நன்கொடை என்ற பெயரில் புது டெக்னிக்கை கொள்ளையர்கள் பயன்படுத்தி இருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கிறது.

இந்தத் தகவல் எங்களுக்கு வந்ததும் விசாரித்ததில் நன்கொடை கேட்பவர்கள் பிரபலமான அநாதை இல்லங்களின் பெயர்களை குறிப்பிடுகிறார்கள். போலியான விசிட்டிங் கார்டையும் கொடுக்கிறார்கள். அனாதை இல்லங்களுக்கு வந்துள்ள அரசியல்வாதிகள், பிரபலங்கள் ஆல்பத்தையும் காட்டுகிறார்கள். அந்த ஆல்பத்தில் இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்களும் போஸ் கொடுக்கிறார்கள். செந்தமிழில் பேசும் அவர்கள், நுனி நாக்கு ஆங்கிலத்திலும்  பேசு​கிறார்கள். பணம் கொடுக்கவில்லை என்றால் மிரட்டு​கிறார்கள். நீலாங்கரையைப்போல வேறு எங்கும் இதுபோல நடந்துள்ளதா என்றும் விசாரிக்கிறோம்” என்றனர்.


No comments:

Post a Comment