பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனிடம், சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று (1ஆம் தேதி) 8 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
தயாநிதி மாறன் மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சராக இருந்த போது, பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு சொந்தமான 323 தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக தனது சகோதரரின் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து, 2013ஆம் ஆண்டில் தயாநிதி மாறன், பி.எஸ்.என்.எல். முன்னாள் பொது மேலாளர் பிரம்மநாதன் மற்றும் தயாநிதி மாறனின் சகோதரர் தொலைக்காட்சி நிறுவன நிர்வாகிகள் உள்ளிட்டோர் மீது டெல்லி சி.பி.ஐ. போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக தயாநிதி மாறனின் முன்னாள் கூடுதல் தனிச் செயலாளர் கவுதமன், அவரது சகோதரர் டி.வி.யின் தலைமை தொழில்நுட்ப அலுவலர் கண்ணன், எலெக்ட்ரீஷியன் ரவி ஆகியோரை சி.பி.ஐ. போலீசார் கடந்த ஜனவரி மாதம் கைது செய்தனர்.
இந்நிலையில், தயாநிதி மாறனை ஜூலை 1ஆம் தேதி (இன்று) நேரில் ஆஜராகுமாறு சி.பி.ஐ. உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, அவர் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. அப்போது, சி.பி.ஐ. நீதிமன்றத்தில் பிணைத் தொகை செலுத்தி ஜாமீன் பெற்றுக்கொள்ள, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, தயாநிதி மாறன், சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜராகி, பிணைத் தொகை செலுத்தி முன்ஜாமீன் பெற்றார்.
இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு டெல்லியிலுள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் தயாநிதிமாறன் ஆஜரானார். அவரிடம், சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
சுமார் 8 மணி நேரம் நடந்த இந்த விசாரணையின்போது, தயாநிதிமாறனின் 65 கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், இதில் பெரும்பாலான கேள்விகளுக்கு, தெரியவில்லை எனவும், நினைவில் இல்லை என்றும் தயாநிதிமாறன் கூறியதாகவும் சிபிஐ வட்டாரங்களை மேற்கோள் காட்டி தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:
Post a Comment