சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

4 Jul 2015

64 பந்துகளில் 158 ரன்கள் குவித்து சொந்த சாதனையை சமன் செய்த மெக்கல்லம்!

நாட்வெஸ்ட் தொடரில் நியூசிலாந்தின் பிரன்டென் மெக்கல்லம் 11 சிக்சர்கள் 11 பவுண்டரிகளுடன் 158 ரன்கள் விளாசி தனது சொந்த சாதனையை சமன் செய்துள்ளார்.

நாட்வெஸ்ட் டி20 போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் டெர்பிஷயர் ஃபால்கன்ஸ் அணி பிர்மிங்ஹாம் பியர்ஸ் அணியுடன் மோதியது. இந்த போட்டியில் பிர்மிங்ஹாம் அணி வீரர் பிரன்டென் மெக்கல்லம் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். 64 பந்துகளை மட்டுமே சந்தித்த மெக்கல்லம் 158 ரன்களை அடித்தார். இதில் 42 பந்துகளில்  மெக்கல்லம் சதத்தை எட்டியது குறிப்பிடத்தக்கது. 

இதில் 11 சிக்சர்களும் 13 பவுண்டரிகளும் அடங்கும். மெக்கல்லமின் அதிரடியால் பிர்மிங்ஹாம் அணி 20 ஓவர்களில் 242 ரன்களை குவித்தது. அடுத்து விளையாடிய டெர்பிஷயர் அணி 182 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனதால், பிர்மிங்ஹாம் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இதற்கு முன் கடந்த 2008ஆம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி மெக்கல்லம் 73 பந்துகளில் 158 ரன்களை குவித்தார். தற்போது அதை விட குறைவாக 64 பந்துகளில் தனது முந்தைய சாதனையை மெக்கல்லம் எட்டியுள்ளார்.



No comments:

Post a Comment