சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

6 Apr 2015

முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ண மூர்த்தி கைது!


வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை வேளாண் அதிகாரி முத்துகுமாரசாமி கடந்த பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். வேளாண் துறையில் 7 டிரைவர்களை பணி நியமனம் செய்ததில், அரசியல் பிரமுகர்களின் நெருக்கடியால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.

இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது. நெல்லை ரயில்வே போலீசார் விசாரணை நடத்திய இந்த வழக்கு, அதன்பின் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இந்த சம்பவத்தின் பின்னணியில் சில ஆளும் கட்சிப் பிரமுகர்கள் இருப்பது சி.பி.சி.ஐ.டி விசாரணையில் தெரியவந்தது. இதை தொடர்ந்து,  அக்ரி.கிருஷ்ணமூர்த்தியின் அமைச்சர் மற்றும் கட்சிப் பொறுப்புகள் பறிக்கப்பட்டன.
மேலும், எதிர்க்கட்சிகள்  வேளாண் அதிகாரி தற்கொலைக்கு காரணம் அக்ரி.கிருஷ்ண மூர்த்தி தான் என்றும் அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட்டம் நடத்தி வந்தன.
இந்நிலையில், நேற்று (சனிக் கிழமை) இரவு எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி விசாரணைக்காக ஆஜரானார். அவரிடம் இரவு முழுக்க   தீவிர விசாரணை நடைபெற்றது. இதையடுத்து இன்று (ஞாயிறு) காலை 5.00 மணியளவில் அவரை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்து நெல்லைக்கு அழைத்துச்  சென்றனர்.
அவருடன் வேளாண் துறை பொறியாளர் செந்தில் என்பவரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து, நெல்லை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.  மேலும், இந்த வழக்கு தொடர்பாக நெல்லையைச்  சேர்ந்த 3 முக்கிய புள்ளிகள் இன்று மாலைக்குள் கைதாகக்கூடும் என்றும் நம்பதகுந்த வட்டாரங்களில் இருந்து  தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், முத்து குமாரசாமியை மிரட்டியவர்கள் யார்–யார்? என்பதை சி.பி.சி.ஐ.டி. போலீசார் பட்டியல் சேகரித்து வைத்துள்ளனர். அதில் வேளாண் துறையில் பணியாற்றும் மேலும் சில முக்கிய பிரமுகர்களும், அரசியல் பிரமுகர்களும் இடம் பெற்று இருப்பதாக தெரிகிறது. அடுத்தடுத்து அவர்களும் கைது செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.No comments:

Post a Comment