சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

27 Apr 2015

மேக்கேதாட்டு பிரச்னை: எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் விஜயகாந்த்!

மேக்கேதாட்டு அணை பிரச்னை தொடர்பாக தமிழகத்திலுள்ள எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து, பிரதமர் நரேந்திர மோடியை நாளை சந்திக்கவிருக்கிறார் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்.
இன்று தி.மு.க. தலைவர் கருணாநிதியை, கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சந்தித்து பேசினார்.இந்த சந்திப்பின்போது, தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், தே.மு.தி.க. பொருளாளர் சுதீஷ், பார்த்தசாரதி எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் இருந்தனர்.

விஜயகாந்த் பேட்டி
இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் விஜயகாந்த் கூறுகையில், ''மேக்கேதாட்டு அணை, நில எடுப்பு மசோதா, செம்மரக் கட்டை விவகாரம், தமிழக மீனவர்கள், முல்லைப் பெரியாறு பிரச்னை ஆகிய 5 பிரச்னைகளுக்காக தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்தேன். மேக்கேதாட்டு விவகாரத்தில் இணைந்து செயல்பட கருணாநிதி உறுதியளித்துள்ளார்.
இந்த பிரச்னை தொடர்பாக நாளை பிற்பகல் 12.30 மணிக்கு பிரதமரையும் சந்திக்க உள்ளளேன்'' என்றார்.
ஸ்டாலின் பேட்டி

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் விஜயகாந்தின் முயற்சியை கருணாநிதி பாராட்டினார். மேக்கேதாட்டு அணை பிரச்னை தொடர்பாக பிரதமரை விஜயகாந்த் சந்திக்கும்போது தி.மு.க. சார்பில் கனிமொழி, திருச்சி சிவா ஆகியோர் உடன் செல்வார்கள்.

இந்த பிரச்னையை மத்திய அரசிடம் கொண்டு செல்ல வேண்டிய அ.தி.மு.க. அரசு செயலற்றதாக உள்ளது'' என்றார்.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுடன் சந்திப்பு

இதையடுத்து, சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனையும், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பிலும் மேக்கேதாட்டு அணை பிரச்னை உள்ளிட்ட 5 பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.

இந்த சந்திப்பின்போது, ப.சிதம்பரம், திருநாவுக்கரசு, குஷ்பு, தே.மு.தி.க. பொருளாளர் சுதீஷ், பார்த்தசாரதி எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் இருந்தனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ''தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிரதமரை சந்திக்கும்போது, காங்கிரஸ் பிரதிநிதி ஒருவரும் அவருடன் செல்வார்'' என்றார்.
தமிழிசை சவுந்திரராஜனுடன் சந்திப்பு

இதைத்தொடர்ந்து, சென்னை, தி.நகரிலுள்ள பா.ஜ.க. அலுவலகமான கமலாலயத்துக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சென்றார். அங்கு தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜனை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பிலும் மேக்கேதாட்டு அணை பிரச்னை உள்ளிட்ட 5 பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த சந்திப்பு குறித்த தமிழிசை சவுந்திரராஜன் கூறுகையில், ''மேக்கேதாட்டு அணை பிரச்னையில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றாக திரட்டும் விஜயகாந்தின் முயற்சி பாராட்டுக்குரியது. மேக்கேதாட்டு விவகாரம் தொடர்பாக விஜயகாந்துடன், பா.ஜ.க. பிரதிநிதியும் பிரதமரை சந்தித்து பேசுவார். தமிழக மக்கள் நலனுக்காக தமிழக பாரதிய ஜனதா எப்போதும் துணை நிற்கும்'' என்றார்.
ஜி.கே.வாசன்

இதையடுத்து, சென்னை ஆழ்வார்பேட்டையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை, விஜயகாந்த் சந்தித்து மேக்கேதாட்டு அணை பிரச்னை குறித்து ஆலோசனை நடத்தினார்.

இதன் பின்னர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''இது மக்கள் பிரச்னை என்பதால், எதிர்க்கட்சி தலைவர்களிடம் இருந்து அழைப்பு வந்திருப்பதால், பிரதமரை சந்திக்க செல்லும் விஜயகாந்துடன், தமிழ் மாநில கட்சியின் பிரதிநிதியையும் அனுப்ப முடிவு செய்திருக்கிறோம். அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்'' என்றார்.

திருமாவளவன்

இதேபோல், சென்னை அசோக்நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் திருமாவளவனுடன், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார்.

வைகோவுடன் சந்திப்பு

இதேபோல், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவையும், விஜயகாந்த் சந்தித்து பேசினார். அப்போது பிரதமரை சந்திக்க வருமாறும் விஜயகாந்த் அழைப்பு விடுத்தார்.

பாரிவேந்தருடன் சந்திப்பு

இதேபோல், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் டாக்டர் பாரிவேந்தரையும் விஜயகாந்த் சந்தித்து மேக்கேதாட்டு அணை பிரச்னை தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
முன்னதாக, தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இதையடுத்து, தமிழக அரசியல் கட்சிகள் இப்போதே கூட்டணி அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், கருணாநிதியை சந்தித்த விஜயகாந்த், வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என செய்திகள் வெளியாகி இருந்தது.



No comments:

Post a Comment