குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவர் என்று திருவிளையாடல் திரைப்பட தருமி சொல்வது போல, வீடியோ கேம் ஆடியே கைநிறைய சம்பாதிக்கும் வாலிபர் பியூடைபை எனப்படும் பெலிக்ச் ஜெல்பெர்கை உங்களுக்குத் தெரியுமா? அதேபோல மேக்கப் ஆலோசனை சொல்லியே இணைய மில்லியரான மிச்சிலி பானை உங்களுக்குத் தெரியுமா? ஆடைகளின் பேஷனை சுட்டிக்காட்டியே இளசுகளின் மத்தியில் செல்வாக்கு பெற்ற இளம் பெண் மோட்டாவை தெரியுமா?
இவர்கள் எல்லோருமே இணைய நட்சத்திரங்கள். யூடியூப் உருவாக்கிய நட்சத்திரங்கள்! புகழும், பணமும், ஆர்வம், திறமையும் உள்ள எவருக்கும் சாத்தியம் என்பதை உணர்ந்து, சாமானியர்கள் பலரை இணைய நட்சத்திரமாக உருவாக்கி, செல்வாக்கு பெற வைத்த யூடியூப்பிற்கு பத்து வயதாகிறது.
இ-மெயிலில் துவங்கி இன்றைய பேஸ்புக், டிவிட்டர் வரையான சமூக வலைதளங்கள் பல இணைய நட்சத்திரங்களை உருவாக்கி உள்ளன என்றாலும், அதிக நட்சத்திரங்களை உருவாக்கிய பெருமை யூடியூப்புக்கு தான் சேரும்.

இணைய கேலிக்கு ஆளாகி, உலகம் முழுவதும் அறியப்பட்ட ஸ்டார்வார்ஸ்கிட்டில் துவங்கி, கங்கனம் ஸ்டைல் பாடல் புகழ் கொரிய பாடகர் சை வரை பெரிய பட்டியலே இருக்கிறது. இணைய பிரபலங்கள் என விக்கிபீடியாவில் தேடினால் வரும் பட்டியலில் எண்ணிப்பார்த்தாலே அதில் யூடியூப் நாயகர்கள் தான் அதிகம் என்பது தெரிய வந்துவிடும். இவ்வளவு ஏன் நம்மூரின் சாம் ஆண்டசர்சனும், வில்பர் சற்குணராஜும், பக்கத்து மாநிலத்தின் சந்தோஷ் பண்டிட்டும் யூடியூப்பின் நட்சத்திரங்கள் தான்.
இவர்களில் பலர் வெறும் 15 நிமிட புகழை மட்டும் தேடிக்கொள்ளவில்லை. அந்த புகழை அடிப்படையாக வைத்துக்கொண்டு தங்களுக்கான எதிர்கால தொழில் வாழ்க்கையையும் வெற்றிகரமாக உருவாக்கி கொண்டவர்கள். இவர்களின் பிரதிநிதிகள் தான் பிலிக்சும், மோட்டாவும், மிச்சிலியும்!
வைரல் வீடியோக்களின் இருப்பிடமாகவும், பிறப்பிடமாகவும் இருக்கும் யூடியூப் கடந்து வந்த பாதையை கொஞ்சம் திரும்பி பார்ப்போமா?
இணையத்தில் வீடியோ என்பது ஆடம்பர சங்கதி என கருதப்பட்ட காலத்தில் 2005 ஏப்ரலில் யூடியூப் உதயமானது. அதாவது வீடியோ கோப்புகளுக்கு எல்லாம் இணைய வேகமும் சர்வர் பரப்பும் தாங்காது என கருதப்பட்ட காலத்தில் துணிந்து வீடியோ பகிர்வு சேவையாக யூடியூப் அறிமுகமானது.
ஜாவித் கரீம் எனும் வாலிபர் தான் அதில் முதல் வீடியோவை பதிவேற்றினார். அமெரிக்காவின் சாண்டியாகோ விலங்கியல் பூங்காவில் யானையை பார்த்து ரசிக்கும் 18 நொடி வீடியோ அது. யானையின் தும்பிக்கை நீளமாக இருக்கிறது எனும் வாசகம் தவிர அதில் வேறு இல்லை. வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் யூடியூப் வீடியோக்களின் தரத்துடன் ஒப்பிட்டால் அந்த வீடியோவை அலுப்பூட்டக்கூடியது என்று தான் சொல்ல வேண்டும். ஆனாலும், என்ன அது தான் வீடியோ பகிர்வு சேவையாக யூடியூப்பை துவக்கி வைத்த வரலாற்று சிறப்புமிக்க வீடியோ!
கரீம் வேறு யாருமல்ல. யூடியூப் நிறுவனர்களில் ஒருவர். அவருடன் சேர்ந்து சாட் ஹர்லி மற்றும் ஸ்டீவ் சென் ஆகிய இருவரும் தான் யூடியூப்பை துவக்கினர்.
அடுத்த ஆண்டே தேடியந்திர நிறுவனமான கூகுளால் வாங்கப்பட்டுவிட்ட யூடியூப், அதன் பிறகு இணையத்தில் வீடியோவுக்கான முகவரியானது. இப்போதோ யூடியூப் மாதந்தோறும் 100 கோடி தனி பார்வையாளர்களை ஈர்க்கிறது. ஹாலிவுட்டுடன் போட்டி போட்டுக்கொண்டு பிரபலங்களை உருவாக்கி வியக்க வைக்கிறது.
இந்த பிரபலங்கள் யூடியூப்பில் தனி சேனல் வைத்துக்கொண்டு மினி சாம்பிராஜயம் நடத்திக்கொண்டிருக்கின்றனர்.

யூடியூப் இப்படி இணைய நட்சத்திரங்களை உருவாக்கும் பட்டறையாக உருவானது எப்படி? யூடியூப் என்றதும் வைரலாக பரவும் வீடியோக்கள் தான் நினைவுக்கு வரும் என்றாலும், அதில் இருப்பது வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமெடி வீடியோக்கள் மட்டும் அல்ல: சாமானியர்களின் திறமைகளை வெளிச்சம் போட்டு காட்டும் பலவித வீடியோக்களுக்கான இருப்பிடமாக யூடியூப் இருக்கிறது.
திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தவர்கள், அங்கும் இங்கும் அல்லாடாமல், நிறுவனங்களின் கடைக்கண் பார்வைக்கு காத்திருக்காமல், தங்களுக்கான மேடையாக யூடியூப்பை கருதி திறமையை வெளிப்படுத்திக்கொண்டனர். இந்த சில நிமிட வீடியோக்கள் தான் பலருக்கான அறிமுக சீட்டாக அமைந்தன. அலுவலக அலுப்புக்கு நடுவே இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்தவர்கள் இந்த வீடியோக்களில் தடுக்கி விழ நேர்ந்தால் அட நன்றாக இருக்கிறதே என சொக்கிப்போய் அப்படியே அதை நண்பர்களுக்கு பார்வர்டு செய்தனர். அதன் பிறகு அந்த வீடியோ உலகம் சுற்றும் வீடியோவாகி லட்சக்கணாக்கானோரின் கவனத்தை கவர்ந்து வைரலாகி விடுகிறது. வைரலாவது என்றால் இணையத்தில் ஹிட்டாவது என்று பொருள்.
இப்படி தான் யூடியூப் ரெபேகா பிளாக்கையும், ஜாண்டேவையும் பாடகர்களாக புகழ்பெற வைத்தது. அமெரிக்க சிறுவன் ராபி நோவக்கை கிட் பிரெசிடெண்டாக புகழ் பெற வைத்தது. அமெரிக்காவில் வசித்த நியூசிலாந்து இளம்பெண் ஜெஸிகா ரோசை லோன்லி கேர்ளாக புகழ் பெற வைத்தது. அமெரிக்காவின் சல்மான்கானை இணைய பல்கலைக்கழகமான கான் அகாடமியை உருவாக்க வைத்தது. அழகை பார்க்காதே, குரல் வளத்தை கேள் என சூசன் பாயலை கொண்டாட வைத்தது. இதனிடையே பல் வலியால் துடித்த டேவிட்டும் இணைய பிரபலமானார். கோலிவுட் படங்களை விமர்சித்து விசிலடிக்க வைத்த கனடாவின் ரிவ்யூ ராஜாவும் நட்சத்திரமானார்.
பெளதீகம் மீது காதல் வர வைத்த பேராசிரியர் வாலடர் லெவின், கடைசி உரை மூலம் உலகை அன்பால் நெகிழ வைத்த பேராசிரியர் ராண்டி பாஷ் என யூடியூப் அடையாளம் காட்டிய நட்சத்திரங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
யூடியூப் வரலாற்றை திரும்பி பார்க்கும் போது, வீடியோவுக்களை சேமிக்கும் இடமாகவே அது முதலில் பிரபலமானதை புரிந்து கொள்ளலாம். அந்த காலத்தில் வீடியோக்களை எடுப்பது சுலபமாக இருந்த அளவுக்கு அவற்றை வைத்துக்கொள்வது எளிதாக இருக்கவில்லை. ஆக, யூடியூப் அறிமுகமானபோது வீடியோ பிரியர்கள் தங்கள் வீடியோக்களை எல்லாம் சேமித்து வைப்பதற்கான நல்ல வசதியாகவே அதை கருதினர். அதன் பிறகு மெல்ல யூடியூப் மூலம் வீடியோக்களை பகிர்வது பிரபலமானது.
யூடியூப் தளம் பிரபலமான பிறகு அது இணைய டிவி போல கூட கருதப்பட்டது. ஆனாலும் கூட, யூடியூப் நிர்வாகம் யூடியூப்பில் எதை பார்க்க வேண்டும் என்பதை தீர்மானிக்க முற்படாமல், விரும்பியதை பார்த்துக்கொள்ளும் உரிமையை இணையவாசிகளிடமே வழங்கியது. விரும்பியதை பார்த்து ரசித்ததை பகிரும் வாய்ப்பே யூடியூப்பை மேலும் செல்வாக்கு பெற வைத்தது. இந்த ஜனநாயக குணமே யூடியூப்பின் ஆதார அம்சமாகி சாமானியர்களை இணைய நட்சத்திரங்களாக்கி கொண்டிருக்கிறது.
யூடியூப்பின் முதல் வீடியோ: https://www.youtube.com/watch?v=jNQXAC9IVRw

No comments:
Post a Comment