சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

25 Apr 2015

வெளிநாடுவாழ் இந்தியர்கள் அனுப்பும் பணம்: இந்தியா முதலிடம்

எல்லா நாட்டு மக்களின் மனதிலும் தன் நாடில்லாமல், அயல்நாட்டுக்குச் சென்று வருமானம் ஈட்ட வேண்டும் என்கிற மோகம் இருக்கத்தான் செய்கிறது. அதுவும் இந்தியாவிலிருந்து வேலைக்காக வெளிநாடுகளுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இப்படி வேலைக்காக வெளிநாட்டுக்குச் சென்று, அங்கு வாங்கும் சம்பளத்தை தன் தாய்நாட்டுக்கு அனுப்பி வருகிறார்கள். இப்படியாக எந்தெந்த நாட்டுக்கு அதிகமாக பணம் அனுப்பப் படுகிறது என்று சமீபத்திய ஆய்வறிக்கையில் வெளியாகியுள்ளது. இதில் இந்தியா முதலிடத்தில் இருப்பது நாம் எல்லோரும் பெருமை கொள்ள வேண்டிய விஷயமாகும். ஏனெனில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் அனுப்பும் பணத்தால், தனிமனித பொருளாதாரம் உயரும்போது நாட்டின் பொருளாதாரமும் உயரும் என்கிற அடிப்படையில் பல்வேறு சாத்தியக் கூறுகள் இருக்கின்றன.
 


கடந்த 2014-ம் ஆண்டில் மட்டும் மற்ற நாடுகளில் வாழும் இந்தியர்கள் அனுப்பிய தொகை 70.39 பில்லியன் டாலர்கள் (24.4.15-ம் தேதி நிலவரப்படி ஒரு பில்லியன் டாலர் என்பது 6,300 கோடி ரூபாய்). இதற்கு அடுத்துள்ள சீனா, வெளிநாட்டு வாழ் சீனர்களிடமிருந்து 64.14 பில்லிடன் டாலர்களை பெற்றிருக்கிறது.மூன்று, நான்கு மற்றும் ஐந்தாவது இடங்கள் முறையே பிலிபைன்ஸ் (28 பில்லியன் டாலர்), மெக்ஸிகோ (25 பில்லியன் டாலர்) மற்றும் நைஜீரியா (21 பில்லியன் டாலர்) ஆகிய நாட்டுமக்கள் தன் தாய்நாட்டுக்கு பணத்தை அனுப்பியிருக்கிறார்கள். 
 
இந்த ஆய்வறிக்கையில் பெரும்பாலானவர்கள் எந்த நாட்டிலிருந்து சம்பாதிக்கிறார்கள் என்கிற விவரமும் குறிப்பிட்டிருக்கிறது. அந்த பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்திலும், அதற்கு அடுத்தடுத்த இடத்தில் சவுதி அரேபியா, ஜெர்மனி, ரஷ்யா மற்றும் ஐக்கிய அரபுநாடுகளும் இடம் பெற்றிருக்கின்றன. 



No comments:

Post a Comment