மீடியாவால்தான் தோனி கிரிக்கெட்டின் கடவுளாக சித்தரிக்கப்படுகிறார்' என்று கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங்கின் தந்தை யோகராஜ்சிங், இந்திய அணியின் கேப்டன் தோனி குறித்து மீண்டும் விமர்சித்துள்ளார்.
இது குறித்து ஹிந்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு யோகராஜ்சிங் அளித்துள்ள பேட்டியில், '' தோனி ஒன்றும் பெரிய வீரர் கிடையாது. தோனியை போற்றி புகழும் மீடியாக்காரர்களுடன் அவர் கூடி குலாவுகிறார். இதே மீடியாவில் நான் இருந்தால் தோனியின் கதையே வேறு. அவரை நான் அடித்தே விடுவேன்.
தோனி ஒரு சர்வாதிகாரி. ராவணனின் கதை முடிந்தது போல ஒருநாள் தோனியின் கதையும் முடிவடையும். ஆனால் தோனி ராவணனுக்கும் மேல். பொறாமையில் இது கூறப்படுவதாக தெரியும். ஆனால் மற்ற கிரிக்கெட் வீரர்கள் சொல்வதை வைத்துதான் நான் சொல்கிறேன். தோனி ஒருநாள் காசின்றி பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்.
2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில், இலங்கை அணிக்கு எதிராக எனது மகன்தான் 4வது வீரராக களமிறங்க சென்றான். அதை தடுத்த தோனி களமிறங்கி ஒரு ஹீரோவாக தன்னை காட்டிக்கொண்டார். தன்னை ஒரு மிகப்பெரிய ஜாம்பவனாக கருதும் தோனி, நடந்து முடிந்த உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஏன் வெற்றி தேடி தர முடியவில்லை?'' என்று கேள்வி எழுப்பினார்.

உலகக் கோப்பை போட்டிக்கு முன்னதாக யுவராஜ்சிங் இந்திய அணியில் இடம் பெறாததற்கு கேப்டன் தோனியே காரணம் என்று யோகராஜ்சிங் குற்றம்சாட்டியிருந்தது நினைவு கூறத்தக்கது.
No comments:
Post a Comment