சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

25 Apr 2015

சாம்பார் சாதம் சாப்பிடும் கணவரை தேடும் ஸ்ருதிஹாசன் - சிறப்பு பேட்டி

ன் வாழ்க்கையில் சாம்பார் சாதம் இதுவரை பிடித்த உணவாக இருந்து இருக்கிறது. எனக்கு கணவராக வருகிறவர் நான் விரும்பி சாப்பிடும் சாம்பார் சாதம் போல் இருக்க வேண்டும் என நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.
'கப்பார் இஸ்பேக்' என்ற இந்தி படத்தில் அக் ஷய்குமார் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. தமிழில் விஜய் ஜோடியாக புலி படத்தில் நடித்து வரும் அவர், சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் அஜீத் ஜோடியாகவும் நடிக்க உள்ளார். தெலுங்கில் ஒரு படம் கைவசம் உள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் பிசியான நடிகையான ஸ்ருதிஹாசன், திருமணம் பற்றி முடிவு எடுத்தால் சினிமாவில் இருப்பவரை தேர்வு செய்வேன் என்றும், திரையுலகில் இருப்பவரை மணப்பது புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டி:
எப்படிப்பட்ட வரை திருமணம் செய்து கொள்வீர்கள்?
திருமணம் பற்றி நான் சிந்திக்கவில்லை. திருமணம் பற்றி சில நம்பிக்கையும் இருக்கிறது. கணவராக வருகிறவர் என் ஆத்மாவை திருடுபவராக இருக்க வேண்டும். என் மனம் முழுக்க அவர் நிறைய வேண்டும். எல்லா விஷயங்கள் பற்றியும் அவரோடு நான் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஆனாலும் திருமணம் பற்றி முடிவு எடுத்துக் கொள்ள எனக்கு வாய்ப்பு கொடுத்தால் திருமணமே செய்து கொள்வது இல்லை என்ற முடிவை எடுப்பேன். திருமணம் என்பது சிக்கலானது. இதற்காக திருமண முறைக்கு நான் எதிர்ப்பு என எடுத்துக் கொள்ள கூடாது. என் நண்பர்கள் சிலர் அழகான திருமண வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். என்னை பொருத்தவரை திருமணம் என்பது கூடையில் இருக்கும் பூக்கள் போன்றது என் மனதை கேட்டால் அந்த பூக்கள் வேண்டாம். கூடையில் இருக்கும் உலர் பழங்கள் மற்றும் நட்ஸ்களை எடுத்துக் கொள் என்றுதான் சொல்லும்.
திருமணத்தை ஏன் சிக்கலானதாக பார்க்கிறீர்கள்?
என் கவனம் எல்லாம் இப்போது சினிமாவில்தான் இருக்கிறது. அதில் இருந்து சிந்தனையை திசை திருப்பும் எண்ணம் இல்லை. என் வாழ்க்கையில் சில நல்ல விஷயங்கள் இருக்கின்றன. சில நல்ல நண்பர்களும் இருக்கிறார்கள். இருபது வயதை தாண்டும் என் வாழ்க்கையில் சாம்பார் சாதம் இதுவரை பிடித்த உணவாக இருந்து இருக்கிறது. எனக்கு கணவராக வருகிறவர் நான் விரும்பி சாப்பிடும் சாம்பார் சாதம் போல் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பிரச்னைகள்தான் ஏற்படும். எனவே அப்படி பிடித்தமானவர் கணவராக அமையாவிட்டால் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்.
சினிமாவில் இருப்பவரை மணப்பீர்களா?
ஆமாம். திருமணம் பற்றி முடிவு எடுத்தால் சினிமாவில் இருப்பவரை தேர்வு செய்வேன். அதில் சில பிரச்னைகள் இருந்தாலும் நிறைய நன்மைகள் இருக்கிறது. என் தாய், தந்தை சினிமாவில் இருந்து வந்தவர்கள். எனவே திரையுலகில் இருப்பவரை மணப்பது புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்.

அப்படிப்பட்டவரை திரையுலகில் சந்தித்து விட்டீர்களா?
இதுவரை சந்திக்க வில்லை. உங்கள் தங்கை அக் ஷரா நடிக்க வந்துள்ளாரே? அவருக்கு அறிவுரை சொல்வீர்களா? சொல்ல மாட்டேன். என் பெற்றோர் சினிமாவில் நாங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று ஆலோசனை எதையும் சொன்னது இல்லை. அக் ஷரா புத்திசாலி. அவரது வழியை அவரே தீர்மானித்துக் கொள்வார் என்றார் ஸ்ருதிஹாசன்.



No comments:

Post a Comment