சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

21 Apr 2015

மாற்று வீரராக களமிறங்கி அங்கித் உயிரை விட்ட பரிதாபம் !

கொல்கத்தாவில் நடந்த கிரிக்கெட் போட்டியின் போது கேட்ச் பிடிப்பதில் சக வீரருடன் மோதி உயிரை விட்ட அங்கித் கேஷ்ரி மாற்று வீரராக பீல்டிங் செய்ய இறக்கப்பட்டுள்ளார்.

கொல்கத்தாவில்  பெங்கால் மற்றும் பவானிபூர் அணிகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டியின் போது கேட்ச் பிடிக்கும் முயற்சியில் பெங்கால் அணியை சேர்ந்த அங்கித் கேஷ்ரி மற்றும் சௌரப் மாண்டல் ஆகியோர் ஒருவர் மீது ஒருவர் மோதி கீழே விழுந்தனர்.. இதில் அங்கித் கேஷ்ரியின் இதயம் செயலிழந்து துடிப்பதை நிறுத்திக் கொண்டது. சக வீரரான சிவ் சாகர் சிங் என்பவர் அங்கித்தின் இதயப் பகுதியை அழுத்திக் கொடுத்தும் வாயுடன் வாய் வைத்து மூச்சை செலுத்தியும் அந்த நேரத்தில் சில அவரச கால சிகிச்சை செய்துள்ளார். இதையடுத்து, அவர் மீண்டும் மூச்சு விடத் தொடங்கியுள்ளார்.
உடனே மைதானத்தில் இருந்த ஆம்புலன்ஸ் மூலம் முதலில் ஏ.எம்.ஆர். ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சி.டி.ஸ்கேன் எம்.ஆர்.ஐ டெஸ்ட் எடுத்து பார்க்கப்பட்டுள்ளது. இதில் மூளை வீங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால்தான் அவரது இதயஇயக்கம் பாதிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்தது. ஆனால் இந்த சமயத்தில் மருத்துவமனையில் இருந்த அங்கித்தின் உறவினர்கள் அவரை வேறு மருத்துவமனைக்கு மாற்ற வேண்டுமென்று வற்புறுத்தியுள்ளனர்.

பின்னர் அங்கித், நைட்டிங்கேல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்குதான் கடந்த இரு நாட்களாக அவருக்கு சிசிக்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் அங்கித்துக்கு நேற்று காலை மாரடைப்பும் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவர்களால் அவரது உயிரை காப்பாற்ற முடியாமல் போனது. 

இதற்கிடையே அங்கித்துக்கு தவறாக சிகிச்சை அளிக்கப்பட்டதே அவரது இறப்புக்கு காரணம் என்று அங்கித்தின் தந்தை ராஜ்குமார் மற்றும் அவரது சகோதரர் ரோகன் ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளனர். 


இந்த போட்டியை பொறுத்தவரை அங்கித் மாற்று ஆட்டக்காராகவே களமிறங்கியுள்ளார். ஈஸ்ட் பெங்கால் அணியை சேர்ந்த ஆல்ரவுண்டர் ஆர்னாப் நந்திக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக களமிறங்கிய அங்கித் பலியானது சக வீரர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அங்கித்தின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ,சச்சின்,மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். நேற்று நடந்த டெல்லி- கொல்கத்தா அணிகளுக்கிடையேயான ஐ.பி.எல். போட்டியின் போது அங்கித்தின் மறைவுக்கு 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.


No comments:

Post a Comment