சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

7 Apr 2015

பழைய டயரிலும் பணம் பார்க்கும் பெல்ட் சிவா!

பெருகி வரும் வேலையில்லா திண்டாட்டம் மக்களை பெரிதும் பாதித்து வருகிறது. அதே நேரம், பன்னாட்டு நிறுவனங்கள் இதை பயன்படுத்தி தனது ராஜாங்கத்தை நமது நாட்டில் நிலைநாட்டி வருகிறது. இதன் பயனாக இன்று பல வெளிநாட்டு கம்பெனிகள், இந்திய மக்களை தனக்காக பயன்படுத்தி வருமானம் பார்த்து வருகிறது.
நம் நாட்டு மக்கள், வெளிநாட்டு மோகத்தால்  தங்களது இயல்பு வாழ்க்கையில் வெளிமூலாம் பூசப்பட்டு வாழ்ந்து வருகின்றனர். இதன் காரணமாக பலர் தங்களது குடும்பத் தொழிலை மறந்து மற்ற தொழில்களுக்கு தாவி செல்கின்றனர்.

இந்நிலையில்,  தனது குடும்பத் தொழிலை விட்டுவிடாமல் அதை வேறுவிதமாக 'ப்ரமோட்' செய்து தன் நிலையில் நிற்கிறார் மதுரையை சேர்ந்த சிவா. இவரை சிவா என்று கூறினால் யாருக்கும் அடையாளம் தெரியாது. ஆனால், பெல்ட் சிவா என்று சொன்னால் மதுரை வாசிகள் அனைவருக்கும் அடையாளம் தெரியும். அந்தளவுக்கு பெல்ட் அவரது அடையாளத்தை மாற்றி இருக்கிறது.

சிவாவின் 'பெல்ட்' புகழை அறிந்து அவரை நாம் பார்க்கச் சென்றபோது, அவர் மும்முரமாக பெல்ட் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தார். டயர்களின் மூலம் பெல்டுகளை தயாரித்து கொண்டிருந்த சிவா தனது வேலைக்கு நடுவே நம்மிடம் பேசினார்.
" என் அப்பா, தாத்தா காலத்துலேர்ந்து எங்களுக்கு தோல் செருப்பு செய்யும் தொழில்தான். இது எங்க பரம்பரை தொழில்.
இப்ப சமீபகாலமா வெளிநாட்டு மோகத்தால நாங்க செய்யுற தோல் செருப்பை எல்லாம் யாரும் வாங்க தயாரா இல்லை. அதனால வயித்து பொழப்புக்கு என் அப்பா இந்த தொழிலை விட்டுட்டு கூலி வேலை, கட்டடங்களுக்கு வெள்ளை அடிக்கறதுனு மத்த வேலைகளுக்கு போக ஆரம்பிச்சுட்டார். ஆனா நான், எங்க பரம்பரை தொழிலைவிடக் கூடாதுன்னு உறுதியா இருந்தேன். ஆரம்பத்துல, என் குடும்பத்துல எல்லோரும் திட்டி, வருமானத்துக்கு வழிய பாருன்னு சொன்னாங்க. ஆனால் நான் இந்த தொழிலைவிடக் கூடாதுன்னு வெறியோட இருந்தேன்.

என் நண்பர் ஒருவர் சைக்கிள் கடை வெச்சிருக்கார். அவர், உபயோகம் இல்லாம தூக்கிபோட வச்சிருந்த பழைய டயர்களை நான் பார்த்தேன். ரப்பரான அதில் ஏன் ஏதாவது ஒரு தொழில் தொடங்கக் கூடாதுன்னு தோனிச்சு. உடனே என் நண்பனிடமிருந்து அந்த டயர்களை வாங்கி அதில் பெல்ட் செஞ்சேன். மதுரை பள்ளியில் படிக்கும் என் பையன், நான் டயரில் செஞ்ச பெல்ட்டை போட்டுக்கிட்டுதான் பள்ளிக்கு போவான்.

அது புதுமையா இருந்ததால, அவனோட சக மாணவர்கள், ஆசிரியர்கள்  என பலரும் விசாரித்து வாங்க ஆரம்பிச்சாங்க. இது எங்க குலத் தொழிலை மீண்டும் உயிர்பெறச் செய்தது. இதையே நான் தொழிலாக ஆரம்பிச்சு என் வியாபாரத்தை தொடங்கினேன். முதலில், மதுரை தியாகராஜா பொறியியல் மாணவர்கள் தான் எனது டயர் பெல்ட்டுகளை வாங்க தொடங்கினார்கள்.


அதன்பின் தற்போது என் டயர் பெல்ட் வியாபாரம் பெருகி வருகிறது. தற்போது எனது வியாபாரத்தை விரிவுப்படுத்தும் நோக்கில் டயர் மூலம் பர்ஸ், செருப்பு போன்றவற்றையும் தயார் செய்து விற்பனை செய்து வருகிறேன். குழந்தைகளுக்காக தனியாக லைட் வெயிட் பெல்ட்களை செய்து விற்கிறேன். அதையும் பலர் ஆசையாக வாங்கி தங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கின்றனர். குழந்தைகளும் அதை விரும்பி அணிந்து வருகின்றனர். எதிர்காலத்தில் விளையாட்டு வீரர்களுக்கு என டயரில் கையுறை தயாரிக்க உள்ளேன்.

இந்த தொழில் தற்போது எனக்கு மனநிறைவு அளிப்பதுடன், எங்கள் குடும்ப தொழிலை தொடர்கிறோம் என்ற மகிழ்ச்சியும் எனக்கு ஏற்பட்டு உள்ளது" என்றார் மகிழ்ச்சியுடன்.


No comments:

Post a Comment