சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

23 Apr 2015

செம்மரக் கடத்தலில் 'பருத்திவீரன்' சரவணன் கைதானதாக வதந்தி; பரபரப்பு!

தமிழகம் மற்றும் ஆந்திராவில் பரபரப்பை உண்டாக்கி இருக்கும் செம்மரக் கடத்தல் விவகாரத்தில் பருத்திவீரன் படத்தில் நடித்த நடிகர் சரவணன் கைது செய்யப்பட்டதாக பரவிய வதந்தி  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்தைச் சேர்ந்த சரவணன் கடந்த 1991 ஆம் ஆண்டு `வைதேகி வந்தாச்சு` என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகி இது வரை 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். பல்வேறு படங்களில் குணசித்திர பாத்திரத்திலும் நடித்துள்ள சரவணன்,  ’பருத்தி வீரன்’ படத்தில் நடித்ததற்கு விருதுகளையும் வாங்கியுள்ளார். தற்போது ’சௌகார் பேட்டை’ என்ற படத்தில்  முக்கிய பாத்திரமாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று சரவணன் செம்மரக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார் என்று வாட்ஸ் அப்பில் செய்திகள் பரவின.இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் இது பற்றி சரவணன் கூறுகையில், " நான் சென்னையில் ‘சௌகார் பேட்டை’ படப்பிடிப்பில் இருக்கிறேன், ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி, சிங்கம் புலி, பவர் ஸ்டார் உள்ளிட்டோருடன் நடித்துக் கொண்டிருக்கிறேன். நான் எந்தக்  கடத்தலிலும் ஈடுபடவில்லை" என்று தெரிவித்தார்.மேலும் சௌகார் பேட்டை படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தையும்  வாட்ஸ் அப்பில் செய்தியாளர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதனையடுத்து சரவணன் ,  செம்மரக்கட்டை கடத்தல் விவகாரத்தில் தேவையில்லாமல் தன்  பெயரை சமூக வலைதளங்களில் பரப்பி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை மாநகர கமிஷனரிடம்   புகார்  அளிக்கவுள்ளார்.No comments:

Post a Comment