சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

9 Apr 2015

தோனி பற்றிய யுவராஜ் தந்தை விமர்சனம்: அனுஷ்காவுக்காக கொதித்த முன்னாள் வீரர்கள் மவுனம் ஏன்?

ராவணன் போல தோனியின் கதை முடியும் என்று யுவராஜ்சிங் தந்தை யோகராஜ் சிங் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் விமர்சித்தற்கு, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் யாரும் கண்டனம் தெரிவிக்காமல் அமைதியாக இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
இந்திய அணியின் கேப்டன் தோனி குறித்து, யுவராஜ்சிங்கின் தந்தை ஹிந்தி தொலைக்காட்சி ஒன்றில் கடுமையாக விமர்சித்திருந்தார். அதில் தோனி பிச்சை எடுப்பார் என்றும், அவரது கதை ராவணன் போல முடிவடையும் என்றும் காட்டமாக கூறியிருந்தார்.

இதனையடுத்து, தோனி  குறித்த தனது தந்தையின் விமர்சனத்திற்கும் தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று யுவராஜ்சிங் ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார். தோனியின் தலைமையில் தான் விளையாடுவதை எப்போதும் விரும்பி வந்ததாகவும், அவர் தந்தையானது குறித்து நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க காத்திருப்பதாகவும் யுவராஜ்சிங் ட்விட்டரில் பதில் அளித்துள்ளார்
இதற்கிடையே தோனி குறித்து கடுமையாக முன்வைக்கப்பட்ட இந்த விமர்சனங்களுக்கு சச்சின், கங்குலி, டிராவிட் போன்ற முன்னாள் வீரர்கள் கண்டனம் தெரிவிக்க முன்வராதது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் நடந்து முடிந்த உலகக் கோப்பை போட்டியின் போது, அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணி தோல்வியடைந்தது. இந்த தோல்விக்கு விராட் கோலியின் காதலி அனுஷ்கா சர்மாதான் காரணம் என்று கூறி அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இதற்கெல்லாம் முன்னாள் வீரர்கள் கங்குலி, டிராவிட் போன்றவர்கள் அனுஷ்காவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தனர்.

ஆனால் தற்போதைய இந்திய அணியின் கேப்டன் பற்றி, மற்றொரு கிரிக்கெட் வீரரின் தந்தை ஒருவர், 'பிச்சை எடுப்பார், ராவணன் போல முடிவடைவார், பத்திரிகையாளராக இருந்தால் அடித்துவிடுவேன்...!' என்றெல்லாம் அநாகரீகமாக விமர்சிக்கிறார். இதற்கு கண்டனம் தெரிவிக்க ஒரு கிரிக்கெட் வீரர் கூட முன்வராதது ஆச்சரியமாக உள்ளது. 


No comments:

Post a Comment