சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

9 Apr 2015

மக்களை பாதிக்குமா 'நெட் நியூட்ராலிட்டி' பிரச்னை?

ந்தியாவில் இன்று தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக, அனைவரையும் அடிப்படை செல்போன் வசதி சென்றடைந்துவிட்டது. அதிலும் ஸ்மார்ட்போன்கள் அதிவேகமான வளர்ச்சியில் வளர்ந்து மக்களை சென்றடைந்து வருகின்றன. இது வளர்ச்சிதானே என நாம் நினைத்து கொண்டிருக்கும் வேளையில், செல்போன் நிறுவனங்கள் வாயிலாக புதிய பிரச்னை ஒன்று தலை தூக்கியுள்ளது. அது தான் நெட் நியூட்ராலிட்டி.
நெட் நியூட்ராலிட்டி என்றால் என்ன?

நெட் நியூட்ராலிட்டி எனும் இணையதள சமநிலை என்பது இணையதள சேவையை வழங்கும் செல்போன் சேவை நிறுவனமும், அரசும் அனைத்து இணையதள டேட்டாக்களையும் சமநிலையில் வழங்க வேண்டும், ஒரு வாடிக்கையாளருக்கும் மற்றொரு வாடிக்கையாளருக்கும் கட்டணத்தில் வித்தியாசத்தை காட்டக் கூடாது, அதேபோல் தகவல், இணையதளம், இயங்குதளம், ஆப்ஸ், தொலைதொடர்பு முறை ஆகியவற்றிலும் சமநிலையை கடைபிடிக்க வேண்டும் என்பதே நெட் நியூட்ராலிட்டி ஆகும். இது கொலம்பியா யுனிவர்சிட்டி மீடியா சட்ட பிரிவின் பேராசிரியர் டிம் வூவால் 2003 ஆம் ஆண்டு வகுக்கப்பட்டது.

என்ன பிரச்னை?

ஆரம்ப காலத்தில் செல்போன்கள் இந்தியாவில் வேகமான வளர்ச்சியை பெற்று வந்தன. இதே நேரத்தில் சேவை நிறுவனங்களின் வளர்ச்சி அபரிதமாக இருந்தது. இந்த நிறுவனங்கள் இந்தியாவில் 800 மில்லியன் செல்போன் இணைப்புகளை வழங்கின., ஆனால், அதே செயல்தான் இப்போது செல்போன் நிறுவனங்களுக்கு எதிராக மாறியுள்ளன. காரணம், இன்று அதிகரித்துள்ள உடனடி ஆப்ஸ் நிறுவனங்கள் தான். உடனடி ஆப்ஸ் நிறுவனங்களும், வாய்ஸ் ஓவர் இண்டெர்நெட் ப்ரோட்டோகால் (VOIP) எனும் இணையதள கால் வசதி அதிகமாகி வருவதும்தான். இதன் மூலம் என்ன பிரச்னை, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மாறிதானே வருகிறோம் என்றால், அதற்கு பதிலாய் உருவமெடுக்கிறது இணையதள சமநிலையின்மை என்ற புகார்.

வாட்ஸ்அப், ஸ்கைப், கூகுள் ஹேங் அவுட் போன்ற நிறுவனங்கள் தங்கள் ஆப்ஸை இலவசமாக ப்ளே ஸ்டோர்களில் வைத்துள்ளன. அதனை டவுன்லோடு செய்து குறைந்தபட்ச இணையதள சேவை இருந்தாலே செய்திகளை பரிமாறிக்கொள்ள முடியும் என்ற நிலையை உருவாக்கியுள்ளன. அதுமட்டுமின்றி வாய்ஸ் கால், வீடியோ கால் போன்றவற்றை அறிமுகப்படுத்தி தகவல் பரிமாற்றத்தை எளிமையாக்கியுள்ளன. இதனால், தேசிய அளவில் எஸ்.எம்.எஸ் மற்றும் கால் செய்பவர்களது எண்ணிக்கை கணிசமான அளவில் குறைந்துள்ளன. இதனால், கால் மற்றும் எஸ்.எம்.எஸ். மூலம் கிடைக்கும் வருமானமும் குறைந்துள்ளது என செல்போன் சேவை நிறுவனங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இது குறித்து செல்போன் நெறிமுறையாளரான ட்ராய் அமைப்பிடம் ஏற்கெனவே செல்போன் சேவை நிறுவனங்கள் இந்த பிரச்னையை முன் வைத்துள்ளன. இதில் உடனடி ஆப்ஸ் நிறுவனங்களால் செல்போன் நிறுவனங்களின் வருமானத்திற்கு பாதிப்பு ஏற்படுகிறது என கூறப்பட்டுள்ளது. இன்றைய நிலையில் 350 மில்லியன் செல்போன் பயன்பாட்டாளர்களை கொண்ட இந்தியாவில், ஸ்மார்ட்போன் வேகமாக பரவி வரும் வேளையில், செல்போன் சேவை நிறுவனங்களின் வருமானம் பெரிய அளவில் குறையும் என கூறியுள்ளன.

இந்தப் பிரச்னையில் மக்கள் மத்தியில் என்ன மனநிலை உள்ளது?  செல்போன் நிறுவனங்கள் கட்டணத்தை அதிகரித்துவிட்டால் உங்களுக்கு அது சிரமமாக இருக்குமா? என்ற அடிப்படையில் நெறிமுறையாளரான ட்ராய், 20 கேள்விகளை மக்கள் முன் வைத்துள்ளது. இதனை நிரப்பி advqos@trai.gov.in என்ற ட்ராயின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். இதற்கு வரும் பதில்களை பொறுத்து முடிவெடுக்க ட்ராய் முடிவு செய்துள்ளது.

என்ன கேள்விகள் என்பதை அறிய க்ளிக் செய்க
www.trai.gov.in/WriteReadData/WhatsNew/Documents/OTT-CP-27032015.pdf
மக்களை பாதிக்குமா?

அமெரிக்க போன்ற வளர்ந்த நாடுகளில் இதே போன்ற பிரச்னை தலை துக்கியபோது, அரசு நெட் நியூட்ராலிட்டி பக்கமே இருந்துள்ளது. நெட் நியூட்ராலிட்டி கொண்டு வர வேண்டும் என்பதற்கு முக்கிய காரணமாக இருப்பதே சில ஆப்ஸ்கள் செல்போன் சேவை நிறுவனங்கள் வழங்கும் அனைத்து சேவையையும் இலவசமாக வழங்குவது தான். இதற்கு செல்போன் சேவை நிறுவனங்கள் கையில் எடுக்கும் முடிவு, மக்களை பாதிக்கும் விதமாக உள்ளது. வருமானத்தை இழக்கும் சேவை நிறுவனங்கள் இரண்டு உத்திகளை கையாளலாம். ஒன்று இணையதள சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்தலாம். அல்லது ஆப்ஸ் நிறுவனங்களோடு ஒப்பந்தம் போட்டு அவர்களிடம் இருந்து பெரிய தொகையை பெற்று குறைந்த விலையில் சேவையை வழங்கலாம். ஆனால், ஆப்ஸ் நிறுவனங்கள் அதிக பணத்தை செலவழிக்க முன் வராது என்பதால் இணையதள சேவை கட்டணங்கள் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. ஏற்கெனவே இரண்டு மடங்காக உயர்த்தப்பட்ட கட்டணம் இப்போது தனித்தனியாக ஒவ்வொரு ஆப்ஸுக்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போது உள்ள சூழலில் கட்டணம் எப்படி அதிகரிக்கும் எனில் மாதாந்திர சேவைக்காக அடிப்படை கட்டணம் 150 ரூபாயாக இருக்கலாம் என்றும், கூகுள், யாகூ போன்ற தேடுதல் தளங்களுக்கு கட்டணம் 18 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை மாதம் வசூலிக்கப்படலாம் என்றும், வாட்ஸ் அப், வீசாட் போன்ற உடனடி ஆப்ஸ்கள் 80 ரூபாய் என்ற அளவில் விற்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இவை தவிர, இ-காமர்ஸ் நிறுவனங்கள் ஆப்ஸில் பர்சேஸ் செய்ய அனைவரையும் பழக்கி விட்டன. அதன் விலை 50 ரூபாயை தாண்டும் என்று கூறப்படுகிறது. இப்படியே போனால், ஒரு மாதம் இந்த ஆப்ஸ்களை பயன்படுத்த மட்டும் தோராயமாக 800 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை செலவழிக்க வேண்டி இருக்கும்.
சாதாரணமாக 200 முதல் 300 ரூபாய்க்குள் இந்த அனைத்து சேவைகளையும் பயன்படுத்தி வந்த மக்களுக்கு 1,000 ரூபாய் பெரிய தொகையாக இருக்கும் என்பதில் ஆச்சர்யமில்லை. செல்போன் நிறுவனங்கள் விலையை அதிகரித்தால் மக்களுக்கு பிரச்னை. ஆப்ஸ் நிறுவனங்கள் தரும் சேவைகளால் செல்பொன் நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன.

ட்ராய் மக்கள் கருத்துக்களை கேட்டு இதற்கு ஒரு நல்ல முடிவை அளித்து அதேசமயம் விலை நிர்ணயித்தலுக்கும் சரியான தீர்வை அளிக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லையெனில் விலை அதிகரிக்கவோ அல்லது இணையதள பயன்பாடு குறைந்து தொழில்நுட்ப ரீதியாக பின்னடைவை சந்திக்கவோ வாய்ப்புள்ளது. செல்போன்களும், ஆப்ஸ்களும் தான் இன்றைக்கு அனைத்தும் எனும்போது வாடிக்கையாளர்கள் இந்த செல்போன் நிறுவனங்களை தவிர்க்கவும், வேறு சில தனியார் வை-பை இணையதள வசதிகளை பயன்படுத்தி கால் மற்றும் எஸ்.எம்.எஸ்களை செய்யவும் வாய்ப்புள்ளது என்பதால் இருதரப்புக்கும் பிரச்னையான விஷயத்தை அரசு கவனத்துடன் கையாண்டால் மட்டுமே இந்தப் பிரச்னைக்கு சரியான தீர்வு கிடைக்கும். டிஜிட்டல் இந்தியா, அனைவருக்கும் இணையதள சேவை என்று மார்தட்டி கொள்ளும் அரசும் இந்த பிரச்னையை சரியாக கையாண்டால் தான் சமநிலை உண்டாகும்.

விதிமுறையை மீறியதா ஏர்டெல்?

நெட் நியூட்ராலிட்டிக்கான விதிமுறைகள் குறித்த ஆய்வு நடந்து வரும் நிலையில், பாரதி ஏர்டெல் நிறுவனம் ''ஏர்டெல் ஜீரோ'' திட்டத்தின் மூலம் ஆப்ஸ்களில் சிலவற்றை இலவசமாக பயன்படுத்த முடியும் என்று கூறியுள்ளது. இந்த அறிவிப்பு நெட் நியூட்ராலிட்டிக்கு எதிராக உள்ளது என சேவை நிறுவனங்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இ-காமர்ஸ் நிறுவனங்களுடன் ஏற்கெனவே ஒப்பந்த அடிப்படையில் குறைந்த விலையில் மார்க்கெட்டிங் வாய்ப்பபுகளை வழங்கி வரும் ஏர்டெல், நெட் நியூட்ராலிட்டி விதிமுறையை மீறியுள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ட்ராய் ''பிரச்னையை பரிசீலனை செய்து வருவதாகவும், விரைவில் இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படும்" என்று கூறியுள்ளது.



No comments:

Post a Comment