பல தடைகளை மீறி உத்தம வில்லன் படம் வருகிற மே 1ம் தேதி வெளியாக உள்ளது. ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல் கதை, திரைக்கதை எழுத , கமல், கே பாலசந்தர், ஆண்ட்ரியா, ஊர்வசி, பூஜா குமார், பார்வதி, கே.விஸ்வநாத், ஜெயராம், நாசர், என பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘உத்தம வில்லன்’.
படத்திற்கு இசை ஜிப்ரான். ‘வாகை சூடவா’ படத்தின் சர சர பாடல் கேட்டு ஜிப்ரானின் இசை பிடித்துப் போக ‘விஸ்வரூபம், ‘உத்தம வில்லன்’, ‘பாபநாசம்’, மற்றும் ’விஸ்வரூபம் 2’ என தொடர்ந்து கமல் படங்களில் ஜிப்ரானின் இசை இடம்பிடித்து வருகிறது. இதை ஆண்ட்ரியாவே ’உத்தம வில்லன்’ இசை வெளியீட்டு விழாவில் பதிவு செய்தார்.
2013ம் ஆண்டு லிங்குசாமியிடம் மூன்று கதைகளை சொன்ன கமல் கடைசியாக பல சந்திப்புகளை அடுத்து இந்த படம் உருவானது. மேலும் இதில் லிங்குசாமி ஓகே சொன்னது வேறு கதை என்பதுதான் சுவரஸ்யம்.
முதலில் இப்படத்தை இயக்க பரிந்துரைக்கப்பட்டவர் ராஜேஷ். பின்னரே அது ரமேஷ் அரவிந்த் கைக்கு சென்றது. இதே பாணியில் இப்படத்தின் இசைக்கு முதலில் பரிந்துரைக்கப்பட்டவர் யுவன் ஷங்கர் ராஜா. பின்னரே ஜிப்ரான் வசம் சென்றது.கௌதமி காஸ்டியூம் டிசைனராக இந்த படத்தில் பொருப்பேற்றார். விஜய் ஷங்கர் எடிட்டராக பணியாற்றியுள்ளார். பாலசந்தரிடம் அடுத்து கதை சொல்லப்பட்டு படத்தில் ஒரு ரோல் நடித்தாக வேண்டும் என கமல் கூற நான் பாதியிலேயே போயிட்டா என்னடா பண்ணுவ என அப்போதே கேட்டுள்ளார் பாலச்சந்தர். மேலும் பல நிகழ்ச்சிகளில் எப்படா படத்தை ரிலீஸ் செய்யப்போற என கே.பி கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வழக்கம் போல கமல் படமென்றாலே பிரச்னைகள் தேடி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கும் இந்து மகா சபா, மற்றும் இஸ்லாமிய கட்சிகள் என இரண்டும் ஒன்று சேர்ந்து பிரச்னைகள் கொடுத்தன. எனினும் சென்சார் குழு சான்றிதழ் கொடுத்த பின்னர் எந்த காரணத்திற்காகவும் படத்தின் சீன்களை கத்தரிக்க இயலாது என் திட்டவட்டமாக கூறினார் கமல். அதன்படி படமும் தற்போது மே 1ம் தேதி வெளியாக உள்ளது. விசாரணைக்கு எடுத்துக்கொண்ட வழக்கு மனுவும் தள்ளுபடியாகியுள்ளது.
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு படத்திற்கு இரண்டு இல்லாமல் மூன்று டிரெய்லர்கள் வெளியானது இந்த படத்திற்குத்தான். அதே போல் பாடல்களை ஆராய்ந்து பட்டிமன்றம் நடத்தியதும் இந்த படத்திற்குத்தான். மொத்தம் 17 ட்ராக்குகள் அதில் 8 பாடல்கள் , மற்றவை கரோக்கிகளாகவும், இசை வடிவிலும் உள்ளன. இதில் பிரச்னை வந்த பாடல் .இரணிய நாடகம் என்ற பாடலுக்குத்தான்.
‘உத்தம வில்லன்’ என்ற தலைப்பு லோகோ வில்லுப்பாட்டு இசையை கண்முன் கொண்டுவரும். பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு கமல் டாப் ஹீரோவாகவும், மற்றவர் 8ம் நூற்றாண்டு கூத்துக் கலைஞனாகவும் என இரு வேடங்களில் வருகிறார். இந்த படத்தின் பட்ஜெட் 50 கோடி.படத்தின் நீளம் 2 மணிநேரம் 53 நிமிடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது வெளியாகும் படங்களொடு ஒப்பிடுகையில் இப்படத்தின் நீளம் சற்று அதிகம் தான்.
சமீப காலமாக ஸ்டுடியோ கிரீன் பல முக்கியத்துவம் வாய்ந்த படங்களை ரிலீஸ் செய்து வருகின்றனர். கடந்த 1ம் ம் தேதி தங்களது சொந்த தயாரிப்பான ‘கொம்பன்’ படத்தை வெளியிட்டனர். அடுத்ததாக மணிரத்னத்தின் ‘ஓ காதல் கண்மணி’ படத்தையும் ஏப்-17ல் ரிலீஸ் செய்தனர் தற்போது கமலின் உத்தம வில்லன் படத்தையும் வரும் மே-1ம் தேதி ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தான் வெளியிடுகிறது. இதே நாளில் ‘வை ராஜா வை’ படத்தையும் இவர்கள் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது. எனினும் 2013ம் ஆண்டு வெளியான விஸ்வரூபம் படத்திற்கு பிறகு ஒரு வருட இடைவெளிக்கு பிறகு வெளியாகும் கமல் படம் என்பதால எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
No comments:
Post a Comment