ஆந்திரா மற்றும் தமிழகத்தின் வன வளமான செம்மரங்களை வெட்டி வெளிநாடுகளுக்கு கடத்தி விற்கும் மாஃபியாக்கள் சென்னையில் உள்ள பிரபல ஸ்டார் ஹோட்டல்களில் தங்கியிருந்துள்ளதும் சினிமாக்களுக்கு ஃபைனான்ஸ் செய்ததாகவும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
செம்மரக்கடத்தலில் ஈடுபட்டதாக கூறி ஆந்திராவில் அப்பாவி தமிழர்கள் 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் தொடர்ந்து, பல நாட்கள் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்துப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆந்திராவிலும் அம் மாநில அரசுக்கு எதிராக குரல்கள் எழுந்தன.

இந்நிலையில் ஆந்திர மாநில போலீசார், தமிழகம் வந்து சென்னையில் செம்மரக் குடோன்களில் அதிரடியாகச் சோதனை நடத்தினர். இது தொடர்பாக சரவணன் என்ற செம்மரக்கடத்தல் மன்னன் கைது செய்யப்பட்டு போலீஸ் கஸ்டடியில் வைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து செம்மரக்கடத்தலை தடுக்க ஆந்திர மாநில வனத்துறையினரும், போலீஸ் அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
தற்போது பல ஆண்டுகளாக செம்மரக்கடத்தலில் ஈடுபட்டு வரும் முக்கிய மாஃபியாக்கள் கோடிகளை குவித்திருப்பது வெட்ட வெளிச்சமாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது போன்ற மாபெரும் கடத்தல் மாபியாக்கள் யாரும் இதுவரை ஆந்திர போலீசின் துப்பாக்கி குண்டுக்கு இரையாகவில்லை. கூலி தொழிலாளிகளாக ஆந்திர வனப்பகுதிக்கு அழைத்துச் செல்லப்படும் அப்பாவி தமிழர்கள் மட்டுமே பலியாகி உள்ளனர்.
இப்படி சட்டத்தின் ஓட்டைக்குள் புகுந்து, வனத்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகளின் துணையுடன், அரசியல் அதிகாரத்தையும் வளைத்து செம்மரக்கடத்தல் மாபியாக்களாக மாறியவர்கள் பற்றி வெளி வந்துள்ள தகவல்கள் அனைத்தும் பகீர் ரகம்.

ஆந்திர மாநிலத்தில் செம்மரக் கடத்தலில் நன்கு அறிமுகமான பெயர் லட்சுமணன். மிகப்பெரிய கடத்தல் மன்னனான இவன் கடந்த 2013 ஆம் ஆண்டு போலீசில் சிக்கினான். ஆந்திர மாநில போலீசுக்கும் வனத்துறையினருக்கும் பெரும் சவாலாக விளங்கிய லட்சுமணன் ‘குட்டி வீரப்பன்’ என்றே அழைக்கப்பட்டுள்ளான்.இரு மாநில அதிகார மட்டங்களில் பெரிய அளவுக்கு செம்மர சாம்ராஜ்யம் நடத்தி உள்ளான்.
தற்போது, ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவன், 100 கோடி ரூபாய் அளவுக்கு செம்மரக்கடத்தலில் ஈடுபட்டு பணம் சம்பாதித்துள்ளான். தமிழக எல்லையோர கிராமங்களில் இருந்து கூலி தொழிலாளர்களை மரம் வெட்டுவதற்காக இவன் அழைத்துச் செல்வான். செம்மரங்களைக் கடத்தியாக லட்சுமணன் மீது 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விலை உயர்ந்த ஆடைகளை அணிவதில் ஆர்வம் கொண்ட லட்சுமணன், அணியும் சட்டையின் விலை ரூ. 25 ஆயிரம் என்று கூறப்படுகிறது. விலை உயர்ந்த சொகுசு காரான பி.எம்.டபிள்யூ காரிலேயே அவன் வலம் வந்துள்ளான்.
இவனுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர் மூசா என்ற போலீஸ் இன்ஸ்பெக்டர். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர், லட்சுமணனுடன் சேர்ந்து செம்மரக்கடத்தல் தொழிலில் ஈடுபட்டார். இதனால் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட அவர் மீது கைது நடவடிக்கையும் பாய்ந்தது. செம்மரக்கடத்தலில் கடந்த 15 ஆண்டுகளாக மூசா ஈடுபட்டு வருவதாகவும், கடத்தல்காரர்கள் பலருக்கு இவர் ஆலோசகராகச் செயல்பட்டு வருவதாகவும், ஆந்திர போலீசார் தெரிவித்தனர். செம்மரங்களை கடத்தி விற்று மூசா ரூ. 50 கோடி வரை சம்பாதித்திருப்பதும் தெரிய வந்துள்ளது.மேலும் மூசா செம்மரங்களை பாதுகாக்க வலியுறுத்தும் அமைப்பு ஒன்றையும் நடத்தி வந்துள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த செல்வராஜ் என்ற தொழில் அதிபரும் கடந்த 15 ஆண்டுகளாக செம்மரக்கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவர் மீது 18 வழக்குகள் உள்ளன. பி.எம்.டபிள்யூ காரிலேயே இவர் வலம் வருவார்.
இவரை போல கொல்லம் கங்கி ரெட்டி, ரியாஸ், விக்ரம், நாகராஜன், மஸ்தான், ஹமீது கான், சாமுவேல் ஆகிய முக்கிய புள்ளிகள் பலரும் செம்மரக்கடத்தலில் பல ஆண்டுகளாக கொடி கட்டிப் பறந்துவருகிரார்கள்.கொல்லம் கங்கி ரெட்டியின் சொந்த ஊர் ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள புல்லம்பேட்டை ஆகும். இவர் மீது ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது கொலை தாக்குதல் நடத்தியது உட்பட 27 முக்கிய வழக்குகள் உள்ளன.
அதே போல கர்நாடகாவை சேர்ந்த ரியாஸ் 12 ஆண்டுகளாகச் செம்மரக்கடத்தலில் ஈடுபட்டு வருகிறார். 24 வழக்குகளில் சிக்கி இருக்கும் ரியாஸ் ரூ. 50 கோடி வரை வாரி குவித்திருக்கிறார்.
டெல்லியை சேர்ந்த விக்ரம் பர்மா ரங்கூனில் குடியேறியவர். கடந்த 7 ஆண்டுகளாகச் செம்மரக்கடத்தலில் ஈடுபட்டு வரும் இவர் சென்னையில இருந்து சீனாவுக்கு கடல் வழியாகச் செம்மரக்கட்டைகளை கடத்துவதில் மாபெரும் கில்லாடி. 100 கோடிக்கு அதிபதியான விக்ரமுக்கு, சொந்தமாக கொல்கத்தா, மியான்மரில் செம்மரக் குடோன்களும் உள்ளன என்பது கூடுதல் தகவல்.
தமிழகத்தைச் சேர்ந்த நாகராஜன் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் அறை எடுத்து தங்கி இருப்பார். இங்கிருந்த படியே செம்மரக்கட்டைகளை எங்கு? எப்படி? யார் யாருக்கு கடத்த வேண்டும் என்று ரகசிய உத்தரவிடுவார். கடத்தல் தொடர்பாக 14 வழக்குகளில் தொடர்புடைய இவரும் 100 கோடிக்கு மேல் பணம் சம்பாதித்து அதிர்ச்சியளிக்க வைத்துள்ளார்.
கர்நாடகாவை சேர்ந்த மஸ்தான் 10 ஆண்டுகளாக செம்மரக்கடத்தலில் ஈடுபட்டு வருகிறார். இவர் சினிமா மோகம் கொண்டவர். செம்மரக்கடத்தில் கொட்டிய பணத்தை சில சினிமாக்களிலும் முதலீடு செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஆந்திராவில் ராஜமுந்திரி சிறையில் இருக்கும் ஹமீது கான், பெங்களூரை சேர்ந்தவர். கடந்த 15 ஆண்டுகளாக கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வரும் இவர் மீது 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மணிப்பூரை சேர்ந்த சாமுவேல் 8 ஆண்டுகளாகத்தான் செம்மரக்கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அதற்குள் 100 கோடிக்கு சொந்தக்காரராகி விட்டார். இவரும் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் தங்கி இருந்தே கடத்தல் தொழிலை செய்து வருகிறார்.

No comments:
Post a Comment