சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

25 Apr 2015

யார் கையில் எத்தனை படங்கள்... டாப் ஹீரோக்களின் அடுத்தடுத்த ப்ளான்

மிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி , கமல், அஜித், விஜய், விக்ரம், சூர்யா, ஆர்யா, சிம்பு, தனுஷ் ,விஷால்,  சிவகார்த்திகேயன் , விக்ரம் பிரபு, ஜெயம் ரவி, கார்த்தி இவர்கள் என்னென்ன படங்களில் நடித்து வருகிறார்கள் , அடுத்தடுத்து என்னென்ன படங்கள் கையில் உள்ளன இதோ ஒரு சிறப்பு சர்வே.
ரஜினி : ‘லிங்கா’ பிரச்சனைகள் முடிந்து தற்போது ஷங்கரின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என தானே கேட்டுகொள்ள 150 கோடி பட்ஜெட்டில் மிகபிரம்மாண்ட படமாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினி. இப்போதைக்கு இதுதான் ப்ளான்.
கமல்: ‘உத்தம வில்லன்’ வெளியாக இருக்கிறது. ‘பாபநாசம்’, ‘விஸ்வரூபம் 2’ படங்கள் பெரும்பாலும் முடிந்து இவ்வருடமே வெளியாக உள்ளன. இது மட்டுமின்றி ஆக்‌ஷன் ,த்ரில்லர் கதைக்களத்தில் ராஜேஷ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதில் உலக நாயகனுக்கு ஜோடியாக த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது.
அஜித்: ‘என்னை அறிந்தால்’ தெலுங்கிலும் விரைவில் ரிலீஸ். இப்போது ‘வீரம்’ சிவா இயக்கத்தில் ஸ்ருதி ஹாசன் ஜோடியாக ஆக்‌ஷன் கதையில் நடிக்க இருக்கிறார். சமீபத்தில் படத்தின் பூஜைகள் போடப்பட்டு படம் துவங்கியது.இப்போதைக்கு செல்ல மகனுடன் நேரம் செலவிடல், விரைவில் சிவா படத்தின் படப்பிடிப்பில் இணைதல் அவ்வளவுதான் தல ப்ளான்.

விஜய்: சிம்புதேவன் இயக்கத்தில் ‘புலி’ படப்பிடிப்பு முழுவீச்சில் நடக்கிறது. இதற்கிடையில் அட்லீ படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகள் துவங்கிவிட்டன. ‘புலி’ பாய்ச்சலுக்கு பிறகு அடுத்து அட்லீ படத்தில் சமந்தா, எமி ஜாக்சனுடன் நடிக்க இருக்கிறார். இதற்கிடையில் முக்கியத்துவம் வாய்ந்த இயக்குநர்கள் சிலரிடம் கதைக் கேட்டுள்ளாராம் விஜய். அட்லீ படம் பாதி படப்பிடிப்பின் போது யார் அடுத்த இயக்கம் என அறிவிக்க படும் என தளபதி, 2016 அட்டவணை கூட ரெடியாக வைத்திருக்கிறார்.
விக்ரம்: விஜய் மில்டன் இயக்கத்தில் சமந்தாவுடன் ‘10 எண்றதுக்குள்ள’ படப்பிடிப்பு முடியும் தருவாயை எட்டியுள்ளது. இதைத் தொடர்ந்து ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் ‘மர்ம மனிதன்’, மற்றும் கௌதம் மேனன் இயக்கத்தில் ‘துருவ நட்சத்திரம்’ என இரு படங்களில் கால்ஷீட்டுகளை பிரித்துக் கொடுத்து நடிக்க இருக்கிறார். இதனையடுத்து மீண்டும் ஷங்கர் படமாம் . ரஜினி நடிக்க இருக்கும் 150 கோடி பட்ஜெட் படத்தில் விக்ரமும் இன்னொரு ஹீரோவாம். மறுபடியும் முதல்ல இருந்தா!
தனுஷ்: பாலாஜி மோகன் இயக்கத்தில் ‘மாரி’ படம் முடிந்துவிட்டது. இதைத்தொடர்ந்து ‘விஐபி’ டீமின் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். பிரபு சாலமன் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார். இப்போது புதிய செய்தியாக மணிரத்னம் இயக்கும் இந்தி படம் ஒன்றில் நடிப்பார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன. தயாரிப்பிலும் ஒரு காட்டு காட்டும் தனுஷ் தயாரிப்பில் ‘காக்கா முட்டை’ , மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் ‘நானும் ரவுடிதான்’ படங்களும் ஆன் த வே.
சிம்பு: மே 9ம் தேதி ‘வாலு’. பாண்டிராஜ் இயக்கத்தில் ‘இது நம்ம ஆளு’ , கௌதம் மேனன் இயக்கத்தில் ‘அச்சம் என்பது மடமையடா’. கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் புதிய படம் என சிம்புவும் இந்த வருடம் செம பிஸி. எப்போ ரிலீஸ்!
சூர்யா:: வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாஸ்’ . பாண்டிராஜ் இயக்கத்தில் ‘ஹைக்கூ’ படத்தில் முக்கிய வேடம். ’யாவரும் நலம்’ பட இயக்குநரின் ‘24’ படத்தில் நடித்து வரும் சூர்யா, ஜோதிகா ரீஎண்ட்ரி ஆகியிருக்கும்’36 வயதினிலே படத்தையும் தயாரித்துள்ளார்.
ஆர்யா: விஷ்ணுவர்தன் இயக்கத்தில் கிருஷ்ணாவுடன் நடிக்கும் ‘யட்சன்’. விஜய் சேதுபதி, ஷாமுடன் நடித்து ரிலீஸ்க்கு காத்திருக்கும் ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’.புதிய செய்தியாக ’நான்’ , ‘அமரகாவியம்’ படங்களை இயக்கிய ஜீவா ஷங்கர் அரசியல் சார்ந்த த்ரில்லர் கதை ஒன்றை ஆர்யாவிற்கு சொல்லியிருக்கிறாராம். ஆர்யாவின் பதிலுக்காக காத்திருப்பதாக கூறப்படுகிறது.
விக்ரம் பிரபு: ‘இது என்ன மாயம்’ படம் முடிந்து விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. ஜி.என்.ஆர்.குமாரவேல் இயக்கத்தில் ‘வாகா’ என்னும் படத்திலும் நடித்து வருகிறார். அடுத்து ‘மஞ்சப்பை’ இயக்குநர் நவீன் ராகவன் இயக்கத்தில் ‘தனிக்காட்டு ராஜா’ படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.
விஷால்: ’மதகஜா ராஜா’ எப்போ ஜி ரிலீஸ். அது அவருக்கே தெரியாது. அடுத்து சுசீந்திரன் இயக்கத்தில் காஜல் அகர்வால் ஜோடியாக ‘பாயும் புலி’. ’வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ படத்தில் சிறப்பு தோற்றத்திலும் நடிக்கிறார்.
ஜெயம் ரவி: இப்போதைக்கு தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயின்கள் அனைவருடனும் நடித்துவரும் ஹீரோ ரவியாகத்தான் இருப்பார். ஹன்சிகாவுடன் ‘ரோமியோ ஜூலியட்’ ரிலீஸ் ஆக உள்ளது. ‘பூலோகம்’ படமும் முடிந்து ரிலீஸ் தேதியை எதிர்நோக்கியுள்ளது. த்ரிஷா, அஞ்சலியுடன் ‘அப்பா டக்கரு’, நயன்தாராவுடன் ’தனி ஒருவன்’. மற்றும் புதிய செய்தியாக சக்தி சௌந்தர் ராஜன் இயக்கும் புதிய படத்தில் லட்சுமி மேனன் ஜோடியாக ஜெயம் ரவி நடிக்க இருக்கிறார்.
கார்த்தி: நாகார்ஜுனாவுடன் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் உருவாகும் பெயரிடப்படாத புதிய படத்தில் நடித்துவருகிறார். இது தவிர்த்து ’இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா’ இயக்குநர் கோகுல் இயக்கத்தில் ‘கஷ்மோரா’ என்னும் திகில் படத்திலும் நடித்து வருகிறார்.

விஜய் சேதுபதி: புறம்போக்கு என்கிர பொதுவுடமை’ ரிலீஸ் ஆக உள்ளது. ’இடம் பொருள் ஏவல்’ படத்தின் டிரெய்லர் வெளியாகிவிட்டது. இது தவிர்த்து ரஞ்சித் ஜெயகொடி இயக்கத்தில் ’மெல்லிசை’, பிஜ்ஜு விஸ்வநாத் இயக்கத்தில் ‘ஆரஞ்சு மிட்டாய்’, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘நானும் ரவுடிதான்’, நலன் குமாரசாமி இயக்கத்தில் ‘எஸ்கிமோ காதல்’, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ’இறைவி’ என தமிழ் சினிமாவில் இப்போதைக்கு அதிக படங்களுடன் இருப்பவர் விஜய் சேதுபதிதான். 
சிவகார்த்திகேயன்: பொன்ராம் இயக்கத்தில் ‘ரஜினி முருகன்’. இது மட்டுமின்றி கன்னடத்தில் சிவ்ராஜ்குமார் ஹீரோவாக நடிக்கும் ‘வஜ்ரகயா’ படத்தில் சிறப்பு தோற்றம். இப்போதைக்கு சிவகார்த்திகேயனின் ப்ளான் ‘ரஜினி முருகன்’ ரிலீஸ் மட்டுமே. கதை கேட்டு வருகிறார். விரைவில் அறிவிப்பு வெளியாகும்.
இதுதான் நம்ம தமிழ் சினிமா ஹீரோக்களின் இப்போதைய திட்டங்கள். 



No comments:

Post a Comment