இந்த ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கனைக்கான விஸ்டன் விருது, இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ்க்கு வழங்கப்படுகிறது. இந்த விருதை பெறும் முதல் இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் ஆவார்.
கடந்த 1889ஆம் ஆண்டு முதல் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விஸ்டன் விருது வழங்கப்பட்டு வருகிறது. கிரிக்கெட் உலகின் கவுரவமிக்க இந்த தனிநபர் விருதுக்கு, இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது 32 வயது நிரம்பிய மிதாலி, இந்திய அணிக்காக 1999ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார்.
இந்திய அணிக்காக 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 663 ரன்களையும், 153 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 4 ஆயிரத்து 888 ரன்களையும் அடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளை பொறுத்த வரை சர்வதேச அளவில் அதிக ரன்கள் குவித்த இரண்டாவது வீராங்கனை மிதாலி ஆவார். மிதாலியுடன் சேர்ந்து ரஹானே, ரிஷி தவான், ஏஞ்சலோ மேத்யூஸ், உமர் அக்மல்,மாமினல் ஹக் ஆகியோரும் இந்த ஆண்டுக்கான விஸ்டன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

No comments:
Post a Comment