சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

23 Apr 2015

ரஜினி சொன்ன வெயில்...!

ஜினியும், மேக்கப்மேன் முத்தப்பாவும் நெருங்கிய நண்பர்கள். அதாவது, இருவரும் நேரில் சந்தித்தால் கூலாங்கல்லை எடுத்து அடித்துக் கொள்கிற ரேஞ்சுக்கு குழந்தையாகி போவார்கள்.  'அண்ணாமலை' படத்தில் ரஜினிக்கு கிளி ஜோசியம் பார்ப்பாரே அவர்தான் முத்தப்பா. இருவரும் விளையாடுவதை ஷூட்டிங் ஸ்பார்ட்டே கைதட்டி வேடிக்கை பார்த்து ரசிக்கும்.
அப்படித்தான் ஒருநாள் ஏ.வி.எம் கார்டனில் 'அதிசயப்பிறவி' படப்பிடிப்பு. மத்தியான உச்சிவெயிலில்  ஷூட்டிங். ரஜினி நடித்துவிட்டு இடைவேளையில் சேரில் வந்து அமர்ந்தார். அப்போது அங்கே வந்த  முத்தப்பா 'ஸ்... ஸ்... ரஜினி போன வருஷத்தோட, இந்த வருஷம் வெயில் ஜாஸ்திப்பா...' என்று அலுத்துக் கொண்டார்.  முத்தப்பா தோளைத் தொட்ட ரஜினி, 'முத்தப்பா வெயில் எப்போதும் போல அப்படியேதான் இருக்கு. உனக்குத்தான் போன வருஷத்தோட இந்த வருஷம் ஒரு வயசு  ஜாஸ்தி. அதனால உன் உடம்புக்கு தாங்க முடியல...' என்று சொன்னார்.


'கமர்கட்டு' கதை...


தான் இயக்கும் 'கமர்கட்டு' படத்தின் கதை, 'பசங்க', 'கோலி சோடா', 'வஜ்ரம்' படங்களின் சாயல் சிறிதும் வந்துவிடக்கூடாது என கவனமாக இருக்கிறார் இயக்குனர் ராம்கி (எ) ராமகிருஷ்ணன். வழக்கமாக ப்ளஸ் டூ படித்துவிட்டு கல்லூரி போவதற்கு முன்பு வயசு பருவத்திலும், வாழ்க்கையிலும் தடுமாற்றம், தடம் மாற்றம் ஏற்படும் அப்படிப்பட்ட சூழலில் சிக்கித் தவிக்கும் நான்கு பசங்களின் மன வோட்டத்தை மையமாக வைத்து 'கமர் கட்டு' கதையை உருவாக்கி இருக்கிறார்கள்.

சொதப்பல் கெளதம்...

கார்த்திக்கின் மகன்  கெளதம் தற்போது ஏகப்பட்ட புதுப்படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார். படப்பிடிப்பில் எப்படியோ கெளதமத்தை நடிக்க வைத்து விடுகிறார்கள். ஆனால், டப்பிங் பேச வைப்பதற்குள் தாவு தீர்ந்து விடுகிறதாம். கெளதம் கார்த்திக்குக்கு பதில் வேறு ஒருவரை டப்பிங் பேச வைக்கலாமா என்று யோசித்து வருகிறார்கள் அந்தளவுக்கு சொதப்புகிறாராம், கெளதம்!

பவர் ஸ்டார் பட்டுவாடா...

மாதச் சம்பளம், வாரக்கூலி மாதிரி பவர் ஸ்டார் நடிக்கும் படங்களுக்கு தினசரி பட்டுவாடாவாக பணம் கேட்கிறாராம்.  ஏனென்றால், ஏற்கெனவே நடித்த பல படங்களுக்கு 20 நாள் கால்ஷீட் என்று வாங்கிக் கொண்டு, சின்ன தொகையை அட்வான்ஸாக கொடுத்து, மீதி பணத்துக்கு பெப்பே காட்டி விட்டார்களாம். அதனால்தான் அண்ணாத்தே இந்த அவசர முடிவை எடுத்து இருக்கிறாராம்.

படக் கம்பெனிகளுக்கு தகுந்த மாதிரி பணத்தை தீர்மானிக்கிறாராம். காலை 10 மனிக்கு ஷூட்டிங் ஆரம்பித்து மாலை 6 மணிக்கு படப்பிடிப்பு முடிந்து போகும்போது பணம் தரவேண்டும் இல்லையென்றால் மறுநாள் படப்பிடிப்புக்கு அழைத்தால் கறாராக 'நோ' சொல்லி விடுகிறாராம்.


No comments:

Post a Comment