சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

17 Apr 2015

சவால் விட்டார் சாரதா... சமாளித்தார் மனோரமா!

திரைப்பட நடிகையான மனோரமாவுக்கும் சாரதாவுக்கும் இடையே பேச்சுவாக்கில் ஒரு ரசமான போட்டி ஏற்பட்டது.
''எனக்கு மத்தவங்க மாதிரி ரோடிலே தாராளமா நடக்கணும்னு ரொம்ப நாளா ஆசை!'' என்றார் மனோரமா.
''ஆசையிருந்து என்ன பிரயோஜனம்? நம்ம மாதிரி நடிகைகள் தெருவிலே நடக்கவே முடியாதே'' என்றார் சாரதா சலிப்புடன்.
''நான் மனசு வெச்சா நடப்பேன்'' என்றார் மனோரமா வீரத்துடன்.


முடியவே முடியாது! ரசிகர்கள் உன்னை சும்மா விட்டுட மாட்டாங்க! கலாட்டா பண்ணுவாங்க! உன்னாலே நூறு அடி கூட நடக்க முடியாது!'' என்று சவால் விட்டார் சாரதா.
''நூறு அடி என்ன, நூறு கெஜம் நடக்கிறேன். அதுவும் கூட்டம் இருக்கிற தெருவிலேயே! பார்க்கிறாயா?'' என்று ரோஷத்துடன் சவாலை ஏற்றுக் கிளம்பினார் மனோரமா
சாரதாவிடம் சவால் விட்ட வேகத்தில் மவுண்ட் ரோடு 'ரவுண் டாணா'வுக்கு எதிரில் கவர்ன் மென்ட் எஸ்டேட்டிற்குள் காரில் வந்து இறங்கினார் மனோரமா.
முதன்முதலில் அவர் கண்களில் பட்டது அண்ணா சிலைதான்.
குறுக்கும் நெடுக்கமாகக் கார்கள் பாய்ந்துகொண்டிருந் ததையெல்லாம் கவனிக்காமல்
 
'விறுவிறு' என்று அண்ணா சிலையை நெருங்கினார்.
''யாரம்மா அது குறுக்கே போறது?'' - குறுக்கிட்டு மடக்கியது போலீஸ் காரரின் குரல்.
''வந்து... வந்து... இந்த பஸ் இப்படி வருமா?''
''இந்த பஸ்ஸின்னா எந்த பஸ்..?''
ஏதோ பேசப் போய் வகையாக மாட்டிக்கொண் டார் மனோரமா. எந்த பஸ்ஸைச் சொல்லுவது?
''அதாங்க... வந்து... இந்த 12B-யா என்று ஏதோ ஒரு நம்பரைச் சொன் னார்.
''12B-யா? அது இந்தப் பக்கம் வராதேம்மா?'' - சிரித்துக் கொண்டே பதில் சொன் னார் போலீஸ்காரர்.
''அப்படீங்களா? ரொம்ப தாங்க்ஸ்!'' என்று சொல்லிவிட்டு, 'விட்டால் போதும்' என்று நகர்ந்தார் மனோரமா. இதை ஒரு குட்டி விசிறி கவனித்துவிட்டான். வந்தது ஆபத்து!
''டேய்... மனோரமாடா!''
''ஆ... சிரிப்பு நடிகை மனோரமா'' -தொடர்ந்து பல குரல்கள் கேட்டன. பின்னால் ஒரு சிறு கூட்டமே தொடர்ந்து வந்தது.
பிளாட்பாரத்தில் பேனா விற்பவரிடம் சாவிக் கொத்தில் மாட்டிக் கொள்ளுகின்ற ஒரு சிறிய பேனா வாங்கினார்.
பக்கத்தில் ஒரு புத்தகக் கடைக்குச் சென்று சில புத்தகங்களைப் புரட்டிவிட்டு, ''கடைக்காரர் எங்கே?'' என்று கேட்டார்.
சுற்றியிருந்தவர்கள் போட்டி போட்டுக் கொண்டு அவரவருக்குத் தோன்றிய பதிலை அவசர அவசரமாகச் சொன்னார்கள். அந்தச் சந்தர்ப்பத்தை நழுவவிட்டால், மனோரமாவிடம் நெருங்கிப் பேச இன்னொரு சந்தர்ப்பம் கிடைக்குமா?
''உங்க சினிமாவைத்தான் பார்க்கப் போயிருக்கார்!'' என்று ஒரு போடு போட்டார் ஒர் ஆசாமி.

''வியாபாரத்தையே விட்டுட்டா? அட ராமா!'' என்று கூறிக் கொண்டே நகர்ந்தார் மனோரமா.
வெலிங்டனுக்குப் பக்கத்தில், அழகாகத் தொடுக்கப்பட்ட மல்லிகைப் பூ வாங்கினார். ஒரு ரூபாய் கொடுத்துவிட்டு, பாக்கிச் சில்லறையை கணக்காக எண்ணி வாங்கிப் பையில் போட்டுக் கொண்டார்.
வெலிங்டனில் வெளியே வைக் கப்பட்டிருந்த படங்களைப் பார்த்தார். அங்கிருந்த அவருடைய படத்தையும் பார்த்தார். எல்.ஐ.ஸி. பக்கம் போக பச்சை விளக்குக்குக் காத்திருந்தார். அப்போது ஒரு வாலிபர் சைக்கிளில் வந்து, ''என்னா... நீங்களும் ரோடிலே நடந்து போறீக...!'' என்று 'தில்லானாமோகனாம்பா'ளில் மனோரமா பேசியதைப் போலவே பேசிக் கிண்டலாகக் கேட்டார்.

'ஏன்..? நாங்க ரோட்டுலே நடந்து போகக்கூடாதுங்கறீகளா..?'' என்று அதே பாணியில் பதிலளித்தார் மனோரமா.
'ர்ட்ஸ் காலேஜ்' பஸ் ஸ்டாண்டில் காத்திருந்த பெண்களோடு போய் நின்றுகொண்டு ஒரு பெண்ணிடம் பேச்சுக் கொடுத்தார் மனோரமா. 
''இங்கே எந்த பஸ் வரும்?''
''கோடம்பாக்கத்து பஸ் இங்கே தான் வரும்!'' - சொல்லிவிட்டு ஒரு சிறிய புன்னகை பூத்துக் கொண்டார் அந்தப் பெண்.
'கோடம்பாக்கத்தில் இருக்கும் ஸ்டூடியோ போவதற்காகக் கேட்கிறார்' என்று அந்தப் பெண்மணி நினைத்துவிட்டாரோ?
டி.வி.எஸ். பஸ் ஸ்டாண்டில்...

சிம்ஸனிலிருந்து அரும்பாக்கம் போகும் '24-A' பஸ் காலியாக வந்தது. திடீரென்று மனோரமா அதில் ஏறிவிட்டார். பெண்கள் ஸீட்டில் பல பெண்மணிகளுக்கு மத்தியில் அமர்ந்துகொண்டு பேச ஆரம்பித்தார். கண்டக்டர் அருகில் வந்தார். புகைப்படக்காரர் கண்டக்டரையும் மனோரமாவையும் சேர்த்துப் படமெடுக்கத் தயாரா னார். இதைக் கவனித்த கண்டக்டர் நாணிக்கோணிக்கொண்டு ''போச்சுடா! எனக்கு போட்டோ வேண்டாங்க!'' என்று டிரைவர் பக்கமாக ஓடினார். ''இவரு என்னாங்க இப்படி வெட்கப்படறாரு!'' என்று ஆச்சர்யப்பட்டார்.
'சஃபையர்' ஸ்டாப்பிங்கில் பஸ் நின்றது. அனைவருக்கும் 'வணக்கம்' சொல்லிவிட்டு பஸ்ஸிலிருந்து இறங்கினார் மனோரமா.
சாலையைக் கடந்து 'சஃபையர்' தியேட்டரின் படிகளில் நின்று கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்து விட்டு, அங்கு காத்துக் கொண் டிருந்த தன் காரில் ஏறி, நடிகை சாரதாவிடம் தன் வெற்றிச் செய்தியை அறிவிக்கப் பறந்தார் மனோரமா!


No comments:

Post a Comment