சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

24 Apr 2015

நிர்வாகத்தில் நேர்மை! ‘கெவின்கேர்’ சி.கே. ரங்கநாதன் சொல்லும் வெற்றி ரகசியம்!

ருமான வரித் துறை ரெய்டு என்றாலே எல்லா அலுவல கங்களும் அமளிதுமளிபடும் அல்லவா? சில மாதங்களுக்கு முன்பு கெவின்கேர் நிறுவனத்தில் வருமான வரித் துறை சோதனை நடந்தது. இந்தச் சோதனையின் முடிவில், ‘‘நீங்கள் வரி ஏய்ப்பு செய்ததற்கான எந்த ஆதாரமும் உங்களிடமிருந்து கிடைக்க வில்லை. நீங்கள் உங்கள் நிறுவனத்தை மிக நேர்மையாக நடத்துகிறீர்கள்''என்று பாராட்டி இருக்கிறார்கள் வருமான வரித் துறை அதிகாரிகள்.
இதுபோன்று நேர்மையாக தொழில்செய்து வெற்றி பெறுவதை அனைவரும் கடைப்  பிடிக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் கெவின்கேர் நிறுவனத்தின் நிறுவனர் சி.கே.ரங்கநாதனை நேரடியாக சந்தித்து அவர் பின்பற்றும் வழிமுறைகளைப் பற்றியும், நேர்மையான நிர்வாகம் தொழில் வெற்றிக்கு எப்படி உதவும் என்பதைப் பற்றியும் விரிவாக விளக்குமாறு  கேட்டோம். அவர் தந்த விளக்கம் இதோ...

‘‘பொதுவாக, ஒரு தொழில் என்று வந்துவிட்டால், அதில் ஆறு ஸ்டேக் ஹோல்டர்கள், அதாவது பங்குதாரர்கள் இருக்கிறார்கள். இந்த ஆறு பங்குதாரர்களையும் சரியாக நிர்வாகம் செய்தால், நமக்கு எந்தப் பிரச்னையும் வராது. இதில் முதலாவது ஸ்டேக் ஹோல்டர் என்பவர் வாடிக்கையாளர். கஸ்டமர் இஸ் கிங் என்பார்கள். கஸ்டமர்கள் ஒரு பொருளைத் தேடி நம்மிடம் வரும்போது அந்தப் பொருளை இல்லை என்று நாம் சொல்லக் கூடாது. அவர்கள் கேட்கும் பொருளை சரியான தரத்தில் தந்தால், அவர்கள் நம்மை விட்டு எப்போதும் போக மாட்டார்.
நமது அடுத்த முக்கிய பங்குதாரர் என்றால், பணியாளர்கள்தான். பணியாளர்கள் திருப்தியுடன் மகிழ்ச்சியாக வேலை பார்த்தால்தான் ஒரு தொழில் சரியாக நடக்கும். அவர்களுக்குக் குறைகள் இருந்தால், நாம் தயாரிக்கிற பொருட்களை சரியான நேரத்தில் வாடிக்கை யாளர்களிடம் கொண்டுபோய் சேர்க்க முடியாது.
மூன்றாவது முக்கிய பங்குதாரர்கள் என்றால், வெண்டார்கள் என்று சொல்லப்படுகிற நம் தொழிலுக்குத் தேவையான மூலப்பொருட்களையோ அல்லது சேவைகளையோ நமக்கு அளிப்பவர்கள். இவர்கள் சரியான நேரத்தில் மூலப்பொருட்களையோ அல்லது சேவையையோ தந்தால்தான் தொழிலை சிறப்பாகச் செய்ய முடியும்.
நான்காவது, நமக்கு கடன் தரும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள். இவர்கள் தந்த கடனை சொன்ன தேதியில் திரும்பத் தருவதன் மூலம் அவர்களின் நம்பிக்கையைப் பெறமுடியும். அப்போதுதான் நாம் அடுத்தமுறை கடன் கேட்டுச் செல்லும்போது நம்பிக்கையுடன் கடன் தருவார்கள்.
ஐந்தாவது, அரசாங்கம். எந்த நிலையிலும் அரசுக்குச் செலுத்த வேண்டிய வரி போன்றவற்றைச் சரியாகச் செலுத்திவிட்டால், அரசின் உதவியுடன் நம் தொழிலை மேன்மேலும் சிறப்பாகச் செய்யலாம்.
இந்த ஐந்து பங்குதாரர்களுக்கு தந்ததுபோக மீதம் ஏதாவது இருந்தால் அதனைத்தான் ஆறாவது பங்குதாரரான நிறுவனரோ அல்லது  நிறுவனத்தின் பங்குதாரர்களோ எடுத்துக்கொள்ள வேண்டும். 
உதாரணமாக, தொழில் செய்கிற ஒருவருக்கு திடீரென 10 லட்சம் ரூபாய் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதை சமாளிப்ப தற்காக மூலப்பொருட்களை அளித்த சப்ளையருக்குத் தரவேண்டிய பணத்தைத் தராமல் சில நாட்களுக்கு இழுத்தடிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இதனால் மூலப் பொருள் கிடைப்பது தடைபடும்.  உற்பத்தி குறையும். பொருட்கள் கிடைக்கவில்லை என்றால் வாடிக்கையாளர்கள் எரிச்சல் அடைவார்கள். இதனால் பிசினஸ் கெட்டுப் போகும்.
பணத்தட்டுப்பாடு என்பதற்காக சப்ளையர்களுக்குத் தரவேண்டிய பணத்தையோ, பணியாளர்களுக்குத் தரவேண்டிய சம்பளத்தையோ, வங்கிக்குச் செலுத்தவேண்டிய கடன் பணத்தையோ நிறுத்தவே கூடாது. நல்ல லாபம் வருகிறபோது பெரிய காரை வாங்கத்தான் பலரும் நினைப் பார்கள். சப்ளையர்கள்தானே, நாலு நாளைக்குப்பிறகு பணத்தைக் கொடுக்கலாம் என்று நினைக்கத் தோன்றும். பணியாளர்களுக்கு சம்பளத்தை கொஞ்சம் நிறுத்தித் தந்தால் என்ன என்று நினைக்கத் தோன்றும். இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலேயே புதிதாகத் தொடங்கும் பல பிசினஸ்கள் ஆரம்பித்த சில ஆண்டுகளிலேயே மூடப் படுவதற்குக் காரணம், எதற்கு முன்னுரிமை தரவேண்டும், எதற்கு தரக்கூடாது என்பது தெரியாமல் செயல்படுவதுதான்.  
இந்த சமயத்தில், அரசாங்கத்துக்கு நாம் செலுத்த வேண்டிய வரியை எந்த வகை யிலும் ஏய்க்க முயற்சிக்காமல் உரிய காலத்தில் சரியாகக் கட்டிவிட வேண்டும் என்பது மிகமிக முக்கியமான விஷயம் என்பதைச் சொல்லியாக வேண்டும். நான் தொழில் ஆரம்பித்த காலத்தில் வரிச் செலுத்துவது பற்றி எனக்கு அதிகம் எதுவும் தெரியாது. முதல் வருடம் நாங்கள் நல்லபடியாகத் தொழில் செய்தோம். நல்ல லாபம் கண்டிருந்தோம். எங்கள் வரவு - செலவுக் கணக்குகளை எடுத்துக்கொண்டு,   பாண்டிச்சேரி யில் இருக்கும் எங்கள் ஆடிட்டரை சந்தித்தேன். முதலாம் ஆண்டிலேயே லாபம் பார்த்திருக்கிறீர்கள். அதற்கான வரியைக் கட்டிவிடுங்கள் என்றார் அவர். அவர் அதை சொன்னபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. காரணம், கணக்குவழக்குகளை சரிசெய்து வரிக் கட்டாமல் இருக்கும் வழிமுறைகளைச் சொல்லும் ஆடிட்டராக அவர் இல்லை. எனவே, அவர் சொன்னதை  அப்படியே ஏற்றுக்கொண்டு வரியைக் கட்டிவிட்டேன். அவர் சொன்னதன் அருமையை அடுத்து வந்த நாட்களில்தான் என்னால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடிந்தது.
நான் தொழிலைத் தொடங்கிய போது என்னிடம் பெரிய அளவில் முதலீடு இல்லை. வங்கியில் கடன் வாங்குவதற்கு ஈடாகத் தர என்னிடம் சொத்தும் இருந்ததில்லை. இதனால் கடன் வாங்க வங்கிக்கு அலையாய் அலைந்திருக்கிறேன். கிட்டத் தட்ட  மூன்று ஆண்டு  காத்திருந்த பிறகுதான் 25,000 ரூபாய்  ஓவர்டிராஃப்ட் லிமிட் கடன் கிடைத்தது. இந்தக் கடனை அந்த வங்கி மேலாளர் அவரது அதிகாரத்துக்கு உட்பட்டு தந்துவிட்டார்.
ஆனால், எங்கள் தொழில் வேகமாக வளரவளர, எங்களுக்குத் தேவையான கடனும் அதிகரித்தது. வங்கி மேலாளரின் அதிகாரத்துக்கும் அதிகமாக ஓவர் டிராஃப்ட் கடன் தரவேண்டி வந்தபோது, மண்டல அலுவலகத்தில் அனுமதி வாங்க வேண்டும் என்றார். இதற்கு ஒரு புரபோசல் தரச் சொன்னார். அதைத் தந்தபிறகு பேலன்ஸ்ஷீட் கேட்டார். நாங்கள் வரி கட்டியிருப்பதைப் பார்த்து, அவர் ஆச்சரியப்பட்டார். உடனே, வரி கட்டிய சலானைக் கேட்டார். அதையும் தந்தோம். உடனே நான் தந்த லோன் புரபோசலில்,  ‘சிறிய கம்பெனி யாக இருந்தாலும் வளரத் துடிக்கும் நிறுவனம் இது. மேலும், வரி கட்டுவதால், இவர்களை நம்பி கடன் தரலாம்’ என்று எழுதினார்.  உடனே எங்களுக்குக் கடன் தந்தார்கள். அந்தக் கடனை நாங்கள் மிகச் சரியாக திருப்பிக் கட்டினோம். எங்கள் மீது வங்கிக்கு பெரிய நம்பிக்கை ஏற்பட்டது. இந்த நம்பிக்கையை நாங்கள் ஒருநாளும் இழந்த தில்லை. இன்று நாங்கள் கடன் கேட்டு வங்கிக்குப் போனால், எந்த அடமானத்தையும் தரமாட்டோம் என்று சொல்கிற அளவுக்கு வளர்ந்திருக்கிறோம்.  

வருமான வரியைச் சரியாக செலுத்தியதால் எனக்கு கடன் கிடைத்தது என்பதை நான் எப்போதும் மறக்க மாட்டேன். இப்படி நாங்கள் தவறாமல் வருமான வரி கட்டி வந்தாலும், சில மாதங்களுக்கு முன்பு எங்கள் நிறுவனத்தின் மீது வருமான வரிச் சோதனையை நடத்தினார் கள். அதிகாரிகள் திடீரென வந்ததைப் பார்த்து நானோ, எனது நிறுவனத்தில் வேலை பார்க்கும் பணியாளர்களோ பயந்து போய்விடவில்லை. ‘‘உங்கள் சோதனைக்கு நாங்கள் பரிபூரணமாக ஒத்துழைக்கிறோம். எந்த டாக்குமென்ட்டுகளை வேண்டுமானாலும் நீங்கள் எடுத்துப் பார்க்கலாம். எங்கள் நிறுவனத்தின் எந்த ஊழியரிடம் வேண்டுமானாலும் நீங்கள் விசாரணை நடத்தலாம். காரணம், என் நிறுவனத்தின் கணக்குவழக்குகள் என்னைவிட என் பணியாளர்களுக்கு நன்றாகத் தெரியும்'' என்றேன். அவர்கள் கேட்ட கேள்விகளுக் கெல்லாம் ஆதாரத்துடன் பதில் சொன்னோம். அவர்களால் எங்கள் அலுவலகத்தில் இருந்து எல்லா டாக்குமென்ட்டுகளையும் பார்க்க முடியாது என்பதால் இரண்டு பணியாளர்களை வருமான வரித் துறைக்கே கம்ப்யூட்டருடன் அனுப்பி, அவர்கள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் விளக்கம் தரச் சொன்னேன்.
நிர்வாகத்தை நடத்துவதில் எங்கள் நடைமுறை வெளிப்படை யானது. வரவு, செலவுகளை அன்றே கம்ப்யூட்டரில் பதிந்து விடுவார்கள் என் ஊழியர்கள்.  ஒருமுறை கணக்கு எழுதி விட்டால், பிற்பாடு யார் நினைத்தாலும் அதை மாற்ற முடியாது. அப்படியே யாராவது ஒரு திருத்தம் செய்தால், அந்தத் திருத்தத்தை செய்தது யார், எப்போது செய்தார் என்கிற அத்தனை விவரங்களும் தெரிந்து விடும். அந்த அளவுக்கு நாங்கள் எழுதும் கணக்குகள்  வெளிப்படைத்தன்மையுடன் சுத்தமாக இருக்கும். இந்த வெளிப்படைத்தன்மை மீது எங்களுக்கு இருந்த நம்பிக்கையால் தான் எங்களால் வருமான வரித் துறையினரை எந்த பயமும்  இல்லாமல் எதிர்கொள்ள முடிந்தது.
எங்கள் கணக்குவழக்குகளை எல்லாம் வருமான வரித் துறையினர் நன்கு ஆராய்ந்தபின், ‘‘நீங்கள் வரி ஏய்ப்பு செய்ததற்கான எந்த ஆதாரத்தையும் நாங்கள் கண்டுபிடிக்கவில்லை. ஒரு நிறுவனத்தை நேர்மையாக எப்படி நடத்த வேண்டுமோ, அப்படி நடத்துகிறீர்கள்'' என்று சொன்னார்கள். மனசாட்சியுடன் பிசினஸ் நடத்தும் எனக்கு அவர்கள் சொன்ன வார்த்தைகள் மகிழ்ச்சியையே தந்தது.
எங்கள் நிறுவனம் இன்றைக்கு மிக நேர்மையாக பிசினஸ் செய் வதற்கு மூன்று காரணங்களை சொல்லலாம். ஒன்று, ஆடிட்டிங் நிறுவனம். எங்கள் நிறுவனத்தின் ஆடிட்டிங்கை கேபிஎம்ஜி நிறுவனம் கடந்த ஒன்பது வருடங்களாக செய்துவருகிறது. கணக்குவழக்குகளை பதிவதில் எந்தவொரு சிறு குறைபாடு இருந்தாலும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று சொல்லி விடுவார்கள் அவர்கள். அப்படிப் பட்ட ஒரு ஆடிட்டிங் நிறுவனம் எங்களுக்கு இருப்பது ஒரு பெரிய பலம்.
இரண்டாவது பெரிய பலம், சாஃப்ட்வேர். கணக்கு வழக்குகளை எழுத நிறைய சாஃப்ட்வேர்கள் இருக்கின்றன. ஆனால், உலகத்திலேயே மிகச் சிறந்த சாஃப்ட்வேரான எஸ்ஏபி (SAP) சாஃப்ட்வேரை நாங்கள் பயன்படுத்தத் தொடங்கினோம். பார்ச்சூன் 500 கம்பெனிகள் இந்த சாஃப்ட்வேரை பயன்படுத்துகின்றன. இந்த சாஃப்ட்வேரின் விலை மிக அதிகம். அந்த விலையைக் கொடுத்து வாங்குகிற அளவுக்கு அப்போது எங்கள் பிசினஸ் வளரவில்லை. நீங்களோ சிறிய நிறுவனம். உங்களுக்கு இந்த சாஃப்ட்வேர் தேவையா என்றுகூட என்னிடம் சிலர் கேட்டார்கள். நாங்கள் பெரிதாக வளரப் போகிறோம். அப்போது எங்கள் கணக்குவழக்குகள் சரியாக இருக்க வேண்டும் என்றால் இந்த சாஃப்ட்வேர் அவசியம் தேவை என்று சொல்லித்தான் இந்த சாஃப்ட்வேரை வாங்கினேன். 
எங்கள் மூன்றாவது பெரிய பலம் பணியாளர்கள். என்னிடம் இருக்கும் பணியாளர்கள் உள்ளதை உள்ளபடி பேசுப வர்கள். அல்ப லாபத்துக்காக கணக்கை மாற்றி எழுதுபவர்கள் அல்ல. லஞ்சம் கொடுத்தால் வேலை நடக்கும் என்றெல்லாம் நினைக்கவே மாட்டார்கள். இப்படிப்பட்டதொரு வேல்யூ சிஸ்டத்தை வளர்த்து வைத்திருப்பதால், எங்கள் பணியாளர்கள் நிறுவனத்துக்கு 100 சதவிகிதம் நம்பிக்கையானவர் களாக இருக்கிறார்கள். நானும் அவர்களுக்கு நம்பிக்கையான வனாக இருக்கிறேன். இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் நேர்மையாகச் செய்ய வேண்டும் என நினைத்ததால்தான் எங்களால் இன்றைக்கு இவ்வளவு பெரிய நிறுவனமாக வளர முடிந்திருக்கிறது.

சிறிய அளவில் தொழில் செய்பவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது இரண்டு விஷயங்களைத்தான். ஒன்று, நல்ல சாஃப்ட்வேரை வாங்கி, கணக்குவழக்குகளை சரியாக பதிந்துவிடுங்கள். அதிகம் செலவழிக்க முடியாது என்பதற் காக தரமற்ற சாஃப்ட்வேர்களை வாங்காதீர்கள். இரண்டாவது, அரசாங்கத்துக்கு கட்ட வேண்டிய வரியை சரியான நேரத்தில் சரியாகக் கட்டி விடுங்கள். வரி ஏய்ப்பு செய்வதன் மூலம் அடையும் சிறிய லாபம், எதிர் காலத்தில் பெரிய நஷ்டத்தையே ஏற்படுத்தும். இந்த இரண்டையும்  செய்தாலே போதும் உங்கள் தொழில் பன்மடங்காக பெருகி வளரும். வங்கிகளிடமிருந்து நிதியுதவி நிச்சயம் கிடைக்கும்’’ என்று சொல்லி முடித்தார். 
இன்றைய இளம் தொழில் முனைவோர்களுக்கு கெவின்கேர் ரங்கநாதன் ஒரு ரோல் மாடல். அவரைப் போல நேர்மையாகத் தொழில் செய்தால் தொழில் வளர்வதுடன் யாருக்கும், எதற்கும் பயப்படத் தேவையில்லை! 


No comments:

Post a Comment