சினிமா என்பது ஒரு மாயை. இயக்குநர் எனும் தனிப்பட்ட ஒரு மனிதனின் கற்பனை காட்சி அடுக்குகள். திரையில் நிகழும் எதுவும் நிஜமில்லை. ஒரு சினிமாவைப் பார்த்து நாம் ரசிக்கலாம். கொண்டாடலாம். அது ஒரு என்டர்டெயின்மென்ட். அவ்வளவுதான்.
120 ரூபாய் கொடுத்து டிக்கெட் எடுத்து சினிமா பார்க்கும் ரசிகனுக்கு இதெல்லாம் தெரியாமலில்லை. ஆனாலும் அவன் அந்தப் படத்தினை மீண்டும் மீண்டும் பார்த்து வெள்ளிவிழா கொண்டாட வைக்கிறான். கதாநாயகனுக்கு கட் அவுட் வைக்கிறான். பாலபிஷேகம் செய்கிறான். இப்படி தன் வாழ்வுடன் சினிமாவை இணைத்துக்கொள்ளும் சராசரி மனிதனிடம் '' நீ இதுவரை பார்த்த இரண்டரை மணி நேர சினிமா எதுவும் நீ நம்பி ரசித்ததில்லை. அதெல்லாம் ஒரு தனி மனிதக் கனவு. இவ்வளவு நேரம் நீ கொண்டாடிய விர்ச்சுவல் வெறும் கானல் நீர்'' என்றால் எப்படி இருக்கும்?
இயக்குநர் பார்த்திபன் லாஜிக்கலாக தொடங்கி வைத்ததுதான் இந்த சைக்காலஜிகல் ப்ராப்ளம். ப்ரீஃப் சைக்கோசிஸ் என்னும் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவன் அதாவது இல்லாததை இருப்பதாய் கற்பனை செய்துகொள்ளும் மனநிலையை 'குடைக்குள் மழை'யாய் கொண்டு வந்தார்.
நாம் பார்த்த இரண்டரை மணி நேரப் படத்தில் இரண்டு மணி நேர நிகழ்வுகள் எதுவும் கதாநாயகனின் கற்பனையே என்றதில் திரைக்கதை ஜாலத்தைக் கண்டு வியந்தவன்தான் இந்த சாமானிய ரசிகன். ஆனால் அவனுக்கு அது ஏமாற்றமாக இல்லை. புதுமையான திரைக்கதை ரசிக்கப்பட்டது. அந்தப் படத்தின் நீட்சியே தன் சமீபத்திய படமான 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்திலும் இல்யூஷன் என்று கொண்டு வந்தார்.
திரையில் விரியும் வாழ்வில் ஏதோ ஒரு சிறு உண்மை (அதாவது இயக்குநரின் கதையின்படி) மட்டும் வைத்துக்கொண்டு மற்றதெல்லாம் அவரவர்களின் கற்பனை என்றே நகர்ந்த இந்தப் படத்தில் முடிவே இருக்காது. அதை ஆடியன்ஸ் வசம் விட்டுவிட்டு தப்பித்துவிட்டார் இயக்குநர். இதே உத்திதான் எஸ் ஜே. சூர்யா இயக்கிய 'இசை' திரைப்படமும். 'எனக்குள் ஒருவன்' படத்திலோ லூசியா என்னும் மாத்திரை மூலமாக வாழும் வாழ்வு சினிமா நிஜமல்ல. கனவே என்றார்கள். 'அனேகன்' படமோ தற்போதைய விர்ச்சுவல் லைஃப் எவ்வாறு மனிதனிடமிருந்து பிரிக்க முடியாமல் பின்னிப் பிணைந்துள்ளது என்று கூறினாலும் எல்லாமே நாயகியின் கற்பனையே. முன்பே கரு. பழனியப்பன் 'மந்திரப் புன்னகை' என்ற தன் படத்தில் இதனை கூறியிருந்தார்.
இப்போதெல்லாம் சினிமா பார்த்துக்கொண்டிருக்கும்போது தூங்கும் ஒரு கேரக்டரைக் காட்டினாலே டவுட் வந்துவிடுகிறது. கடைசியில் இந்த கேரக்டர் கண்விழித்து 'நீங்கள் இதுவரை பார்த்த மூன்று மணி நேர சினிமா என் கனவு' என்று சொல்லிவிடுமோ என்று.
இப்போதெல்லாம் சினிமா பார்த்துக்கொண்டிருக்கும்போது தூங்கும் ஒரு கேரக்டரைக் காட்டினாலே டவுட் வந்துவிடுகிறது. கடைசியில் இந்த கேரக்டர் கண்விழித்து 'நீங்கள் இதுவரை பார்த்த மூன்று மணி நேர சினிமா என் கனவு' என்று சொல்லிவிடுமோ என்று.
பாடல் காட்சிகளுக்கு மட்டும் கனவுலகுக்கு சென்றுகொண்டிருந்த இயக்குநர்கள் இப்போது முழுப்படமுமே கனவாக்கிவிடுகிறார்கள். கதைப்பஞ்சமா? இயக்குநர்கள் எவரும் சினிமாவில் ரிஸ்க் எடுக்கத் தயங்குகிறார்களா?
தான் நிஜத்தில் செய்ய முடியாத சாகசத்தை சினிமாவில் கதாநாயகன் செய்வதைப் பார்த்து விசிலடித்து ரசித்த சாமானிய ரசிகன் இப்போதெல்லாம் ''எல்லாமே பொய்யா'' என்று ஏமாற்றத்துடன் திரும்புகிறான் திரையரங்கினைவிட்டு!
தான் நிஜத்தில் செய்ய முடியாத சாகசத்தை சினிமாவில் கதாநாயகன் செய்வதைப் பார்த்து விசிலடித்து ரசித்த சாமானிய ரசிகன் இப்போதெல்லாம் ''எல்லாமே பொய்யா'' என்று ஏமாற்றத்துடன் திரும்புகிறான் திரையரங்கினைவிட்டு!
No comments:
Post a Comment