சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

27 Apr 2015

மகளுக்கு ஏன் 'இந்தியா' என பெயர் சூட்டினேன்- ஜான்டி ரோட்ஸ் விளக்கம்

ந்திய கலாச்சாரம் என்னை கவர்ந்ததால் தனது பெண் குழந்தைக்கு 'இந்தியா' என பெயர் சூட்டியதாக தென்ஆப்ரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார்.

தென்ஆப்ரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் ஐ.பி.எல் அணியான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பீல்டிங் பயிற்சியாளராக உள்ளார். இவரது மனைவி மெலின் ஜெனி நேற்று முன்தினம் மும்பை சாந்தா க்ருசில் உள்ள தனியார் மருத்துவமனையில் அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்தார். குழந்தைக்கு இந்தியா ஜெனி ரோட்ஸ் என்று ஜான்டி பெயர் சூட்டினார். குழந்தைக்கு 'இந்தியா' என்று பெயர் சூட்டியது, இந்தியர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில், ஜான்டி இது குறித்து கூறுகையில், 

''வாழ்க்கையில் தென்ஆப்ரிக்காவுக்கு பிறகு பெரும்பாலான நாட்களை இந்தியாவில்தான் கழித்துள்ளேன். இந்தியா எனக்கு இரண்டாவது தாய்நாடு. இந்திய மக்களின் கலாச்சாரம் என்னை மிகவும் கவர்ந்தது. மதநம்பிக்கை கொண்ட அதே நேரத்தில் முற்போக்கு சிந்தனை நிறைந்த மக்கள் இங்கு நிறைந்துள்ளனர். இதனால்தான் எனது மகளுக்கு 'இந்தியா' என்று பெயர் சூட்டினேன். எனது மகளும் வருங்காலத்தில் 'இந்தியா' போல மதநம்பிக்கையுடன் சமூக சீர்திருத்த சிந்தனைகளுடன் திகழுவாள்'' என்றார்.
ஜான்டியின் மனைவி ஜெனி மெலீன் தண்ணீர் தொட்டிக்குள் வைத்து குழந்தையை பிரசவித்தது குறிப்பிடத்தக்கது. தாயும் சேயும் நலமாக இருப்பதையடுத்து நேற்றே மருத்துவமனையில் இருந்து ஜெனி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். முன்னதாக பிரசவம் பார்த்த மருத்துவர்கள்,செவிலியர்களுடன் ரோட்ஸ் தம்பதி புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தனது மனைவிக்கு பிரசவம் பார்த்த மருத்துவர்களுக்கு தென்ஆப்ரிக்க பீல்டிங் மேஸ்ட்ரோ தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்து கொண்டார்.



No comments:

Post a Comment