இங்கிலாந்தில் தொழில்முறையிலான ஆண்கள் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து பெண் ஒருவர் சாதனை படைத்துள்ளார். அங்கு நடைபெற்று வரும் சென்ட்ரல் யாங்ஷயர் லீக்கில் விளையாடும் ஒரே வீராங்கனை என்ற பெருமையை இங்கிலாந்தை சேர்ந்த கேத் கிராஸ் பெற்றுள்ளார்.
இங்கிலாந்தில் தொழில்முறை கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும் சென்ட்ரல் யாங்ஷயர் லீக் பிரபலமானது. இதில் அண்மையில் கிளிஃப்டன் அணியுடனான ஆட்டத்தில் ஹேவுட் அணி மோதியது. இந்த போட்டியில் ஹேவுட் அணிக்காக கேத் கிராஸ் விளையாடினார். இந்த தொடரில் விளையாடிய முதல் வீராங்கனை கேத் என்பது குறிப்பிடத்தக்கது.
கிளிஃப்டன் அணிக்கு எதிராக 7 ஓவர் வீசி 19 ரன்களை விட்டுக் கொடுத்த கேத், 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். கேத்தின் சிறப்பான பந்துவீச்சால் ஹேவுட் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து மகளிர் தேசிய அணியிலும் 23 வயது கேத் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து கேத் கூறுகையில்,'' ஆண்களுக்கான தொழில்முறை கிரிக்கெட் அணிகளில் பெண்களும் இடம் பெற வேண்டும். கவுரவமிக்க சென்ட்ரல் யாங்ஷயர் கிரிக்கெட்டில் விளையாடுவது மகிழ்ச்சியை தருகிறது. இந்த அணிக்காகத்தான் எனது சகோதரனும் விளையாடி வருகிறான். அக்கா, தம்பி ஒரே அணியில் விளையாடும் வாய்ப்பு யாருக்கு கிடைக்கும்'' என்றார்.
கேத் கிராசின் தந்தை டேவிட் புகழ்பெற்ற கால்பந்து வீரர். வெஸ்ட்ஹாம் யுனைடெட், மான்செஸ்டர் சிட்டி போன்ற கால்பந்து அணிகளுக்காக விளையாடியுள்ளார். சகோதரன் பாபியும் இதே ஹேவுட் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த போட்டியில் கேத் பந்துவீச்சில் கிளிஃப்டன் வீரர் கொடுத்த கேட்சையும் பாபி கோட்டை விட்டார்.

No comments:
Post a Comment