சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

7 Apr 2015

ஏப்ரல் 7: நடிகர் ஜாக்கி சானின் பிறந்த நாள் - அவரிடம் இருந்து அறிய பத்து பாடங்கள்

ஆக்ஷன் மற்றும் காமெடி கலந்து திரை விருந்து, ஜாக்கிசான் படங்களில் எப்பொழுதும் நமக்குண்டு. அவரின் பிறந்தநாளான இன்று அவரிடம் இருந்து அறிய பத்து பாடங்கள்...
துவக்கத்தால் துவளாதே :
பிறக்கும் பொழுது ஐந்து கிலோ எடையோடு இருந்தார் அவர். மருத்துவர் ஏழையான இவரின் பெற்றோரால் வளர்க்க முடியாது என்று தத்து கேட்டார். கொடுக்க முடியாது என்று கம்பீரமாக இவரை தூக்கிக்கொண்டு வந்து விட்டனர். வேலைக்காக ஆஸ்திரேலியா நோக்கி அவர்கள் நகர்ந்த பின்பு ஹாங்காங்கில் கூலி வேலை செய்து தன்னுடைய வாழ்க்கையை நகர்த்த வேண்டிய கட்டாயம் ஜாக்கிக்கு உண்டானது. இன்றைக்கு ஆசியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் அவர்!
செய்வதில் சிறந்திடு :
மூன்று வேளை சூப் குடிக்க கூட வருமானம் போதாமல் போனதால் அம்மா,அப்பாவுடன் சேர்ந்திருக்க ஆஸ்திரேலியா கிளம்பினார். போர்க்கலைகள் கற்றிருந்தபடியால் அங்கே ஸ்டன்ட்மாஸ்டராகவே வேலை கிடைத்தது.   நடுநடுவே ஹோட்டலில் வேறு வேலை பார்த்து அப்பா அம்மாவுக்கு தொல்லை தராமல் இருந்தார். ஆனாலும்,செய்கிற ஸ்டன்ட்களில் உயிரைக்கொடுத்து செயல்பட்டார். வில்லி சான் என்பவரின் கவனம் திரும்பியது. நாயகனாக நடிக்கும் ' 'fist of fury' படத்தின்   வாய்ப்பு  ஒரே ஒரு டெலிகிராம் மூலம் வந்து சேர்ந்தது.
சுயத்தை நம்பு :
ஹாங்காங்கில் சில படங்களில் நடித்தாலும் அவை பெரிதாக ஓடவில்லை. யோசித்து பார்க்கையில் தன்னுடைய திறமையை முழுமையாக இயக்குனர்கள் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று அவருக்கு புரிந்தது. ஆக்ஷன் என்றால் முகத்தை சீரியஸ் ஆகவே வைத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் உடைத்து அதில் நகைச்சுவையை புகுத்தினார். தன்னுடைய ஐடியாக்களை படத்தில் இணைத்து நடிக்க பாக்ஸ் ஆபிஸ் ஹிட்கள் குவிந்தன.

உண்மையை சொல் ! உயர்ந்து நில் :
ஆரம்ப காலத்தில் போர்னோ படத்தில் ஜாக்கி நடித்தார் என்று கிசுகிசுக்கப்பட்ட பொழுது ,"ஆமாம் ! வாய்ப்புகள் தேடிக்கொண்டு இருந்த பொழுது அப்படி படத்தில் நடிக்கவே செய்தேன். அதில் எனக்கு வருத்தமொன்றும் இல்லை." என்று சொன்னார் ஜாக்கி. அவரின் ஆங்கிலம் சகிக்கலை என்று விமர்சகர்கள் எழுதிய பொழுது ,"அதுவும் சரியே ! ஸ்டன்ட் செய்வதை விட ஆங்கிலம் பேசுவது கடினமான ஒன்றே !" என்று ஒப்புதல் தந்தார் ஜாக்கி !
பிடிக்காவிட்டாலும் காத்திரு :
ரஷ் ஹவர் எனும் அமெரிக்க படத்தில் நடித்தார் ஜாக்கி சான். அமெரிக்காவின் கதை சொல்லும் பாணி,அவர்களின் நகைச்சுவை எதுவுமே பிடிக்காமலே அப்படத்தில் நடித்திருந்தார். அடுத்த படம் அதே சீரீசில் வந்த பொழுது நல்ல சம்பளம் என்று நடிக்க ஒப்புக்கொண்டார். "எனக்கு பிடிக்கவில்லை தான் ; அதற்காக வருகிற வாய்ப்பை கைவிட நான் முட்டாள் இல்லை !" என்று பிற்காலத்தில் சொன்னார் அவர்.
உடைவது உன்னதம் பெறவே ! :
இடுப்பு எலும்பு உடைந்து இருக்கிறது,முகமே சின்னாபின்னம் ஆகியிருக்கிறது. காப்பீட்டு நிறுவனங்கள் கையெடுத்து கும்பிட்டு அனுப்புகிற அளவுக்கு எல்லா பாகமும் காலி ஆகி இருக்கிறது ஜாக்கி சானுக்கு. ஒரு முறை மண்டையோட்டில் அடிபட்டு எட்டு மணிநேர போராட்டமே அவரை மீட்டது. அந்த ஓட்டையை செயற்கை பூச்சின்  மூலம் அடைத்துக்கொண்டு நடிக்க அவர் மீண்டும் வந்த பொழுது பலருக்கு நெஞ்சடைத்தது.
வழிகளைத் தேடாதே ! உருவாக்கு :
போலீஸ் ஸ்டோரி படத்தில் இவருடன் நடிக்க வந்த ஸ்டன்ட் ஆட்கள் அநியாயத்துக்கு அடிபட்டு நடிக்கவே மறுத்தார்கள். வேறு வழியே இல்லை என்று எல்லாரும் கை விரித்த பொழுது தானே ஸ்டன்ட் பயிற்சி பள்ளி ஆரம்பித்து ஆட்களை உருவாக்கினர் ஜாக்கி. அவர்களுக்கு ஏற்படும் காயங்களுக்கு முழு மருத்துவ செலவை அவரே ஏற்றுகொள்ள படம் அதிவேகத்தில் உருவானது.
வெல்லும் வரை விடாதே  :
டிராகன் லார்ட் படத்தில் ஜியான்ஜி கேம் பற்றிய ஒரு காட்சியில் ஜாக்கி எதிர்பார்த்தது போல காட்சி அமையவே இல்லை. எத்தனை டேக்குகள் எடுத்து அந்த காட்சியை ஓகே செய்தார் அவர் தெரியுமா ? மூச்சைப்பிடித்து கொள்ளுங்கள் : 2900 !
சொந்த காலில் நில் மகனே ! :
தன்னுடைய பல நூறு கோடி சொத்துக்கு தன் மகன் வாரிசில்லை என்பதில் தெளிவாக இருக்கிறார் ஜாக்கி. " அவன் சம்பாதித்து வாழட்டும். நான் ஈட்டியவை அறக்காரியங்களுக்கு பயன்படட்டும் !" என்று சொல்கிற ஜாக்கி முழுச்சொத்தையும் அந்த மாதிரி பணிகளுக்கே எழுதி வைக்க போவதாக அறிவித்திருக்கிறார். தன்னுடைய பிள்ளையை இளமைக்காலத்தில் ராணுவத்துக்கு அனுப்பி பண்பட வைத்தார் !

பாணியை மாற்று ! :
பல வருட காலமாக ஆக்ஷனில் கலக்கிக்கொண்டு இருந்த ஜாக்கி அப்படிப்பட்ட படங்களில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்தார். "எனக்கு இப்படிப்பட்ட படங்களில் இனிமேல் நடிக்க முடியாது ! வயதாகி விட்டது. நான் வெறும் ஆக்சன் ஸ்டார் மட்டுமில்லை ; நான் ஒரு உண்மையான நடிகன் என்று நிரூபிக்க விரும்புகிறேன். என் மீது இருக்கும் இமேஜை உடைக்கவே ஆசை. ஆசியாவின் ராபர்ட் டி நிரோ என்று பெயர் எடுக்க ஆசை எனக்கு ! என்னால் நடிக்கவும் முடியும். அதை சீக்கிரமே காண்பீர்கள் !" என்றிருக்கிறார் அவர். அது தான் ஜாக்கி சான் !


No comments:

Post a Comment