சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

7 Apr 2015

திருட்டு கேமரா வைத்திருப்பதை நாமும் கண்டுபிடிக்கலாம்!

சொந்த நிகழ்ச்சிகள் மற்றும் சுற்றுலாவிற்காக வெளியூர் விடுதிகளில் தங்கவும், டிரஸ் எடுக்கவும் நேரும்போது அறையினுள் ஊசிமுனை அளவேயுள்ள கண்ணுக்குப்புலப்படாத ரகசிய கேமராக்கள் பொருத்தியுள்ளதை, அவசரத்தில் அறிந்துகொள்ள இயலாததால், நமது அறியாமையை பயன்படுத்தி இதுநாள் வரை பல்வேறு குற்றங்கள் நடந்திருக்க வாய்ப்புள்ளது.கோவா ஜவுளிக்கடைகளில் உடை மாற்றும் இடங்களிலேயே மத்திய அமைச்சர் ஸ்மிருதி ரானியின் சமயோஜித நடவடிக்கையால் ரகசிய கேமரா இருந்ததை அறிந்து நாடே அதிர்ச்சி அடைந்ததுடன், ரகசிய கேமரா குறித்த ஒரு விழிப்புணர்ச்சியும், முன் எச்சரிக்கையும் தோன்றியுள்ளது. மேலும் இது போன்ற ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருப்பதை நாம் முயன்றால் கண்டறியலாம்.


நாம் தங்கும் இடங்களிலோ, குளியலறைகளிலோ, உடை மாற்றும் இடத்திலோ முதலில் வெளிச்சம் வராமல் அறைக்கதவு, சன்னல்களை அடைத்துவிட்டு உங்கள் மொபைலில் உள்ள கேமராவை ஆன் செய்யுங்கள். மேலும், மொபைலில் புகைப்படம் எடுக்கும்போது வரும் பிளாஷ் வெளிச்சத்தை ஆப் செய்துவிட்டு அறையிலுள்ள சுவர் மற்றும் பொருட்களை புகைப்படம் எடுத்து  புகைப்படத்தை கவனித்தால் ஊசிமுனை அளவேயுள்ள ரகசிய கேமரா அறையினுள் பொருத்தப்பட்டிருப்பின் அது இருட்டுப்புகைப்படத்தில் சிகப்பு நிற புள்ளிகளாகத் தெரியும்.

இதைவைத்து அறையினுள் ரகசிய கேமராக்கள் பொருத்தியுள்ளதை அறியலாம். ஆகவே சற்றே கவனம் செலுத்தி அமைச்சர் ஸ்மிருதி இரானி போல செயல்பட்டால் திருட்டு கேமராவிலிருந்து தப்பிக்கலாம்... உஷார்... உஷார்... உஷார்...


No comments:

Post a Comment