மிதுனம், கன்னி ஆகிய ராசிகளுக்கு அதிபதி புதன் ஆவார். கன்னி புதனுக்கு உச்ச, மூலத்திரிகோண, ஆட்சி வீடாகும். இதனால் கன்னியா புதனுக்கு அதிபலம் உண்டாகும். மற்ற கிரகங்களுக்கு இந்த அமைப்பு ஏற்படவில்லை. மேஷமும், விருச்சிகமும், கடகமும் பகை வீடுகளாகும். ரிஷபமும், துலாமும் சிம்மமும் நட்பு வீடுகளாகும். மீனத்தில் நீசமாவார். பலம் குறையும். புதன் அரை சுபர் ஆவார். புதன் சுபக்கிரகங்களுடன் கூடினால் சுபர் ஆவார். பாபக் கிரகங்களுடன் கூடினால் பாபி ஆவார்.
புத பலம் பெற்றவர்களுக்கு வியாபார நுணுக்கம் தெரியவரும். கணிதம், விஞ்ஞானம், எழுத்து, பத்திரிகை, ஓவியம், சிற்பம், பேச்சு, கதை, கவிதை, காவியம், கைவினைத் தொழில், நடிப்பு, நாடகம், நகைச்சுவை, நடனம், சங்கீதம், பாட்டு, வைத்தியம், வேதாந்த ரகசியம், ஞானம், பித்தளை, இலக்கிய, இலக்கண ஞானம், பிற பாஷைகளில் பாண்டித்தியம், பச்சைக் காய்கறி, பொழுதுபோக்கு அம்சங்கள் ஆகியவை மூலம் அனுகூலம் உண்டாகும்.
புத பலம் குறைந்தவர்களுக்கு தோல், தோள்பட்டை, மன நிலை பாதிப்பு, நரம்புத் தளர்ச்சி போன்ற உபாதைகள் ஏற்படும். பொதுவாக புதன் சந்திர ராசிக்கு 2, 4, 6, 8, 10, 11ஆம் இடங்களில் இருந்தால் சுப பலன்கள் உண்டாகும்.
1, 3, 5, 7, 9, 12ஆம் இடங்களில் இருப்பது சிறப்பாகாது. புதனுக்கு அதிதேவதையும், பிரத்யதி தேவதையும் மகாவிஷ்ணு ஆவார். புதன் பலம் குறைந்திருக்கும்போது மகாவிஷ்ணுவின் ஆலயத்துக்குச் சென்று வழிபடுவதன் மூலம் நலம் உண்டாகும்.
இந்த மன்மத வருஷத்தில் கோசார ரீதியாக ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் புத பகவான் அளிக்கக்கூடிய பலாபலன்கள் என்னென்ன என்று விரிவாக அறிந்து கொள்வோம். மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு காலத்தில் புதன் பலம் உள்ளவர்களுக்கு சுப பலன்கள் கூடும்.
புத பலம் இல்லாதவர்கள் மகாவிஷ்ணுவை புதன்கிழமைதோறும் வழிபடுவதன் மூலம் நலம் பெறலாம். ஜாதகப்படி இந்த மன்மத வருஷத்தில் சுப யோக பலம் உள்ள தசை, புக்தி, அந்தரங்கள் நடைபெறுமானால் நிச்சயம் நலமே உண்டாகும்.
மன்மத வருஷம் ஆரம்பத்தில் உங்கள் ராசியிலேயே புதன் உலவுகிறார். சூரியன், செவ்வாயுடன் அவர் கூடியிருப்பதால், உஷ்ண சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். ஏப்ரல் 26 முதல் 2ம் இடம் மாறுவதால், பேச்சில் இனிமையும் திறமையும் கூடும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். ஜூன் 28 முதல் 3ம் இடம் மாறுவதால், விளையாட்டு, இசை ஆகியவற்றில் ஈடுபாடு கூடும். ஜூலை 15 முதல் 4ம் இடம் மாறுவதால், மாணவர்களது நிலை உயரும். ஆகஸ்ட் 1 முதல் 5ம் இடம் மாறுவதால், தெய்வப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பூர்விகச் சொத்துக்கள் கிடைக்கும்.
ஆகஸ்ட் 21 முதல் 6ம் இடம் மாறுவதால், எதிர்ப்புக்கள் இருந்தாலும், செப்டம்பர் 15 முதல் வக்கிர நிலை பெறுவதால், பேச்சில் நிதானம் தேவை. அக்டோபர் 4 முதல் 25 வரை சிறப்பாக அமையும். அக்டோபர் 26 முதல் நவம்பர் 11 வரை உள்ள காலத்தில் வாழ்க்கைத்துணை நலனில் கவனம் தேவை. நவம்பர் 11 முதல் மாதம் முடிய புதன் 8ம் இடத்தில் உலவும் நிலை அமைவதால், எதிர்பாராத பொருட்சேர்க்கை நிகழும். டிசம்பர், ஜனவரி மாதங்களில் புதன் குருவின் வீட்டில் உலவுவதால், புத்திசாலித்தனம் பளிச்சிடும். பிப்ரவரி 6 முதல் மார்ச் 11 வரை உள்ள காலம் விசேஷமானதாகும். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். மார்ச் 12 முதல் வருடம் முடிய மனச்சோர்வும் உடல் சோர்வும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும்.
உங்கள் ராசிக்கு புதன் யோக காரகர் ஆவார். வருட ஆரம்பத்தில் அவர் ராசிக்கு 12லும், அதன் பிறகு ராசியிலும் உலவுவார். ஜூன் 27 வரை எதிர்பாராத செலவுகளும் மக்களால் சங்கடமும் ஏற்படும். அதன்பிறகு 2ம் இடம் மாறுவதால், செல்வ நிலை உயரும். மக்களாலும், உற்றார்உறவினர்களாலும் அனுகூலம் ஏற்படும். ஜூலை 15 முதல் மாதம் முடிய சில இடர்ப்பாடுகள் ஏற்படும்.
ஆகஸ்ட் முதல் நவம்பர் 10 வரை உள்ள காலம் விசேஷமானதாகும். நண்பர்களாலும் உறவினர்களாலும் அனுகூலம் உண்டாகும். மாணவர்களது நிலை உயரும். வியாபாரத்தில் விசேஷமான வளர்ச்சி காணலாம். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். நவம்பர் 11 முதல் மாதம் முடிய வாழ்க்கைத்துணை நலனில் கவனம் தேவைப்படும். டிசம்பர் முதல் பிப்ரவரி 5ம் தேதி வரை உள்ள காலத்தில் எதிர்பாராத பொருட்சேர்க்கை நிகழும். மாணவர்களது நிலை உயரும்.
பிப்ரவரி 6 முதல் மார்ச் 29 வரை உள்ள காலத்தில் புனிதமான காரியங்களில் ஈடுபாடு கூடும். செல்வ நிலை உயரும். மார்ச் 30 முதல் வருடம் முடிய உள்ள காலம் சோதனையானது. மக்களால் சங்கடங்கள், மன அமைதிக் குறைவு ஆகியவை ஏற்படும். விரும்பத்தகாத இடமாற்றமோ, நிலை மாற்றமோ ஏற்படும். வியாபாரத்தில் கவனம் தேவை. மறதியால் அவதிப்பட நேரும். எதிலும் நிதானமாக யோசித்து ஈடுபடவும்.
புத்தாண்டு ஆரம்பம் மிகச் சிறப்பாக இருக்கும். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். ஏப்ரல் 25க்குள் சொத்துக்கள் சேரும். ஏப்ரல் 26 முதல் ஜூன் 27 வரை உள்ள காலம் சோதனையானது. இடமாற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஜூன் 28 முதல் ஜூலை முடிய உள்ள காலம் சிறப்பானதாகும். பண வரவு கூடும்.
ஆகஸ்ட் 1முதல் 20 வரை எதிலும் விழிப்பு தேவை. தொழில் ரீதியாகப் பிரச்னைகள் ஏற்படும். ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 15 வரை உள்ள காலம் விசேஷமானது. கணிதம், எழுத்து, பத்திரிகை, ஓவியம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். புதிய சொத்துக்கள் சேரும்.
செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 3 வரை உள்ள காலத்தில் பொறுமையும் நிதானமும் அவசியம் தேவை. அக்டோபர் 4 முதல் டிசம்பர் முடிய உள்ள காலத்தில் நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். டிசம்பர் 1 முதல் பிப்ரவரி 5 வரை உள்ள காலத்தில் கூட்டாளிகளாலும் மனைவியாலும் சங்கடங்கள் ஏற்பட்டு விலகும். பிப்ரவரி 6 முதல் வருடம் முடிய உள்ள காலம் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத பொருட்சேர்க்கை நிகழும். பக்தி மார்க்கத்திலும் ஞான மார்க்கத்திலும் நாட்டம் கூடும். ஜலப்பொருட்களால் ஆதாயம் கிடைக்கும். மாணவர்களது நிலை உயரும். தகவல் தொடர்பு இனங்களால் வருவாய் கிடைக்கும். நல்ல நண்பர்கள் அமைவார்கள்.
புத்தாண்டு ஆரம்பம் மிகச் சிறப்பாக இருக்கும். ஜூன் 27 வரை செல்வ நிலையில் வளர்ச்சி காணலாம். சுய தொழில் விருத்தி அடையும். செல்வாக்கு உயரும். முக்கியஸ்தர்களது தொடர்பு பயன்படும். ஜூன் 28 முதல் ஜூலை முடிய உள்ள காலம் சிறப்பானதாகாது. வீண் செலவுகளும் இழப்புக்களும் ஏற்படும். உடல்நலனில் அக்கறை தேவைப்படும். ஆகஸ்ட் 1 முதல் 20 வரை உள்ள காலத்தில் பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். ஆகஸ்ட் 21 முதல் அக்டோபர் 25 வரை எதிலும் யோசித்து ஈடுபடுவது நல்லது. தொழிலில் அதிக கவனம் தேவை. அக்டோபர் 26 முதல் நல்ல திருப்பம் உண்டாகும். நண்பர்கள், உறவினர்களால் அனுகூலம் ஏற்படும். நவம்பர் 11 முதல் மாதம் முடிய மக்கள் நலனுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். வயிறு சம்பந்தமான உபாதைகள் உண்டாகும். டிசம்பர் 1 முதல் பிப்ரவரி 5 வரை வியாபாரத்தில் அபிவிருத்தி காணலாம். எதிர்பாராத பொருட்சேர்க்கை நிகழும்.
பிப்ரவரி 6 முதல் 24 வரை வாழ்க்கைத்துணைவராலும், கூட்டாளிகளாலும் பிரச்னைகள் சூழும். பிப்ரவரி 25 முதல் மார்ச் 11 வரை உள்ள காலத்தில் திடீர்ப் பொருள் வரவு உண்டாகும். மார்ச் 12 முதல் 29 வரை தந்தை நலனில் கவனம் தேவை. மார்ச் 30 முதல் ஏப்ரல் 13 வரை உள்ள காலம் சிறப்பானதாகும். செய்து வரும் தொழிலில் அபிவிருத்தி காணலாம். தகவல் தொடர்பு இனங்கள் லாபம் தரும்.
புத்தாண்டு ஆரம்பம் சிறப்பாக இருக்கும். தெய்வப்பணிகளில் ஈடுபாடு கூடும். தந்தையாலும் உடன்பிறந்தவர்களாலும் அனுகூலம் ஏற்படும். இயந்திரப்பணியாளர்கள் ஏற்றம் பெறுவார்கள். ஜூன் 28 முதல் ஜூலை 14 வரை உள்ள காலத்தில் ஆதாயம் மேலும் கூடும். மாணவர்களது நிலை உயரும். பல வழிகளில் வருமானம் வந்து சேரும்.
ஜூலை 15 முதல் அக்டோபர் 21 வரை சிறுசிறு பிரச்னைகள் ஏற்படும். இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை ஏற்படும். ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 14 வரையிலும், அக்டோபர் 4 முதல் 25 வரையிலும் உள்ள காலகட்டம் மிகச் சிறப்பானதாகும். செல்வாக்கும் மதிப்பும் உயரும். அக்டோபர் 26 முதல் நவம்பர் 10 வரை உள்ள காலம் சோதனையானது. எதிலும் விழிப்பு தேவை. நவம்பர் 11 முதல் மாதம் முடிய உள்ள காலத்தில் சொத்துக்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும்.
டிசம்பர் 1 முதல் பிப்ரவரி 5 வரை உள்ள காலத்தில் தெய்வப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பிப்ரவரி 6 முதல் 24 வரை உள்ள காலத்தில் பொதுப்பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். பிப்ரவரி 25 முதல் மார்ச் 11 வரை உள்ள காலத்தில் வாழ்க்கைத்துணை நலனில் கவனம் தேவை. மார்ச் 29 வரை உள்ள காலத்தில் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். மார்ச் 30 முதல் வருடம் முடிய தந்தை நலனில் கவனம் தேவை. புதனுக்கு குருவின் பார்வை இருப்பதால், புனிதப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.
புதன் உங்கள் ராசிக்கும் 10ம் இடத்துக்கும் அதிபதி ஆவார். பொதுவாக புதனால் உங்களுக்கு அதிகம் நற்பலன்களே உண்டாகும். சொந்தத் தொழில், வியாபாரத்தில் ஈடுபடுவீர்கள். ஜூலை முடிய உள்ள காலம் மிகச் சிறப்பாக அமையும். எண்ணங்கள் எல்லாம் எளிதில் நிறைவேறும். ஆகஸ்ட 1 முதல் 20 வரை உள்ள காலத்தில் புதன் 12ம் இடத்தில் உலவுவது சிறப்பாகாது. என்றாலும் குருவுடன் இணைவதால் சுபச் செலவுகளே அதிகம் இருக்கும்.
ஆகஸ்ட 21 முதல் செப்டம்பர் 14 வரை உள்ள காலத்தில் உங்கள் மதிப்பு உயரும். வியாபார முன்னேற்றத் திட்டங்கள் கைகூடும். செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 3 வரை எதிலும் அகலக்கால் வைக்க வேண்டாம். அக்டோபர் 4 முதல் நவம்பர் 10 வரை உள்ள காலத்தில் செல்வ நிலை உயரும். நவம்பர் 11 முதல் மாதம் முடிய தொழிலில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. டிசம்பர் 1 முதல் மார்ச் 11 வரை உள்ள காலம் சிறப்பானதாகும். புதிய சொத்துக்கள் சேரும். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். மார்ச் 12 முதல் 29 வரை உங்கள் ராசிநாதன் பலம் குறைவதால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும். கூட்டாளிகளால் சில இடர்ப்பாடுகள் ஏற்படும். மார்ச் 30 முதல் வருடம் முடிய உள்ள காலத்தில் புதிய பொருட்சேர்க்கை நிகழும். குடும்ப நலம் சிறக்கும்.
புத்தாண்டு ஆரம்பம் சுமாராகவே காணப்படும். எதிர்ப்புகள் இருக்கும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது. ஏப்ரல் 26 முதல் ஆகஸ்ட் 20 வரை எதிர்பாராத பொருட்சேர்க்கை நிகழும். தந்தையால் அனுகூலம் ஏற்படும். வியாபாரம் செழிக்கும். மாணவர்களது நிலை உயரும். பண நடமாட்டம் அதிகமாகும். புத்திசாலித்தனம் பளிச்சிடும். வாழ்வில் முன்னேற்றம் காண நல்ல வாய்ப்புகள் கூடிவரும். ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 14 வரை எதிலும் விழிப்பு தேவை. தந்தை நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 3 வரை எதிர்பாராத பொருட்சேர்க்கை நிகழும். மூத்த சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும். அக்டோபர் 4 முதல் 25 வரை செலவுகள் அதிகமாகும். அக்டோபர் 26 முதல் நவம்பர் முடிய உள்ள காலத்தில் சுப காரியங்கள் நிகழும். குடும்பத்தில் குதூகலம் கூடும். பிரச்னைகள் தீரும். பொருள்வரவு அதிகரிக்கும்.
டிசம்பர் முதல் பிப்ரவரி 5 வரை உள்ள காலம் சோதனையானது. தொழிலில் அதிக கவனம் தேவை. குரு பலம் இருப்பதால், சமாளிப்பீர்கள். பிப்ரவரி 6 முதல் 24க்குள் புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். வியாபாரம் பெருகும். பிப்ரவரி 25 முதல் மார்ச் 29 முடிய உள்ள காலத்தில் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் தேடிவரும். அறிவாற்றல் பளிச்சிடும். ஞான மார்க்கத்தில் ஈடுபாடு உண்டாகும். மார்ச் 30 முதல் வருடம் முடிய வாழ்க்கைத்துணைவரின் நலனில் கவனம் தேவைப்படும்.
புத்தாண்டு ஆரம்பம் சிறப்பாக இருக்கும். எதிர்ப்புகள் விலகும். திடீர்ப் பொருள் வரவு உண்டாகும். ஏப்ரல் 26 முதல் ஜூன் 27 வரை வாழ்க்கைத்துணை நலனில் கவனம் தேவை. ஜூன் 28 முதல் ஜூலை 14 வரை உள்ள காலத்தில் பொருள் வரவு சற்று அதிகரிக்கும். வியாபாரம் பெருகும். எழுத்து, பத்திரிகை, இசை ஆகிய துறையினருக்கு முன்னேற்றம் ஏர்படும். ஜூலை 15 முதல் மாதம் முடிய தந்தை நலனில் கவனம் தேவைப்படும். ஆகஸ்ட் 1 முதல் அக்டோபர் 25 வரை உள்ள காலம் விசேஷமானதாகும். தொழிலில் வளர்ச்சி காண வாய்ப்பு கூடிவரும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். புதிய சொத்துக்கள் சேரும். மாணவர்களது நிலை உயரும்.
அக்டோபர் 26 முதல் நவம்பர் முடிய உள்ள காலம் சோதனையானது. வீண் செலவுகளும் இழப்புக்களும் ஏற்படும். டிசம்பர் 1 முதல் பிப்ரவரி 5 வரை உள்ள காலத்தில் பொருள்வரவு அதிகமாகும். மனத்தில் உற்சாகம் பெருகும். பிப்ரவரி 6 முதல் 25 வரை எதிலும் விழிப்பு தேவை. மார்பு, நுரையீரல் சம்பந்தமான உபாதைகள் ஏற்பட்டு விலகும். பிப்ரவரி 25 முதல் மார்ச் 11 வரை உள்ள காலத்தில் சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். மார்ச் 12 முதல் 29 வரை உள்ள காலத்தில் மக்கள் நலனில் கவனம் தேவைப்படும். மார்ச் 30 முதல் ஏப்ரல் 13 வரை உள்ள காலத்தில் திடீர்ப் பொருள்வரவு உண்டாகும். எதிர்ப்புகள் குறையும்.
புத்தாண்டு ஆரம்பம் சாதாரணமாகவே இருக்கும். ஏப்ரல் 26 முதல் நல்ல திருப்பம் ஏற்படும். பொருள் வரவு கூடும். வியாபாரத்தில் அபிவிருத்தி காணலாம். புதிய முயற்சிகள் கைகூடும். ஜூன் 28 முதல் செப்டம்பர் 15 வரை வாழ்க்கைத்துணை நலனில் கவனம் தேவைப்படும். ஜூலை 15 முதல் நவம்பர் 10 வரை உள்ள காலம் சிறப்பானதாகும். திருமண வாய்ப்பு கூடிவரும். செய்து வரும் தொழிலில் அபிவிருத்தி காணலாம்.
பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். வியாபார அபிவிருத்தித் திட்டங்கள் கைகூடும். பிரச்னைகள் எளிதில் தீரும். மாணவர்களது நிலை உயரும். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். சாதுக்கள், மகான்கள், சித்தர்கள் ஆகியோரது ஆசிகள் கிடைக்கும்.
நவம்பர் 11 முதல் பிப்ரவரி 5 வரை உள்ள காலத்தில் வாழ்க்கைத்துணை நலனில் கவனம் தேவைப்படும். இடமாற்றம் உண்டாகும். பிப்ரவரி 6 முதல் 24 வரை உள்ள காலத்தில் பண வரவு அதிகமாகும். பிப்ரவரி 25 முதல் மார்ச் 11 வரை உள்ள காலத்தில் தொழிலில் அதிக அக்கறை தேவை. பக்தி மார்க்கத்தில் உள்ளவர்களுக்குத் தெளிவு பிறக்கும். மார்ச் 12 முதல் 29 வரை உள்ள காலத்தில் வியாபாரத்தில் அபிவிருத்தி காணலாம். மார்ச் 30 முதல் ஏப்ரல் 13 வரை உள்ள காலத்தில் ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். மக்களால் ஓரிரு எண்ணங்கள் ஈடேறும்.
உங்கள் ராசிக்கு புதன் நல்லவர் ஆவார். ராசிநாதனுக்கு நண்பரும் ஆவார். இதனால் புதன் மூலம் அதிகம் நற்பலன்களே ஏற்படும். ஆன்மிகம், அறநிலையம், ஜோதிடம் ஆகியவற்றில் நாட்டம் கூடும். புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வியாபார முன்னேற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புகளின் கரம் வலுகுறையும். புதிய சொத்துக்கள் சேரும். ஏப்ரல் 26 முதல் ஜூலை 14 வரை உள்ள காலத்தில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் அதிகமாகும். தொழிலில் அபிவிருத்தி காணச் சந்தர்ப்பம் கூடிவரும். ஜூலை 15 முதல் மாதம் முடிய வாழ்க்கைத்துணைவரின் நலனில் கவனம் தேவைப்படும். உங்களுக்கும் ஆரோக்கியம் பாதிக்கும். ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் முடிய உள்ள காலப்பகுதி விசேஷமானதாகும். எதிர்பாராத பொருட்சேர்க்கை நிகழும். தொழிலில் வளர்ச்சி காண வாய்ப்பு கூடிவரும். மாணவர்களது நிலை உயரும். வேலையில்லாதவர்களுக்குத் தகுந்ததொரு வாய்ப்பு கூடிவரும்.
டிசம்பர் 1 முதல் பிப்ரவரி 24 வரை உள்ள காலம் சோதனையானதாகும். எதிர்பாராத செலவுகளும் இழப்புக்களும் ஏற்படும். எதிர்ப்புக்கள் சற்று அதிகமாகும். பிப்ரவரி 25 முதல் மார்ச் 11 வரை உள்ள காலத்தில் குடும்ப நலம் சிறக்கும். பண வரவு அதிகமாகும். மார்ச் 12 முதல் 29 வரை உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும். தொழிலில் அதிக அக்கறை செலுத்துவது நல்லது. மார்ச் 30 முதல் ஏப்ரல் 13 வரை உள்ள காலத்தில் புதிய சொத்துக்கள் சேரும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும்.
புத்தாண்டு ஆரம்பத்தில் புதன் உங்கள் ராசிக்கு 3ம் இடத்தில் உலவுவது சிறப்பாகாது. மனதில் ஏதேனும் சலனம் இருந்துவரும். செய்து வரும் தொழில் ரீதியாகச் சில பிரச்னைகள் ஏற்படும். ஏப்ரல் 26 முதல் ஜூலை முடிய புதன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால், வெற்றி வாய்ப்புக்கள் கூடும். புதிய சொத்துக்கள் சேரும். மக்களால் அனுகூலம் உண்டாகும். கடல் வாணிபம் லாபம் தரும். அறிவாற்றல் பளிச்சிடும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். பங்கு வர்த்தகம் லாபம் தரும். ஆகஸ்ட் 1 முதல் 20 வரை வாழ்க்கைத்துணை நலனில் கவனம் தேவைப்படும். கூட்டாளிகளால் பிரச்னைகள் ஏற்படும். குரு வலுத்திருப்பதால், சமாளிப்பீர்கள்.
ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 14 வரையிலும் அக்டோபர் 4 முதல் பிப்ரவரி 5 வரையிலும் உள்ள காலகட்டம் மிகச் சிறப்பாக அமையும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் ஆகும். புத்திசாலித்தனத்தாலும் செயல்திறமையாலும் ஓரிரு சாதனைகளை ஆற்றி, பிறரது பாராட்டுகளைப் பெறுவீர்கள். மாணவர்கள் வெற்றி நடைபோடுவார்கள். பிப்ரவரி 6 முதல் மார்ச் 11 வரை உள்ள காலம் சோதனையானது. வீண் செலவுகளும் இழப்புக்களும் ஏற்படும். மக்கள் நலனில் கவனம் செலுத்தவும். மார்ச் 12 முதல் 29 வரை பொருளாதார நிலையில் வளர்ச்சி காணலாம். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். கொடுக்கல்வாங்கல் லாபம் தரும். மார்ச் 30 முதல் ஏப்ரல் 13 வரை எதிலும் யோசித்து ஈடுபடவும். செய்தொழிலில் அதிக கவனம் தேவை. வீண்வம்பு வேண்டாம்.
புத்தாண்டு ஆரம்பம் மிகச் சிறப்பாக அமையும். புதன் 2ம் இடத்தில் உலவுவதால், பண வரவு கூடும். வாக்குவன்மை அதிகரிக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். ஏப்ரல் 26 முதல் ஜூன் 27 வரை எதிலும் நிதானம் தேவை. சிலர் சொத்துக்களை விற்க வேண்டியும் வரலாம். ஜூன் 28 முதல் ஆகஸ்ட் 20 வரை உள்ள காலகட்டம் சிறப்பாக அமையும். சொத்துக்களின் சேர்க்கை நிகழும். மக்களால் அனுகூலம் உண்டாகும். எதிர்ப்புகள் விலகும். ஆகஸ்ட் 21 முதல் அக்டோபர் 25 வரை உள்ள காலம் சோதனையானது. மன அமைதி குறையும். உடல் நலனில் கவனம் தேவைப்படும்.
அக்டோபர் 26 முதல் நவம்பர் 10 வரை உள்ள காலத்தில் திடீர்ப் பொருள்வரவு உண்டாகும். நவம்பர் 11 முதல் மாதம் முடிய தந்தை நலனில் கவனம் தேவை. டிசம்பர் 1 முதல் பிப்ரவரி 24 வரை உள்ள காலத்தில் புதிய சொத்துக்கள் சேரும். உறவினர்களும் நண்பர்களும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பிப்ரவரி 25 முதல் மார்ச் 29 வரை உள்ள காலத்தில் செலவுகள் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை நலம் பாதிக்கும். மார்ச் 30 முதல் ஏப்ரல் 13 வரை குடும்ப நலம் திருப்தி தரும். கொடுத்த வாக்கை காப்பாற்றி வருவீர்கள். பண வரவு அதிகரிக்கும். நண்பர்கள், உறவினர்கள், மூலம் அனுகூலம் உண்டாகும். முக்கியமான எண்ணங்கள் ஈடேற வழிபிறக்கும். கூட்டுத் தொழில் லாபம் தரும். பேச்சாற்றல் வெளிப்படும். பொருள் திரட்டுவதில் ஆர்வம் கூடும்.
No comments:
Post a Comment