சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

24 Apr 2015

தாங்க்யூ (கண்)மணி!

மீப காலமாக தமிழ் சினிமா இயக்குநர்களுக்கு பேய் பிடித்திருந்தது. நிஜமான பேயே பிடித்துவிட்டதோ என்று நினைக்கும் அளவுக்கு இருந்தது சினிமா பேயின் பாதிப்பு. தியேட்டரைவிட்டு வெளியேறும் ரசிகர்கள் அத்தனை பேரையும் பேயாக்கிவிடுவது என்ற முடிவுடன் செயல்பட்டுக்கொண்டிருந்தனர் இயக்குநர்கள். இதற்கு அழுத்தமான பிள்ளையார் சுழி போட்டது நடிகர் ராகவேந்திரா லாரன்ஸின் 'முனி' தான்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராஜ்கிரண், ஸ்கிரீனில் வழக்கமான அவரின் பட்டாபட்டி டவுசருடன் போட்ட குத்தாட்டமும், திரைக்கதையும்  பேயாயிருந்தாலும் ஓகேதான் என்று ஓரளவு ரசிகர்களை பார்க்கவைத்தது.

அதன் பின் 'முனி-2' என்ற பெயரில் 'காஞ்சனா'வைக் கொண்டு வந்தார். ஹியூமர், கிளாமர், ஹாரர் என்று மூன்று ர்களையும் ஒரு மிக்சியில் போட்டு மிக்சராக்கி பாக்ஸ் ஆபீஸ் ஹிட் நோக்கி, அதே ராகவேந்திரா லாரன்ஸ் அடித்த சிக்ஸரில் ஆரம்பித்தது சனி.
படை திரண்டு வந்தனர் இயக்குநர்கள். எங்கிருந்துதான் இத்தனை பேயைக் கண்டுபிடித்தார்களோ... இதில் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர் மிஷ்கினும் தப்பவில்லை. காதலான பேயை உருவாக்கி தியேட்டரில் அனைவரையும் கண்ணீருடன் காதலிக்க வைத்தார். மேலும் மேலும் பேய்கள் உருவாகி 'என்று தணியும் இந்தப் பேய்களின் தாகம்' என ரசிகன் கொந்தளிக்கும்போது குளிர்விக்க வந்திருக்கிறது 'ஓகே கண்மணி'. ரத்தம், ஆபாசம் இல்லாமல் ஒரு ரொமான்ட்டிக் லவ் ஸ்டோரி. 'இதயத்தை திருடாதே' ஓடிப்போகலாமா மணிரத்னம் இஸ் பேக். இனி பேய்களின் நடமாட்டம் குறையும் என்று நம்பலாம். நிறைய காதல் கதைகள் வரலாம். வரட்டும்.

பேய்களின் காதல்கதை வராமல் இருக்க வேண்டும். அவ்வளவுதான் இதில் ஒரு தற்செயல் நிகழ்வு. 'முனி'யில் தொடங்கிவைத்த ராகவேந்திரா லாரன்ஸின் 'முனி -3'ம் இப்போது ரிலீஸாகி  வெற்றி பெற்றிருப்பதுதான்.       

இனி தொடர இருப்பது கண்மணியா, காஞ்சனாவா...? சராசரி ரசிகனின் மனதில் உள்ள பெரிய கேள்விக்குறி இதுதான்.



No comments:

Post a Comment