சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

18 Apr 2015

'கங்குலி இல்லையாம்.. அப்போ ரவி சாஸ்திரியா?'

ந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரியே நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த டங்கன் ஃபிளெட்சரின் ஒப்பந்தம் உலகக் கோப்பையுடன் முடிவடைந்தது. இதையடுத்து ஃபிளட்சர் தாய்நாடான ஜிம்பாப்வேக்கு சென்று விட்டார். தொடர்ந்து ஐ.பி.எல். போட்டியும் ஆரம்பித்துவிட, தற்போது இந்திய அணி நிர்வாகிகள் அதில் பிசியாக உள்ளனர். இந்திய அணியின் இயக்குநராக உள்ள ரவி சாஸ்திரியை பயிற்சியாளராக நியமிக்கப் போவதாக ஏற்கனவே ஊக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், நேற்று திடீரென்று சவுரவ் கங்குலி புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்த இருவரில் யார் சிறந்த பயிற்சியாளராக பரிமளிக்க வாய்ப்பிருக்கிறது என்பதை ஆராய்ந்தால், நிச்சயமாக கங்குலிக்கு அதிகமான வாய்ப்பிருக்கிறது என்றே சொல்லலாம். கிரிக்கெட் ரிக்கார்டுகளை புரட்டி பார்த்தால், ரவி சாஸ்திரிக்கு வாய்ப்பே இருக்காது. அதே வேளையில் களத்தில் சிறப்பாக ஜொலித்தவர்கள் பயிற்சியாளராக ஜொலிப்பதில்லை என்பதற்கும் பல உதாரணங்கள் கூற முடியும். கால்பந்து ஜாம்பவான் மரடோனாவில் தொடங்கி, நம்ம ஊர் கபில்தேவ் வரை பயிற்சியாளராக ஜொலிக்க முடியாமல் போனவர்கள்தான். சவுரவ் கங்குலியிடம் இமாலய எதிர்பார்ப்புடன் பெரிய பொறுப்பை ஒப்படைக்கும் போது, அணி சறுக்கலை சந்தித்தால் அதனை எதிர்கொள்வதும் கடினமாக இருக்கும். 

ரவி சாஸ்திரி, மைதானத்தில் பெரிய அளவில் சாதித்தது இல்லை. ஒரு காலத்தில் இந்திய அணியில் இருந்த மும்பை 'லாபி'யின் அடிப்படையில் நீண்ட காலமாக அணியில் இடம் பிடித்திருந்தார். இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது, இந்திய அணி தர்மஅடி வாங்கியதால் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கு அணி இயக்குநராக நியமிக்கப்பட்டார். இதனால், தோனி, விராட் கோலி உள்ளிட்ட மூத்த வீரர்களுடன் நல்ல நட்பு இருப்பதாக கூறப்படுகிறது ரவி சாஸ்திரி நல்ல நிர்வாகத்திறமை கொண்டவரும் கூட என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது.
இந்திய அணியில் டங்கன் ஃபிளட்சரை ஓரம் கட்ட ரவி சாஸ்திரி கொண்டு வரப்பட்டதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் டங்கன் ஃபிளட்சர் இருந்தவரை எந்த சர்ச்சையும் எழாமல் அவர் கவுரவத்துடன் விடை பெற ரவி சாஸ்திரி மேற்கொண்ட முயற்சிகளே காரணம். கடந்த 2007 ஆம் ஆண்டு இந்திய பயிற்சியாளர் பதவியில் இருந்து கிரேக் சேப்பல் விலகிய பின், ரவி சாஸ்திரியிடம் தற்காலிகமாக இந்திய அணி ஒப்படைக்கப்பட்டிருந்தது. இதுவும் ரவி சாஸ்திரியின் கூடுதல் தகுதியாக உள்ளது. இந்திய அணியின் துணைப்பயிற்சியாளர்களான சஞ்சய் பாங்கர், அருண் பாரத், ஸ்ரீதர் ஆகியோரும் ரவி சாஸ்திரியிடம் நல்ல நட்புணர்வு கொண்டவர்கள்.



'தாதா'வை பொறுத்தவரை எளிதில் உணர்ச்சிவசப்படுபவர். வீரர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ளமாட்டார் என்ற குறை காணப்படுகிறது. எனினும் ஜக்மோகன் டால்மியாவுடன் சவுரவ் கங்குலிக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. அந்தவகையில்தான் இந்திய அணியின் பயிற்சியாளராக கங்குலி நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. பயிற்சியாளருக்கான ரேசில் ராகுல் டிராவிட் பெயரும் உள்ளது. அமைதியானவர்...திறமைசாலி என்ற வகையில் ராகுல் டிராவிட்டும் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்க வாய்ப்புள்ளது. 

எப்படி பார்த்தாலும் 15 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணிக்கு மீண்டும் ஒரு இந்தியர் பயிற்சியாளராகப் போகிறார். ஜான் ரைட், சேப்பல், கேரி கிறிஸ்டன், ஃபிளெட்சர் போன்ற வெளிநாட்டு பயிற்சியாளர்களுக்கு முடிவு கட்டப்படுகிறது.


No comments:

Post a Comment