சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

27 Apr 2015

இந்திய மக்கள் மகிழ்ச்சி பெற செய்ய வேண்டியது என்ன?

2012ம் ஆண்டு ஐ.நா. சபை மார்ச் 20-ம் தேதியை உலக மகிழ்ச்சியான நாளாக அறிவித்ததையடுத்து, மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக வாழும் நாடு எது? என்ற ஆய்வறிக்கையின் முடிவில் இந்தியாவில் 75% சதவிகித மக்கள் மகிழ்ச்சியில் இல்லை என்ற அதிர்ச்சி தகவலும், சுவிட்சர்லாந்து மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக வாழும் நாடு என்ற தகவலும் உலகளவில் 158 நாடுகளில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வறிக்கை முடிவு தெரிவிக்கிறது.

இந்த ஆய்வு முடிவு நமக்கு மிகவும்  வேதனையளிக்கிறது. காரணம் மகிழ்ச்சி என்பது மனித மனம் சார்ந்தது. நம் பாரத நாட்டை பொறுத்தவரை மனித மனம், குறித்து ஆயிரக்கணக்கான நூல்கள், பழங்கதைகள், நீதிநெறிகள், இயற்கை ரசித்தல், கூட்டு குடும்ப ஒற்றுமை, குணநலன்கள், யோகா, தியானம், பண்பு பதிவுகள், தனிமனித ஒழுக்கம், நேர்மை, இசையில் இனிமை, கேட்டலில் இனிமை, தர்மத்தில் மகிழ்வு, இறை வழிபாடு, புலால் உண்ணாமை, பொறாமை அழித்தல், மது, மாதுவினால் கேடுகள் போன்றவைகள் எல்லாம் தேர்ந்து ஆய்ந்து அனுபவித்து பாடங்களாக தொகுத்து கொடுத்ததுடன், அதன் வழி நடந்து வாழ்க்கையில் மகிழ்வுடன் நம் முன்னோர்கள் வாழ்ந்து வழிகாட்டியுள்ளனர். அதனால் அவர்கள் நூறாண்டுகளை கடந்து நல்ல தேக பலத்துடன், அறிவாற்றலுடன், தூய சிந்தனையுடன் வாழ்ந்துள்ளனர்.


ஆனால் மொகலாயர்கள், ஆங்கிலேயர்கள் நம் நாட்டில் படையெடுப்புக்கு பின் நம்முடைய கலாச்சாரமும், பழக்க வழக்கமும் மாறியதால் நமது குணநலன்களில் மாற்றம் ஏற்பட்டதன் விளைவே இன்று இந்தியாவில் 75% சதவிகித மக்கள் மகிழ்ச்சியில் இல்லை என்ற முடிவு.

இதனை உடனடியாக அனைவரும் கவனத்தில் கொண்டு, நம் முன்னோர்கள் கடைபிடித்தவற்றையே கண்மூடித்தனமாக நம்பி கடைபிடித்தாலே ஒழிய மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகள் பட்டியலில் இந்தியா முன்னேறாது.

மேலும், சுவிட்சர்லாந்தை தொடர்ந்து, ஐஸ்லாந்து, டென்மார்க், நார்வே மற்றும் கனடா ஆகிய நாடுகளில் உள்ள மக்கள் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 158 நாடுகளைக் கொண்ட இந்தப் பட்டியலில் இந்தியா 117வது இடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்கா 15வது இடத்தையும், பிரிட்டன் 21வது இடத்தையும், சிங்கப்பூர் 24வது இடத்தையும் பிடித்துள்ளன.

இந்த ஆய்வில் கடந்த ஆண்டை விட ஐஸ்லாந்து 9வது இடத்தில் இருந்து இந்த ஆண்டு 2வது இடத்துக்கு வந்துள்ளது. மேலும் டோகோ, புருன்டி, சிரியா, பெனின் மற்றும் ருவாண்டா ஆகிய நாட்டு மக்கள் மகிழ்ச்சியற்ற நிலையில் வாழ்ந்து வருவதாக இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து இதைவிட இந்தியா பின்னுக்கு செல்லாமல் இருக்க மக்களாகிய நாம் போட்டி, பொறாமை நீங்கி, நீதி, நேர்மை, சுய கட்டுப்பாட்டுடன் மகிழ்ச்சியுடன் வாழ முயற்சிப்போம்.



No comments:

Post a Comment