சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

21 Apr 2015

சாதி கலவரத்துக்கு காரணமான ப்ளெக்ஸ் போர்டு!

தேனி மாவட்டத்தில் ப்ளெக்ஸ் போர்டு சாதி கலவரத்துக்கு காரணமாக அமைந்துள்ளது.

கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி அம்பேத்காரின் பிறந்தநாள் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் சில சமூகத்தை சேர்ந்தவர்கள், அம்பேத்கரின் பிறந்த நாளிற்கும், வரவிருக்கும் தங்கள் கட்சியின் வெள்ளி விழா ஆண்டிற்குமாக ப்ளெக்ஸ் போர்டுகளை மாநிலம் முழுக்க வைத்தனர். அதேபோல் தேனி மாவட்டத்திலும், வடுகபட்டி கிராமத்திலும் வைத்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி இரவு, வடுகபட்டியில் வைக்கப்பட்டிருந்த ப்ளெக்ஸ்களில் சில கிழிக்கப்பட்டு இருந்திருக்கிறது. இதை தொடர்ந்து மறுநாள், அந்தப் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். யாரும் அவர்களுடைய ப்ளெக்ஸ்களை கிழிக்கவில்லை, முதல் நாள் பெய்த மழையில் அந்த போர்டுகள் கிழிந்துள்ளன என்று ஒரு சமூகத்தினரும், மழைக்கு கிழிந்தால் செங்குத்தாக தானே கிழியும், பிளேடால் அறுத்ததுபோல் கண்டப்படி எப்படி கிழியும் என இன்னொரு சமூகத்தினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். ஆனாலும், அந்த இரண்டு சமூகத்தினரிடையே கடந்த சனிக்கிழமை இரவு மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதை தொடர்ந்து சாலை மறியலில் தொடங்கி, பேருந்து நிறுத்தம், இருவர் கைது வரைக்கும் இந்த ப்ளெக்ஸ் போர்டு விவகாரம் சென்றது.
இந்நிலையில் நேற்று காலை, கைது செய்யப்பட்டவர்களின் சமூகத்தை சார்ந்த ஆண்கள், பெண்கள் என பலர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். ''அவர்கள் புகார் கொடுத்தார்கள் என்று போலீசார் எங்கள் சமூகத்தை சேர்ந்த 2 பேரை கைது செய்திருக்கிறார்கள். ஆனால், நாங்கள் புகார் கொடுத்தால் அந்த சமூகத்தை சேர்ந்தவர்களை கைது செய்ய போலீசார் மறுக்கிறார்கள். இது எந்த விதத்தில் நியாயம்?" என்று மற்றொரு சமூகத்தினர் குரல் எழுப்பினார்கள்.
இதை தொடர்ந்து பெரிய பிரச்னை வெடிக்கும் சூழல் ஏற்பட, ஊரிலுள்ள இரு தரப்பு மக்களையும் அழைத்து சமாதானம் செய்ய தாமரைக்குளம் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டனர். ஆனால், அந்த கூட்டத்திற்கு கைது செய்யப்பட்ட தரப்பினர் மட்டுமே வந்திருந்தனர். மற்றொரு தரப்பினர் சமாதான கூட்டத்திற்கு வராததால் சமாதான பேச்சுவார்த்தை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பதட்டம் தனியாததால் காவல் துறையின் மிகுந்த பாதுகாப்போடு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

குருபூஜை, சாதி நிகழ்ச்சிகள் போன்ற விழாக்களில் அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று சில மாதங்களுக்கு முன் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கிருபாகரன் அறிவுரை வழங்கினார். அத்தோடு, வீட்டு விஷேச விழாக்களிலும், தேச தலைவர்களின் பிறந்த நாள் விழாக்களிலும் அரசியல், சாதி தலைவர்களின் படங்களோடு, எரிச்சலூட்டும் வாசகங்கள் தாங்கிய ப்ளெக்ஸ்களை வைக்காமல் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

அதையும் நீதித்துறைதான் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. காவல் துறையும், அரசாங்கமும் நினைத்தால் சாத்தியம் தான்.No comments:

Post a Comment