சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடர் லீக் ஆட்டத்தில் டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 1 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது
முதலில் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 150 ரன்கள் எடுத்தது.
முதலில் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 150 ரன்கள் எடுத்தது.
சென்னை அணி சார்பில் சிமித், டிபிளிசிஸ், டோனி ஆகியோர் 30 ரன்களை கடந்தனர். புதுமாப்பிள்ளை ரெய்னா 4 ரன்களில் அவுட் ஆகி ரசிகர்களை ஏமாற்றினார். டெல்லி அணி சார்பில் கல்டர் நைல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதனை தொடர் விளையாடியா டெல்லி அணி அனைத்து விக்கெட்டுகளும் மளமள அவுட்டாக மோர்க்கல் மட்டும் நிலைத்து விளையாடி அரை சதம் அடித்தார். கடைசி பந்தில் 6 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் மோர்க்கல் 4 ரன்கள் அடித்தார்.
முடிவில் டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை எடுத்தது. சென்னை அணி 1 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
25ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய சென்னை அணி வீரர் ஆஷிஷ் நெகரா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
No comments:
Post a Comment