சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

21 Apr 2015

ஒரு நாள் போட்டியில் 500 ரன் வித்தியாசத்தில் வெற்றி; ஒரே வீரர் 350 ரன்கள் எடுத்தார்!

முதல் தர கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஒருவர் 350 ரன்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். இதனால் எதிரணி 500 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இங்கிலாந்தில் நேஷனல் கிளப் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நன்ட்விச் நகரில் நடந்த ஆட்டத்தில், கேல்டி அணியுடன் நான்ட்விச் அணி மோதியது. இந்த போட்டியில் நன்ட்விச் அணியின் வீரர் லியாம் லிவிங்ஸ்டன் 138 பந்துகளில் 350 ரன்களை அடித்து உலக சாதனை படைத்தார். இந்த 350 ரன்னில் 34 பவுண்டரிகளும், 27 சிக்சர்களையும் லிவிங்ஸ்டன் விளாசினார். 123 பந்துகளில் முச்சதம் அடித்தும் பிரமிக்க வைத்தார் லிவிங்ஸ்டன்.
இந்த அதிரடியால் நான்ட்விச் அணி 45 ஓவர்களில் மொத்தம் 579 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த கேல்டி அணி 79 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் நான்ட்விச் அணி 500 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது 21 வயதே நிரம்பிய லிவிங்ஸ்டன் முதல் தர கிரிக்கெட்டில் ஒரு நாள் போட்டியில் அதிக ரன் எடுத்து புதிய சாதனை படைத்துள்ளார்

இதற்கு முன் ஹைதராபாத் நகரில் நடந்த போட்டியில் புனித. ஜான்ஸ் கல்லூரி வீரர் நிகிலேஷ் சுரேந்திரன் 334 ரன்கள் எடுத்ததுதான் உலக சாதனையாக இருந்தது. சர்வதேச போட்டிகளை பொறுத்த வரை இலங்கை அணிக்கு எதிராக இந்திய வீரர் ரோகித் சர்மா 264 ரன்கள் எடுத்தது உலக சாதனையாக உள்ளது.

No comments:

Post a Comment