சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

18 Apr 2015

காஞ்சனா 2 - படம் எப்படி?

ழிவாங்கும் பேய்கள் கூட்டத்திற்கு துடுப்பு சீட்டு லாரன்ஸ், இதுதான் ‘காஞ்சனா - 2’
க்ரீன் டிவி கேமரா மேன் ராகவா லாரன்ஸ். அதே டிவியில் இயக்குநராக டாப்சி. ராகவா லாரன்ஸ் டாப்சி வழக்கம் போல் லவ், பத்திகிச்சு ,சாப்டர் ஓவர்.  
பிறகு டிவியோட ரேட்டிங் ஏறணும் , நம்பர் 1 இடத்திற்கு கொண்டு போக வேண்டும் என ஒரு பேய் ஆராய்ச்சி ஷோவுக்காக பாழடைந்த , கடற்கரை வீடு தேர்வாகிறது. அங்கே போகும் கலாட்டா டிவி டீம் தலைவி டாப்சி கையில ஒரு தாலி கிடைக்கிறது. டாப்சியும் அசால்டாக தாலியை லபக்கிக் கொண்டு வர ஆட்டம் ஆரம்பம் , யார் துரத்துகிறார்கள், பின்னனி என்ன என்பதே மீதி கதை.

லாரன்ஸ் 7 வயது குழந்தையாக ‘கட கடவென’ பாடல் பாடுகிறார். 70 வயது பாட்டியாக வந்து தள்ளாடிக் கொண்டே மிரட்டுகிறார். புடவை கட்டிக் கொண்டு ஒய்யாரமான பெண்ணாக நிற்கிறார். இப்படி கமல் டைப்பில் அத்தனையும் லாரன்ஸ் மயம். சீன் பை சீன் மொட்ட சிவா கெட்ட சிவா என முந்தைய படங்களை காட்டிலும் நடிப்பில் இன்னமும் மெருகு தெரிகிறது.
டாப்சி வெள்ளை பொண்ணு பால்கோவா கலரில் ரோமான்டிக் லுக் கொடுத்து விட்டு பின் அட இந்த பொண்ணு இப்படியெல்லாம் நடிப்பாங்களா என காலை மடக்கி ஒடுக்கி ‘முழு கங்கா இப்ப ஓகே’ வா எனக் கேட்கும் போதும் , அலாக்காக வீட்டின் மேல் பாக்கத்தில் நின்று கொண்டு லுக் விடுவதும் என டாப்சி டாப்.
‘ஓ காதல் கண்மணி’ படத்தில் நித்யா மேனனை பார்த்துவிட்டு இந்த படத்தில் அதே நித்யாவை பார்த்தால் இன்னும் சிறப்பு. என்ன ஒரு கெட்டப் சேஞ்ச். அந்த ஜிலீர் பொண்ணு இந்த படத்தில் நம்மையே ஜிலீர்னு உறைய வைக்குறாங்க.வழக்கமான ஸ்ரீமன், கோவை சரளா, மனோ பாலா என பேய் பயத்தில் உறைய வைக்கும் பாத்திரங்கள். என்ன தேவதர்ஷினி இல்லையே பாஸ் மொமெண்ட் கொஞ்சம் தோன்றுகிறது.
இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என லாரன்ஸ் ஒரு காட்டு காட்டியிருக்கிறார். எனினும் ஏன் படம் முழுக்க ஹரி பட பாணியில் ’டேய், நீ மாஸ்’னா நான் பக்கா மாஸ்’ , ‘மொட்ட சிவா , கெட்ட சிவாடா’ என அலறல்கள் தெரியவில்லை. பாடல்கள் சுமார் ரகம். ’சண்டி முனி’ கண்டிப்பாக இதய நோயாளிகள் ஜாக்கிரதை ஸ்டைல் பாடல். ’மொட மொட’ குழந்தை பாடல் வித்யாசமான ஸ்டைல். பின்னனி இசையாக இல்லாமல் அவ்வளவும் ஸ்பெஷல் எஃபெக்டாகவே பயன் படுத்திய முறை தான் படத்திற்கு பலம் எனலாம்.

முதல் பாதியில் சடார் , சடார் என திகில் காட்டிய பேய்கள் , இரண்டாம் பாதியில் சற்றே மறந்து விட்டன. கடைசியில் சண்டை காட்சிகளும் கிராபிக்ஸ் செயற்கையாக தெரிந்ததை குறைத்திருக்கலாம். காஞ்சனா அளவிற்கு கதை பலமும் குறைவு. காமெடிகளும் சில இடங்களில் அம்மாவை செருப்பு பிஞ்சுடும் ,போடி வாடி என திட்டுவதும் குழந்தைகளை கவர நினைக்கும் லார்ன்ஸ்இதையெல்லாம் தவிர்த்திருக்க வேண்டும்.
விடுமுறை என நினைத்து குழந்தைகள் சகிதமாக சென்றால் அல்ர்ட். முதல் பாதி முழுக்க கொஞ்சம் அரட்டி எடுக்கிறார்கள்.
சரி பார்க்கலாமா? ஜாலியாக ஒரு பயங்கர படம் எனில் கண்டிப்பாக பார்க்கலாம். நாங்க ‘ க்ரட்ஜ்’ பேய் பார்த்தே அசராத ஆட்கள் என்றால் இதுவும் கடந்து போகும்.

No comments:

Post a Comment