நேபாளத்தில் நிகழ்ந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து, இந்தியாவின் முக்கிய 38 நகரங்களில் நிலநடுக்கம் ஏற்படும் ஆபத்து உள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் நிகழ்ந்த நேபாள பூகம்பத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 200 ஐ தாண்டியுள்ளது. கடந்த சனிக்கிழமை முதல் நில அதிர்வுகள் இன்றும் அங்கு தொடர்ந்து கொண்டிருக்கின்றன. நேற்றிரவு மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவு கோலில் 7.5 புள்ளிகளாக பதிவான இந்த பூகம்பத்தால் பயங்கர உயிர் சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது. நேபாளத்தை குறி வைத்த இந்த நிலநடுக்கம் இந்தியா முழுவதும் உணரப்பட்டது. இதிலிருந்து நேபாள பூகம்பத்தின் சக்தியை உணர்ந்து கொள்ளலாம். இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் இந்த நிலநடுக்கம் காரணமாக 62 பேர் உயிரிழந்துள்ளனர். நேபாளத்தை ஒட்டிய பீகார் மாநிலத்தில் அதிக உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் மட்டும் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட நேபாளத்தில்,பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரக் கணக்கான மக்கள் தங்களின் வீடுகளையும் உடைமைகளையும் உறவினர்களையும் இழந்துள்ளனர்.சர்வதேச நாடுகளின் உதவிக்கு நேபாளம் தள்ளப்பட்டுள்ளது.இந்த பாதிப்பிலிருந்து அந்நாடு மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்தியாவின் வட மாநிலங்களில் 38 நகரங்கள் நிலநடுக்க ஆபத்தில் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. நேபாள நாட்டின் அருகே உள்ள மாநிலங்களுக்கு கடுமையான ஆபத்து உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த 2001 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் இருபதாயிரம் பேர் பலி ஆயினர். அதே போல 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் தமிழகத்தின் கடலோரப் பகுதிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி, பல்லாயிரக் கணக்கானோர் உயிரி ழந்தனர். அதன் பிறகு மிக லேசாக இந்தியாவில் நிகழ்ந்த நிலநடுக்கம் தற்போது நேபாளத்தில் பலமாக ஏற்பட்டு மனித உயிர்களைப் பலிவாங்கியுள்ளது.

இந்நிலையில் இந்தியாவின் 38 நகரங்கள் நிலநடுக்கம் ஆபத்து அதிகம் உள்ள நகரங்களாக இருப்பதாக மத்திய அரசு பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. குறிப்பாக டெல்லி, கௌஹாத்தி, ஸ்ரீநகர், மும்பை, சென்னை, கொல்கொத்தா உள்ளிட்ட மாநகரங்களிலும், பீகார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் முக்கிய நகரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
இந்த நகரங்களில் உள்ள கட்டடங்களில் பெரும்பாலானவை நிலநடுக்கத்தை தாங்கும் திறன் கொண்டதாக இல்லை என்று கடந்த 2006 ஆம் ஆண்டு உள்துறை அமைச்சகத்திற்காக ஐ.நா. சபை தயாரித்து அளித்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டிருந்தது. எனவே இந்த நகரங்களில் ஏதேனும் ஒன்றில் நிலநடுக்கம் ஏற்பட்டால் அதன் பாதிப்புகள் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
No comments:
Post a Comment