சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

23 Apr 2015

வட போச்சே! - புலம்பும் அஞ்சலி

‘காஞ்சனா 2’ வெற்றி பற்றிச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. சில கிராமங்களில், ‘டிக்கெட் இல்லேன்னா பரவால்ல... நின்னுக்கிட்டுக்கூட படம் பார்க்கிறோம்’ என்கிறார்களாம் ரசிகர்கள். ‘பேய்ப் படத்துக்கு இவ்வளவு ரெஸ்பான்ஸா’ என்று வியக்கிறார்கள் திரைத்துறையினர்.

அதிலும் நித்யாமேனனின் கால் ஊனமான கேரக்டர்... ராகவாவின் மொட்டைத் தலையில் ‘சொ..சொய்ங்’’ என்று விளையாடி... காலை விந்தி விந்தி நடந்து, ரசிகர்களின் கண்களில் குளம் கட்ட வைத்துவிட்ட நித்யாவின் நடிப்பு பற்றி ரஜினி முதல் விஜய் வரை ‘ஆஹா ஓஹோ’ என்று பாராட்டித் தள்ளுகிறார்கள். ஆனால், ஒரே ஒரு நடிகை மட்டும் கடுப்பில் புலம்புகிறாராம். அவர் - அஞ்சலி.
காரணம் - முதலில் நித்யா மேனன் கேரக்டரில் நடிக்க அஞ்சலியைத்தான் அழைத்தார்களாம். ‘காஞ்சனா 2’ ஆரம்பித்தபோது, ராகவாவுக்கு உடல்நிலை சரியில்லை; போதாக்குறைக்கு பீக்கில் இருந்தார் அஞ்சலி. ‘‘என்னது... கால் ஊனமான கேரக்டரா... என்னை அழகா பார்த்துப் பழக்கப்பட்டுட்டாங்க ரசிகர்கள்... ஊனமான அஞ்சலி கேரக்டரை நிச்சயம் அவங்க ஏத்துக்க மாட்டாங்க சார்!’’ என்று நியாயமாக மறுத்துவிட்டாராம்.

இப்போது, ‘மல்லு நடிகைக்கு இத்தனை திறமையா?’ என்று நித்யாவுக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பார்த்து, ‘வட போச்சே’ என்று புலம்பி வருகிறாராம் அஞ்சலி!

No comments:

Post a Comment