சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

22 Apr 2015

தீர்ப்பு வந்தால்தான் சோறு ?

‘‘ஏழை, எளிய மக்கள் மலிவு விலையில் தரமான உணவை வயிறார உண்ணும் வகையில் தமிழகம் முழுவதும் மேலும் புதியதாக 360 அம்மா உணவகங்களை விரைவில் திறக்க உத்தரவிட்டுள்ளேன்’’ என்று 2014-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அம்மா அறிவித்தால் சும்மா இருப்பார்களா அதிகாரிகளும் அமைச்சர்களும். துரிதமாகக் கட்டத் தொடங்கினார்கள். கட்டி முடித்தார்கள். ஆனால், திறந்து வைத்தார்களா?
அம்மா உணவகங்கள் கட்டி முடிக்கப்பட்டு, சமையல் பாத்திரங்களையும் வாங்கி டெஸ்ட் சமையலையும் முடித்துவிட்டனர். ஆனால், அறிவிப்பு வெளியிட்டு ஓராண்டு ஆகியும் இன்னும் அந்த 140 அம்மா உணவகங்களும் திறப்புவிழாவுக்காகக் காத்திருக்கின்றன.


‘‘அம்மா முதலமைச்சராக வந்ததும்தான் திறப்போம்” என்று ஆங்காங்கே அ.தி.மு.க-வினர் சொல்ல ஆரம்பித்துள்ளார்கள். கோடிக்கணக்கான பணம் செலவு செய்து கட்டி முடிக்கப்பட்ட இந்த உணவகங்களின் நிலையை அறிய மாநிலம் முழுவதும் வலம் வந்தோம்!
ஃப்ளாஷ் பேக்!
சென்னை மாநகராட்சியின், ‘மலிவு விலை உணவகம்’ திட்டத்தை 2013-ம் ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி சென்னையில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். அதே நாளில் சென்னையில் 15 இடங்களில் மலிவு விலை உணவகங்கள் செயல்பாட்டுக்கு வந்தன. மலிவு விலை உணவகம் என்ற பெயரை, ‘அம்மா உணவகம்’ என்று மாற்றுவதற்கு சென்னை மாநகராட்சியில் 2013-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது சென்னையில் மலிவு விலை உணவகங்களின் எண்ணிக்கை 73 ஆக இருந்தன. ஜெயலலிதா தொடங்கி வைத்த, ‘அம்மா’ உணவகம் அ.தி.மு.க-வின் மக்கள் செல்வாக்கு பெற்ற திட்டமாக மாறியதாகச் செய்திகள் பரவின. அதனால் மாநிலத்தில் உள்ள பல்வேறு  நகராட்சிகளில் 129 அம்மா உணவகங்களும் மற்ற இடங்களில் 131 உணவகங்களும் என ஆக மொத்தம்  360 உணவகங்களைத் திறக்க ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவைத் தொடர்ந்து அம்மா உணவகத்துக்கான கட்டுமானப் பணிகள் நடந்தன. 140 அம்மா உணவகக் கட்டுமானப் பணிகள் முடிந்துவிட்டன. ஆனால், இன்னும் திறக்கப்படத்தான் இல்லை.
ஒவ்வோர் உணவகத்துக்கும் சமையல் பாத்திரங்கள் வாங்க சுமார் ரூ.6 லட்சம் வரை செலவாகியிருக்கிறதாம். ஒவ்வோர் உணவகத்துக்கும் மூன்று ஷிப்டுக்கும் சேர்த்து 12 பேர் வேலைக்குத் தேர்வு செய்யப்பட்டனர். ஒரு நபருக்கு ரூ.300 தினக்கூலி. இந்த வேலைக்கு ஆசைப்பட்டு சிலர் ஒரு லட்சம் வரை கொடுத்து வேலைக்குச் சேர்ந்ததாகவும் சொல்கிறார்கள்.
கதவு எப்போது திறக்கும்?
தஞ்சாவூர் மாநகராட்சி பழைய பேருந்து நிலையம், மருத்துவக் கல்லூரி ஆகிய இடங்களிலும் பட்டுக்கோட்டை பழைய பேருந்து நிலையம், கும்பகோணம் தெற்குவீதி ஆகிய பகுதிகளிலும் அம்மா உணவகங்கள் ஒரு மாதத்துக்கு முன் கட்டி முடிக்கப்பட்டன. தஞ்சை மாவட்டத்தில் உள்ள அம்மா உணவகங்களை ஒரே நாளில் திறப்பதற்காக அமைச்சர் வைத்திலிங்கம் ஏற்பாடு செய்துகொண்டிருந்தார். ஆனால், ஜெயலலிதாவின் தீர்ப்பு தலைகீழாக மாறிப்போனதால், கட்டிய உணவகங்கள் அனைத்தும் அப்படியே கிடக்கின்றன. சமையல் பாத்திரங்கள், டைனிங் டேபிள் எல்லாம் வாங்கிப் போடப்பட்டு, கடந்த 10 மாதங்களாகப் பூட்டிக் கிடக்கின்றன. திருவாரூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே  முடிக்கப்பட்ட அம்மா உணவகம், அடுத்த ஒரு வாரத்தில் திறப்புவிழா என்றனர். ஒரு வருடம் ஓடிவிட்டது. ‘அம்மா ரிலீஸ் ஆனால்தான் இங்கே அம்மா உணவகத்தின் கதவு திறக்கும்’ என்று அ.தி.மு.க-வினர் பகிரங்கமாகவே பேசுகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய பேருந்து நிலையத்திலும் தலைமை மருத்துவமனையிலும் அம்மா உணவகங்கள் கட்டப்பட்டு திறப்புவிழாவுக்குத் தயாராகக் காத்திருக்கின்றன.
கடலூர் மாவட்டத்தில் நகராட்சிப் பகுதிகளான, கடலூர் உழவர் சந்தை, நெல்லிக்குப்பம் பேருந்து நிலையம், பண்ருட்டி அரசு மருத்துவமனை, விருத்தாசலம் பாலக்கரை, சிதம்பரம் அரசு மருத்துவமனை ஆகிய ஐந்து இடங்களில் அம்மா உணவகம் கட்டி முடிக்கப்பட்டு, திறப்பு விழாவுக்காகக் காத்துள்ளது. ‘‘எங்களுக்குக் கொடுத்த டெண்டர்படி சொன்ன தேதிக்குள் கட்டடத்தைக் கட்டி முடித்துவிட்டோம். அதுமட்டுமில்லாமல் ‘அம்மா உணவக’த்துக்குத் தேவையான அனைத்துப்  பொருட்களையும் வாங்கி வெச்சுட்டோம். ஆனால், கட்டடத்தைத் திறக்க நகராட்சி கமிஷனர்தான் அனுமதி வாங்கித் தரவேண்டும். அவரைக் கேட்டால், தலைமையும் தாம்பரத்தில் உள்ள மண்டல நிர்வாக இயக்குநரகமும் அதற்கான அனுமதி கொடுக்கவில்லை என்கிறார்கள். தனி ஒரு மனிதருக்காக இப்படி மக்களின் வரிப்பணம் கோடிக்கணக்கில் வீணடிக்கப்பட்டுள்ளது’’ என்று புலம்புகின்றனர் பொதுமக்கள்.

பாத்திரங்கள் ரெடி... சாப்பிடவும் ரெடி!
விழுப்புரம் நகராட்சி அலுவலகம் அருகில் கட்டப்பட்ட அம்மா உணவகத்தில் வாங்கப்பட்ட புதிய பாத்திரங்கள் எல்லாம் வீணாகிக் கொண்டிருக்கின்றன. மதுரையில் ஜெய்ஹிந்த்புரம் ஏரியாவில் உள்ள சுந்தரராஜபுரம் பகுதியில் சகல ஏற்பாடுகளும் முடிந்த நிலையில், ஓர் உணவகம் மட்டும் இன்னமும் திறக்கப்படாமல் இருக்கிறது. சமையலுக்கான பாத்திரங்களும் ரெடி. சாப்பிட ஆட்களும் ரெடி. இந்த அனைத்து உணவகங்களுக்கும் ஒரு வாட்ச்மேனை காவலுக்குப் போட்டு சம்பளம் கொடுத்துக்கொண்டிருப்பது வேதனை.
சேலம் மாநகராட்சியில் ஏற்கெனவே 10 அம்மா உணவகங்கள் இருக்கின்றன. அதையடுத்து சேலம் அரசு மருத்துவமனையில் மேலும் ஓர்  அம்மா உணவகத்தை ஏழு மாதங்களுக்கு முன்பு கட்டினார்கள். மக்கள் நலத்திட்டங்களில் கவனம் செலுத்தாமல், அம்மா உணவகத்துக்கே அதிக அளவு மாநகராட்சி நிதியை ஒதுக்குகிறார்கள் என எதிர்க் கட்சியினர் புகார் சொன்னார்கள். அப்படிக் கட்டப்பட்ட உணவகம் இன்னும் திறக்கப்படவில்லை. தர்மபுரியில் இரண்டு, கிருஷ்ணகிரியில் ஒன்று, ஓசூரில் ஒன்று என்று காத்திருக்கும் அம்மா உணவகங்களின் பட்டியல் நீளுகிறது.
மக்கள் முதல்வரின் பச்சைக்கொடி அசைவுக்காக மக்களின் வரிப்பணம் வீணாகலாமா?



No comments:

Post a Comment