சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

24 Apr 2015

‘எல் நினோ’வினால் இந்த ஆண்டு மழையின் அளவு குறையும்!

இந்தியாவில் இந்த ஆண்டு மழையின் அளவு ‘எல் நினோ’வினால் இயல்பைவிட குறைவாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி துறை தெரிவித்துள்ளது.

‘எல் நினோ’ என்பது, இயல்பாக நேரிட்டு வரும் பருவ காலங்களில் மாற்றங்களை உருவாக்கக் கூடிய ஒரு இயற்கை காரணியாகும். தென் அமெரிக்காவின் பசிபிக் பெருங்கடலில் நீரின் வெப்ப அளவில் மாற்றம் ஏற்படும்போது, உலகின் பல பகுதிகளில் இயற்கையாக நிலவும் பருவ நிலைகளில் பெரிய மாற்றத்தை உண்டாக்கிவிடுகிறது.

மழையே பெய்யாத பாலைவனங்களில் அதிக மழை பெய்யச் செய்வதும், மழை பெறும் பகுதிகளில் மழையை பொழிய விடாமல் குறைத்துவிடுவதும், இந்த ‘எல் நினோ’வின் விளைவாகும். தற்போது இந்த ஆண்டு எல் நினோவின் தாக்கம் காரணமாக இந்தியாவின் மத்திய மற்றும் வடமேற்கு பகுதிகளில் இயல்பான மழைப்பொழிவு மிகவும் குறையலாம் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி துறை தெரிவித்துள்ளது.



இது தொடர்பாக அதன் தலைமை அதிகாரிகள் டி.எஸ்.பாய், லட்சுமண் ரதோர் ஆகியோர் கூறுகையில்,

இந்த மழை காலத்தில் எல் நினோவின் தாக்கம் இருப்பதற்கு 70 சதவீதம் வாய்ப்புகள் இருப்பதாகத்  தெரிகிறது. எனவே இந்தியாவின் மத்திய மற்றும் வடமேற்கு பகுதிகளில் மழை அளவு இயல்பை விட குறையும். கடந்த 14 ஆண்டுகளில் இதன் தாக்கமாக 8 முறை மழை அளவு இயல்பான அளவைவிட குறைந்துள்ளது. இந்த ஆண்டும் அதனால் பாதிப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

மழையின் அளவு 90 சதவீதத்துக்கும் கீழ் இருந்தால் அதை குறைவான மழை அளவு என்று ஐ.எம்.டி. கணக்கிடுகிறது. அந்த வகையில் இந்தியா முழுவதிலும் தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாகக்  குறைவான அளவில்தான் மழை பெய்துள்ளது. கடந்த ஆண்டு பெறப்பட்ட மழையின் அளவு 88 சதவீதமாகும் என்றனர்.

மேலும் இது தொடர்பாக மத்திய புவி அறிவியல் அமைச்சர் ஹர்ஷ வர்தன்,

நீண்டகாலமாக இந்தியாவின் மழையளவு 93 சதவீதமாக உள்ளது. இது இயல்பு நிலையைவிட குறைவாகும். 96 சதவீதம் முதல் 104 சதவீதம் வரையான அளவுதான் இயல்பான அளவாகும். தற்போது அதிக மழை பெய்வதற்கான வாய்ப்பு ஒரு சதவீதம் தான் உள்ளது.


இந்த வானிலை குறித்து பிரதமர் அலுவலகம், அமைச்சரவைக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த சூழ்நிலையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளில் அரசு தயாராக முடியும் என்று தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment