சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

27 Apr 2015

சம்மர் டூர் அலப்பறைகள்!

குழந்தைகளுக்கு எக்ஸாம் முடிஞ்சு லீவு விட்டாச்சு. அடுத்து குடும்பத்தோட எங்கேயாவது டூர் பிளான் பண்ணி கிளம்பிடுவாங்க. அப்படி குடும்பத்தோட டூர் போகும்போது நடக்கும் காமெடிகளை கொஞ்சம் பார்க்கலாம் வாங்க...

=> டூர் போகும்போது பெரிய பிரச்னையாக இருப்பது லக்கேஜ்தான். எல்லாருக்கும் போதுமான டிரஸ் எடுத்து வச்சு, லக்கேஜை தூக்கிப் பார்த்தா, நகரவே முடியாத அளவுக்கு வெயிட்டா இருக்கும். அப்புறம் திரும்பி வரும்போது புதுசா வாங்குன பொருட்களும் கூட சேர்ந்துக்கும். அவஸ்தைதான்.

=> லக்கேஜ் போதாதுன்னு சிலர் குழந்தைகளையும் தூக்கிக்கிட்டு போக வேண்டி இருக்கும். இந்த விஷயத்துல தாய்க்குலம் சமயோசிதமா யோசிச்சு, கண்ணாலேயே எடை பார்த்து குழந்தை, லக்கேஜ் ரெண்டுல எது வெய்ட் அதிகமோ அதை கணவர்கிட்ட தள்ளிடுவாங்க. அப்புறம் கணவன் டூரை என்ஜாய் பண்ணுன மாதிரிதான்.

=> பெரும்பாலும் டூர் கிளம்பும்போது ஆண்கள் ஆபீஸ்ல லீவு சொல்றது, சொந்த தொழில்னா பொறுப்பை இன்னொருத்தர்கிட்ட ஒப்படைக்கிறதுன்னு சில பல வேலைகளை செஞ்சுட்டு கடைசியாதான் ரெடி ஆவாங்க. தாய்குலம் தனக்கும், குழந்தைக்கும் விதவிதமா டிரஸ் எடுத்து வச்சுட்டு, கணவனுக்கு போனா போகுதுன்னு 2 செட் மட்டும் எடுத்து வச்சிடுவாங்க. ஏன் இப்படி?னு கேட்டா, 'நீங்க மொதல்லயே சொல்லி இருக்கலாம்ல' ன்னு பதில் வரும்.


=> டூர் போன இடத்துல எதிர்பார்க்காம ஏதாச்சும் நடந்துட்டா, ஏற்கனவே போட்ட பிளான் சொதப்பிட்டா, சம்பந்தம் இருக்கோ இல்லையோ கணவனும், மனைவியும் பப்ளிக்ல மாத்தி மாத்தி திட்டிக்குவாங்க. இதை பார்க்கும் குழந்தைகள் என்ன பண்றதுன்னு தெரியாம ஒரு ஓரமா போயி முழிச்சுக்கிட்டு இருப்பாங்க.

=> பெரும்பாலும் டூர் பிளான் பண்ணும்போதே விவரமா பட்ஜெட் போட்டு வச்சிடுவாங்க. ஆனா டூர் முடிஞ்சு வந்து செலவு கணக்கு பார்த்தா அது போட்ட பட்ஜெட்டைவிட நாலு மடங்கு அதிகமா இருக்கும். அப்புறம் அதுக்கும் வழக்கம்போல சண்டைதான்.

=> முன்னாடி எல்லாம் டூர் போறதுன்னா வீட்டுல வயசானவங்களை காவலுக்கு இருக்க வச்சிட்டு, அந்த ஏரியாவே குஷியா கிளம்பிடும். இப்பல்லாம் பெரும்பாலும் கார்ல போயிக்கறாங்க. டூர் போறதை பக்கத்து வீட்டுக்காரங்கக்கிட்டகூட சொல்றது இல்லை. இன்னும் சிலர் சொந்த வீட்டுல கூட சொல்லாம டூர் கிளம்பி போற கூத்தும் நடக்கும்.

=> டூர்ல கணவன், மனைவில ஒருத்தர் செலவு பண்ணும்போது இன்னொருத்தர் 'இதெல்லாம் தேவையில்லாத செலவு'ன்னு புலம்புவாங்க. அதுல கோவப்பட்டு வீடு வந்து சேரும்வரை மூஞ்சியை உம்முன்னு வச்சுகிட்டேதான் இருப்பாங்க. அப்புறம் எங்க டூர என்ஜாய் பண்றது?

=> புதுசா ஒரு இடத்துக்கு டூர் போகும்போது அந்த இடத்தைப் பத்தின விவரங்களை முன்னாடியே தெரிஞ்சு வச்சுக்கிறது நல்லது. ஆனால், பலர் தனக்கு தெரியாட்டியும், எதுனாலும் சமாளிச்சுக்கலாம்னு ஓவர் கான்பிடன்ஸ்ல, அப்படி எதுவும் கேட்காம இருக்குறதுதான் கௌரவம்னு நினைச்சுகிட்டு போன இடத்தில் குடும்பத்தோட சிரமப்படுவாங்க.

=> பசங்க கல்யாணத்துக்கு முன்னடி ப்ரண்ட்ஸோட சில டூரிஸ்ட் இடங்களுக்கு போயி செமையா என்ஜாய் பண்ணிட்டு, மேரேஜ்க்கு அப்புறம் குடும்பத்தோட கண்டிப்பா இந்த இடத்துக்கு திரும்பி வரணும்னு சபதம் எடுத்திருப்பாங்க. அப்புறம் மேரேஜ் முடிஞ்சு அந்த இடத்துக்கு குடும்பத்தோட போயி அவஸ்தைப்பட்டு இனிமே இந்த இடத்துக்கு வரவே கூடாதுன்னு சபதம் எடுத்துடுவாங்க.


=> சந்தோசத்துக்காக குடும்பத்தோட டூருக்கு போறதை, சிலர் ஏதோ போருக்கு போற மாதிரி ரிஸ்க்கான, முடிவில் மன உளைச்சல் தரும் விஷயமாக மாத்திக்கறாங்க. டூர் போகும்போது அமைதியான மனநிலையோட போகணும். அதே நேரத்தில் போன இடத்தில் ஏற்படும் நடைமுறை சிக்கல்களையும் புரிஞ்சுகிட்டு நடந்துக்குறது நல்லது.


No comments:

Post a Comment