பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ் தம்பதியரின் மகனும், நடிகருமான சாந்தனுவுக்கு விரைவில் திருமணம். ‘மானாட மயிலாட’ , ’நாளைய இயக்குநர் ‘ உள்ளிட்ட டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினி கீர்த்தியை மணக்க இருக்கிறார்.
இதுகுறித்து பாக்யராஜ் மீடியாவிற்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார். அதில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்,
இதுகுறித்து பாக்யராஜ் மீடியாவிற்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார். அதில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்,
பத்திரிகையாளர் நண்பர்களுக்கு பாக்யராஜ், பூர்ணிமா தம்பதியரின் பணிவான வணக்கம்,
ஒரு இனிய நற்செய்தி ’எங்க வீட்ல விசேஷங்க’ ஆம்! எங்கள் புதல்வன் சாந்தனு என்கிற சோனுவுக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளது. எங்கள் பெண் சரண்யா சற்று பொருத்து திருமணம் செய்துகொள்கிறேன் என்றதால், வீட்டின் முதல் திருமணம் சாந்தனுவுக்கு நடக்க உள்ளது.
பெண்ணின் வீட்டாரும் நமது கலைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே. பிரபல நடன இயக்குநர் ஜெயந்தி விஜயகுமார் தம்பதியரின் மகள் கீர்த்தியே மணப்பெண். ஆகஸ்ட் 21ம் நாள் கோவிலில் திருமணமும், 22ம் நாள் மாலை வானகர ஸ்ரீவாரு மண்டபத்தில் வரவேற்பு நிகழ்வும் நடைபெற உள்ளது.
விரைவில் அழைப்பிதழுடன் அனைவரையும் அழைக்க உள்ளேன். தங்களது அனைவரின் நல்லாசியுடனும் எங்களது திரைப்பயணம் இனிதே தொடர்கிறது. அதற்கு நெஞ்சார்ந்த நன்றி கூறி, எங்களது பிள்ளைகளுக்கும் அந்த நல்லாசியைத் தந்தருள வேண்டுகிறோம்.
என கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.
No comments:
Post a Comment