சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

10 Apr 2015

நோ ஹெல்மெட்; நோ பெட்ரோல்! -கலெக்டரை குட்டிய நீதிமன்றம்!


‘தலைக் கவசம் உயிர்க் கவசம்...', 'தலையை மட்டுமல்ல; தலைமுறையையும் காக்கும்’ என்றெல்லாம் கோஷங்கள் எழுப்பினாலும், எவரும் ஹெல்மெட் சரியாக அணிந்தபாடில்லை; விபத்துகளும் குறைந்தபாடில்லை.

இந்த ஹெல்மெட் விஷயத்தில், மத்தியப் பிரதேசம் மாநிலம், இந்தோர் மாவட்ட கலெக்டர் ஆகாஷ் திரிபாதிக்கு ஓர் ஐடியா பிறந்தது. ‘ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு மட்டும்தான் பெட்ரோல்’ என்பதுதான் அது.

‘‘மாவட்டத்தில் விபத்துகளைக் குறைக்கும் நோக்கத்தில் அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறோம். அதன் தொடர்ச்சியாக, பெட்ரோல் பங்க்குகளில் ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கு மட்டும்தான், பெட்ரோல் பங்க் ஊழியர்கள் பெட்ரோல் நிரப்ப வேண்டும். மீறினால், பெட்ரோல் பங்க் அதிபர்கள், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றொரு வழக்கை மார்ச் மாதம் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
ஆனால், ‘‘ஒரு மாவட்டத்தில் மக்களுக்கு உரிய பொருட்களை உரிய நேரத்தில் சேர்ப்பிக்கும் பொறுப்பு; மக்களின் நலன் ஆகியவற்றில் ஒரு மாவட்ட கலெக்டருக்கு அக்கறை இருக்க வேண்டும். ஆனால், இப்படி திடீர் சட்டம் கொண்டு வருவதற்கும், மற்றவர்களைத் தண்டிக்கச் சொல்வதற்கும் கலெக்டருக்கு உரிமை கிடையாது. இதற்கு சட்டத்தில் இடம் கிடையாது. எதற்காக இப்படி ஒரு சட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கலெக்டர் நீதிமன்றத்தில் விரைவில் பதில் சொல்ல வேண்டும்’’ என்று நீதிபதிகள் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்திருக்கின்றனர்.

பதில் சொல்லத் தயாராகி வருகிறார் ஆகாஷ் திரிபாதி!

சட்டம் வெல்லுமா? ஆகாஷ் ஜெயிப்பாரா?



No comments:

Post a Comment