சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

18 Apr 2015

பணத்தை வாங்கிட்டு கேஸை வாபஸ் வாங்கிடு ! மிரட்டினாரா அமைச்சர் காமராஜ் ?

அ.தி.மு.க அமைச்சர்கள் மாட்டிக் கொண்டு இருக்கும் காலம் இது!
அக்ரி கிருஷ்ணமூர்த்தியை தொடர்ந்து இப்போது உணவுத் துறை அமைச்சர் காமராஜ் மீது மோசடி புகார் பட்டியல் வாசிக்கப்பட்டிருக்கிறது!
‘‘தேர்தல் செலவுக்காக என்னிடம் வாங்கிய ரூ.30 லட்சத்தைத் திருப்பித் தராமல் என்னை மிரட்டுகிறார், என்னைக் கொல்லவும் சதித்திட்டம் தீட்டி வருகிறார் அமைச்சர் காமராஜ். அவர் மீது வழக்குப்பதிவு செய்து உரிய விசாரணை செய்ய வேண்டும்’’ என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார் மன்னார்குடியைச் சேர்ந்த தொழிலதிபர் எஸ்.வி.எஸ்.குமார்.

அவரைச் சந்தித்தோம், ‘‘கடந்த 10 வருடங்களுக்கு மேலாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தேன். சென்னை மந்தைவெளி, சிருங்கேரி மடம் சாலையில் உள்ள சுப்புலட்சுமி  என்பவரது வீட்டை ரூ.60 லட்சத்துக்கு 2007-ல் விற்பதற்காக பவர் வாங்கினேன். சுப்புலட்சுமி வீட்டை காலி செய்யாமல் இழுத்தடித்தார். என்னிடம் பவர் இருந்தும் சுப்புலட்சுமி வீட்டை காலி செய்யவில்லை. இந்த நிலையில், தென்னரசு என்பவரிடம் விஷயத்தைச் சொன்னேன். அவர், ‘அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் காமராஜோட மச்சான் ராமகிருஷ்ணன் சென்னையில் இருக்கிறார். அவரிடம் சொன்னால், இந்த டீலிங்கை உடனே முடித்துக் கொடுத்து விடுவார்’ என்று சொல்லி அழைத்துப் போனார். அதற்காக தென்னரசுவுக்கு ரூ.2 லட்சம் பணம் கொடுத்தேன். நான் போய் ராமகிருஷ்ணனை பார்த்தபோது, எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்னு சொல்லி என்னை ஊருக்கு அனுப்பிவிட்டார். கொஞ்ச நாள் கழித்து, ‘அந்த இடம் ரூ.1 கோடி ரூபாய்க்கு மேலே போகும்.
நீ முதலில் ரூ.10 லட்சம் அட்வான்ஸ் கொடு, வீட்டை காலி செய்ய வெச்சிடுவோம்’னு சொன்னார். நானும் அதை நம்பி, ரூ.10 லட்சத்தைக் கொடுத்தேன். அப்புறம் மயிலாப்பூர் ஏ.சி ஒருத்தர வெச்சி முடிச்சிடுவோம்னு சொல்லி ரூ.5 லட்சம் கேட்டார். அந்தப் பணத்தையும் கொடுத்தேன். திடீர்னு ஒருநாள் சுப்புலட்சுமியையும் என்னையும் மன்னார்குடிக்கு வரச் சொல்லி காமராஜ் வீட்டில் வெச்சு பஞ்சாயத்து பேசினாங்க. காமராஜ் என்னையும், சுப்புலட்சுமியையும் தனித்தனியாக அழைத்துப் பேசினார். ‘நான் மாப்பிள்ளைகிட்ட (ராமகிருஷ்ணன்) பேசிட்டேன். அவர் எல்லாத்தையும் பார்த்துக்குவார்’னு சொல்லி அனுப்பினார். கொஞ்சநாள் கழிச்சு காமராஜ், ரூ.10 லட்சம் கொடு. நான் வீட்டை காலி செய்யச் சொல்றேன். இல்லன்னா வீட்டை விற்று உன் பணத்தை செட்டில் பண்ண சொல்றேனு’ சொன்னார். அதை நம்பி நானும் காமராஜ்கிட்ட ரூ.10 லட்சம் கொடுத்தேன்.
ஆனால், எந்தத் தகவலும் சொல்லவே இல்லை. மீண்டும் நான் ராமகிருஷ்ணனை தொடர்புகொண்டபோது, ‘தேர்தல் செலவுக்காக ரூ.20 லட்சம் கடனாகக் கொடு. திருப்பிக் கொடுக்கிறோம். ஆட்சிக்கு வந்துட்டா எல்லாத்தையும் சரி பண்ணிடலாம்’னு சொன்னார். அதையும் கடன் வாங்கித்தான் கொடுத்தேன். அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தது. காமராஜும் அமைச்சர் ஆனார். ஆனால், இதுவரை என் பணத்தையும் கொடுக்கவில்லை. வீட்டையும் காலி செய்யச் சொல்லவில்லை. மீண்டும் ராமகிருஷ்ணனைத் தொடர்புகொண்டு பணம் கேட்டபோது, சென்னையில் லாட்ஜ் ஒன்றுக்கு வரச் சொல்லி அடித்து மிரட்டினார். அதன் பிறகுதான் நான், திருவாரூர் எஸ்.பி, டி.எஸ்.பி., கலெக்டருக்கு எல்லாம் புகார் கொடுத்தேன். யாருமே நடவடிக்கை எடுக்கலை.
இந்த நிலையில்தான், கடந்த 3-ம் தேதி மன்னார்குடிக்கு விசாரணைக்காக அழைத்த போலீஸார், ‘‘நீ அமைச்சர் மீது புகார் கொடுத்திருக்கிறாய். திரும்பிப்பார்க்காம பின்பக்கமா ஓடிடு! இல்லன்னா நடக்கிறதே வேற...’’ என்று சொல்லி விரட்டியடித்தனர். வேறு வழியில்லாமல்தான் நான் நீதிமன்றத்துக்குச் சென்றேன். நான் வீட்டுக்குப் போய் பல மாதங்கள் ஆகின்றன. கடன்காரர்கள் தொல்லை, அமைச்சரின் ஆட்கள் மிரட்டல் ஆகியவற்றால், நானும் என் மனைவியும் பிரிந்து இருக்கிறோம். என்னைப் பார்த்தால் எதை வேண்டுமானாலும் செய்வதற்குத் தயாராக இருக்கிறார்கள் அமைச்சர் தரப்பினர். மேலும் என் உறவுக்காரர்களிடம், ‘பணம் தருகிறோம். வழக்கை வாபஸ் வாங்கச் சொல்லுங்கள்’ என்று மிரட்டுகிறார்கள். என் உயிருக்கு ஆபத்து என்றால், அதற்கு அமைச்சர் காமராஜ்தான் காரணம் என்று முதல்வர், கவர்னர், நீதிபதி மற்றும் காவல் துறையினருக்கும் கடிதம் அனுப்பியிருக்கிறேன்’’ என்றார் விரக்தியில்.

குற்றச்சாட்டுக்களுக்கு அமைச்சர் காமராஜ் என்ன பதில் சொல்கிறார்? ‘‘என் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது என்பதை நான் பேப்பரில் பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன். அந்தக் குற்றச்சாட்டை எதை வைத்து சொல்கிறார் என்று தெரியவில்லை. அந்த நபரை ஒருமுறைகூட நான் பார்த்தது இல்லை. ஆளையே தெரியாதுன்னு சொல்லும்போது அவர் குறிப்பிட்டுள்ள பிரச்னை பற்றி எப்படி என்னிடம் கேட்கிறீர்கள்...’’ என்று படபடத்தார் அமைச்சர்.
ராமகிருஷ்ணன் இப்போது தலைமைச் செயலகம் செய்தித் துறையில் ஏ.பி.ஆர்.ஓ-வாக வேலை செய்கிறார். அவரிடம் பேசினோம். ‘‘குமாரை நான் பார்த்ததே இல்லை. சந்தித்ததும் கிடையாது. அவர் யார் என்றே தெரியாது’’ என்றார்.
 புகைய ஆரம்பித்துவிட்டது. நெருப்பு எங்கே என்பது தெரியாமலா போய்விடும்?



No comments:

Post a Comment