சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

18 Apr 2015

இந்திய மக்களின் மனம் கவர்ந்த ஐ.பி.எல். அணி சென்னைதான்...!

ந்திய மக்களின் மனம் கவர்ந்த ஐ.பி.எல். அணி எதுவென்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் என்று உறுதியாக சொல்லும் வகையில் அந்த அணிக்கு இந்தியா முழுவதுமே ரசிகர்களிடையே அமோக ஆதரவு உள்ளது. . நேற்று மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி மோதியது.

இந்த போட்டியின் போது மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை ரசிகர்களின் ஆதிக்கத்தையும் காண முடிந்தது. அதோடு நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணியின் தொடக்க வீரர்கள் ஸ்மித்தும் மெக்கல்லமும் மும்பை அணி வீரர்களின் பந்து வீச்சை பின்னி எடுத்து விட்டனர். பவர்பிளேவான முதல் 6 ஓவர்களில் மட்டும் இந்த ஜோடி 90 ரன்களை குவித்தது. ஐ.பி.எல். வரலாற்றில் பவர்பிளேவில் அடிக்கப்பட்ட 2வது அதிக ரன் இதுதான். இதற்கு முன் கடந்த சீசனில் பஞ்சாப் அணிக்கு எதிராகவும் சென்னை அணி பவர் பிளேவில் 100 ரன்கள் அடித்து சாதனை படைத்திருந்தது.
இந்த சமயத்தில் இந்தியா முழுக்க உள்ள ஃபேஸ்புக் ரசிகர்களின் ஆதரவு யாருக்கு இருக்கிறது என்று ஒரு புள்ளி விபரம் வெளியிடப்பட்டது. அதில் இந்தியா முழுவதுமே சென்னை அணிக்குதான் ரசிகர்களிடையே அமோக ஆதரவு காணப்பட்டது.  சொல்லப்போனால் மும்பை அணிக்கு மகராஷ்டிராவில் கூட ஆதரவு இல்லை என்றே சொல்ல வேண்டும். 

சென்னை அணி இந்தளவுக்கு இந்திய மக்களின் மனதை கொள்ளையடிக்க காரணமாக உள்ளவர்கள் இரண்டு பேர். ஒருவர் இந்திய அணியின் கேப்டன் தோனி. இவர் எந்த ஊரில் களமிறங்கினாலும் மைதானம் முழுக்க தோனி...தோனி என்று கூச்சல் எழும்பும். இன்னொருவர் நியூசிலாந்து அணியின் கேப்டன் பிரன்டென் மெக்கல்லம். இவருடைய அதிரடியை ரசிக்காத எதிரணி வீரர்கள் கூட கிடையாது.

போதாக்குறைக்கு உலகக் கோப்பையில் ஜொலிக்காத ட்வைன் ஸ்மித்தும் நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். தற்போது ஸ்மித்தும் அதிரடியில் கலக்குகிறார். மேலும் சுரேஷ் ரெய்னா, பிராவோ, அஸ்வின் என அணியில் இந்திய மக்களுக்கு மிகவும் பரிச்சயமான வீரர்களே இடம் பெற்றுள்ளதால் சென்னை அணிதான் இந்திய மக்களின் மனதை கொள்ளை கொண்ட அணியாக உள்ளது.No comments:

Post a Comment