சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

25 Apr 2015

நெருங்கும் நெருக்கடி !

‘எல்லோர் பார்வையும் டெல்லியை நோக்கியே!” என்றபடியே வந்து குதித்தார் கழுகார்!
‘‘தமிழகத்தின் மொத்த அரசியலும் டெல்லியை எதிர்நோக்கியே இருக்கிறது. டெல்லி என்றால் பி.ஜே.பி தலைமை, மத்திய அரசு என்று நினைக்க வேண்டாம். அனைவரும் எதிர்பார்த்திருப்பது உச்ச நீதிமன்றத்தையே!” என்று சிறுவிளக்கத்தையும் சிந்திவிட்டு கழுகார் தொடங்கினார்.
‘‘ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் செய்துள்ளார்கள். விசாரணையை முடித்த நீதிபதி குமாரசாமி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பைத் தள்ளி வைத்துள்ளார். இதில், அரசு வழக்கறிஞராக பவானி சிங்கை தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை ஆஜராக உத்தரவு போட்டது. கர்நாடகத்துக்கு வழக்கை மாற்றினால், அந்த மாநில அரசுதானே அரசு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும் என்று தி.மு.க பொதுச்செயலாளர் அன்பழகன் எதிர் மனு போட்டார். அதனுடைய விசாரணை கடந்த 21, 22 தேதிகளில் உச்ச நீதிமன்றத்தில் நடந்தது!”

‘‘ஏப்ரல் 27-ம் தேதி தீர்ப்பு தரப்போவதாக நீதிபதிகள் சொல்லியிருக்கிறார்களே?”

‘‘அன்பழகன் மனு மீதான விசாரணை மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் முன்பு நடந்தது. அந்த விசாரணை ஆளும் கட்சி வட்டாரத்தை கவலை அடைய வைத்துள்ளது. ‘இந்த வழக்கில் பவானி சிங் ஆஜராவதற்கு எந்த வகையான அங்கீகாரமும் இல்லை. இதில் வழக்கறிஞரை நியமிப்பதற்கு தமிழக அரசுக்கு எந்த வகையிலான சட்டரீதியான உரிமையும் கிடையாது. தண்டனை பெற்றவர்கள் ஜாமீன் கேட்டபோது பவானி சிங் ஆட்சேபனை செய்யவே இல்லை. இது அவருடைய உள்நோக்கத்தையே காட்டுகிறது’ என்று தி.மு.க தரப்பு வழக்கறிஞர் அந்தியர்ஜுனா வாதம் வைத்தார். ஜெயலலிதா தரப்பில் நாரிமன் வாதாடினார். ‘இந்த வழக்கை நடத்துவதே தமிழக அரசுதான். வழக்குச் செலவையும் அவர்கள்தான் பார்க்கிறார்கள். எனவே, அரசு வழக்கறிஞரை நியமிக்கும் அதிகாரம் அவர்களுக்குத்தான் உள்ளது’ என்று தனது வாதத்தை வைத்தார். 21-ம் தேதி விசாரணை முடிந்ததுமே, மறுநாள் விசாரணை தொடரும் என்று அறிவித்தார்கள்!”
‘‘மிகமிக வேகமாக இருக்கிறதே!”
‘‘டெல்லி, சென்னை, பெங்களூரு என அனைத்து நீதிமன்றங்களிலும் இந்த வாரத்தில் இதுதான் ஹாட் டாபிக். இரண்டு நாட்களில் நீதிபதிகளை நியமித்து, விசாரணை உடனடியாக இரண்டு நாட்கள் நடந்த அதிவேக துரித வழக்கு இதுதான். 22-ம் தேதி விசாரணை இன்னும் துரிதமாக நடந்தது. முந்தைய நாள் வைத்த வாதங்களையே தி.மு.க தரப்பு அந்தியர்ஜுனாவும் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் நாரிமனும் வைத்தார்கள். புதிதாக தே.மு.தி.க வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி ஆஜரானார்!”
‘‘இவர் இங்கே எப்படி திடீரென்று வந்தார்?”
‘‘மேல்முறையீட்டு மனுவில் பவானி சிங் ஆஜரானபோதே உச்ச நீதிமன்றத்தில் மனு போட்டவர்தான் இந்த வழக்கறிஞர். ‘நீங்கள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் போய் மனுவை தாக்கல் செய்யுங்கள்’ என்று அப்போது உச்ச நீதிமன்றம் சொன்னது. கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அன்பழகன் மனு போட்டதால் இவர்கள் அமைதி ஆகிவிட்டார்கள். இந்த விஷயங்களை எல்லாம் ஜி.எஸ்.மணி சொல்லியிருக்கிறார். அதையும் நீதிபதிகள் குறித்துக்கொண்டார்கள். அப்போது ஜெயலலிதாவின் வழக்கறிஞர் நாரிமனிடம், ‘இந்த விவகாரத்தில் சட்டப் பிரிவுகள் என்ன சொல்கின்றன’ என்று கேட்ட நீதிபதிகள் தங்கள் கருத்தைச் சொல்லச் சொல்ல நீதிமன்ற வளாகமே நிசப்தம் ஆனது. ‘இந்த மேல்முறையீட்டு வழக்கில் பவானி சிங் ஆஜரானது நடைமுறை விதிகளுக்கு எதிரானது’ என்று வெளிப்படையாகவே சொன்னார்கள். அதற்காக இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தத் தேவையில்லை என்றும் சொன்னார்கள்!”
‘‘பவானி சிங் நியமனம் செல்லாது என்று சொன்னால், மறுவிசாரணை நடத்த வேண்டும் என்பதான சூழ்நிலையாக அமையுமே?”
‘‘நீதிபதிகள் அதற்கு விளக்கம் சொல்லியிருக்​கிறார்கள். ‘ஒரு நீதிபதி, வழக்கறிஞரின் வாதத்தை மட்டும் வைத்து தீர்ப்பு அளிக்கப் போவதில்லை. அந்த வழக்கின் பல்வேறு தன்மைகளைப் பார்த்துத்தான் தீர்ப்பு எழுதுவார்கள். ஏற்கெனவே சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, சாட்சிகள், ஆவணங்கள் அடிப்படையில் மேல்முறையீட்டு மனுவை பரிசீலித்து தீர்ப்பு தரலாம். அதற்குத் தடை இல்லை’ என்று சொல்லியிருக்கிறார்கள். ‘சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தீர்ப்பு அளிக்கலாம் என்று சொல்லியிருப்பதை நினைத்தாலே பயமாக இருக்கிறது’ என்று அ.தி.மு.க-வினர் இப்போதே சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். பவானி சிங் பற்றி அன்பழகனின் வழக்கறிஞர் அந்தியர்ஜுனா சில புகார்களைச் சொல்லியிருக்கிறார். ஆனால் அதனை நீதிபதிகள் அனுமதிக்கவில்லை. அன்பழகன் தனது பதிலை எழுத்துப்பூர்வமாக 23-ம் தேதி தரலாம் என்றும் நீதிபதிகள் சொன்னார்கள். வியாழக்கிழமை காலையில் ஜெயலலிதா தரப்பு ஒரு மனுவைத் தாக்கல் செய்தது. ‘நாங்களும் எழுத்துப்பூர்வமான மனுவைத் தாக்கல் செய்யலாமா’ என்று அவர்களுக்கும் அனுமதி கொடுத்துவிட்டார்கள் நீதிபதிகள். இந்த நிலைமையில்....!”
‘‘தீர்ப்பு எப்போது?”
‘‘அதைத்தான் சொல்ல வருகிறேன்! விசாரணையி​ன்போது நீதிபதிகள் சொன்னதை வைத்துப் பார்த்தால், கர்நாடக நீதிமன்றம் தீர்ப்பை வழங்கு​வதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால்
27-ம் தேதி தரப்போகும் தீர்ப்பில் என்ன சொல்லப் போகிறார்கள், ஏதாவது நிபந்தனைகள் இருக்கிறதா என்பதையும் நினைத்து பதற்றத்தில் இருக்கிறது ஜெயலலிதா தரப்பு. உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, கர்நாடக உயர் நீதிமன்றத்திலும் எதிரொலிக்க வாய்ப்பு இருக்கலாம் என்றும் நினைக்கப்படுகிறது. திங்கள் வரை காத்​திருப்போம்” என்ற கழுகார், உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் 2ஜி விவகாரத்து சிக்கலை அடுத்து சொல்ல ஆரம்பித்தார்!
‘‘2ஜி வழக்கில் புதிய எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று சொல்லி உச்ச நீதிமன்றத்தில் கடந்த 20-ம் தேதி சி.பி.ஐ கொளுத்திப்போட்ட திரி, பரபர என பற்றத் தொடங்கியிருக்கிறது. இதைக் கடந்த இதழில் லேசாகக் கோடிட்டும் காட்டி இருந்தேன்!”
‘‘ஆமாம்!”
‘‘அப்போது சி.பி.ஐ சார்பில் சொல்லப்பட்ட விஷயம்தான் தி.மு.க வட்டாரத்தை பதற வைத்துள்ளது. ‘2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றவாளியாக இருக்கும் ஒருவர், இதே வழக்கில் தொடர்புடைய நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு தனிநபரின் தவற்றை மூடிமறைக்க முயற்சி செய்கிறார். தனி நபரை பாதுகாக்கும் வகையில் இப்போதுள்ள குற்றவாளி முயற்சி செய்ததை விசாரணை நடத்துவதற்காக புதிதாக எஃப்.ஐ.ஆரை வழக்கில் சேர்ப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டின் அனுமதியை சி.பி.ஐ கோருகிறது’ என்று சொன்ன சி.பி.ஐ வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் அத்துடன் நிற்காமல் 2ஜி ஊழல் தொடர்பாக சி.பி.ஐ மேற்கொண்ட விசாரணை பற்றி சில புதிய விவரங்களை சீலிடப்பட்ட ஓர் உறையில் போட்டு  நீதிபதியிடம் ஒப்படைத்துள்ளார். ‘2ஜி வழக்கில் தொடர்புடைய நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு தனிநபருக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்துள்ளார். இதை நிரூபிப்பதற்குத் தேவையான ஆடியோ டேப் ஆதாரம் சி.பி.ஐ அதிகாரிகளுக்குக் கிடைத்துள்ளது. அந்த டேப்பின் நம்பகத்தன்மை குறித்து பரிசோதித்துப் பார்த்ததில், அந்த உரை​யாடல் மேற்கண்ட இரு நபர்களுக்கும் இடையில் நடைபெற்றதுதான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது’ என்றும் சொல்லியிருக்கிறார். தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து மற்றும் நீதிபதி அருண் மிஸ்ரா அடங்கியோர் பெஞ்ச்  இதனை விசாரித்தது. இந்த விசாரணையின் அடுத்த நிலை என்ன என்பது ஏப்ரல் 30-ம் தேதிதான் தெரியும். காரணம் அன்றைக்குத்தான் விசாரணையை ஒத்தி வைத்திருக்கிறது நீதிமன்றம்!”
‘‘என்ன ஆதாரம்? கலைஞர் டி.வி. அலுவலகத்துக்கு கனிமொழி வந்து செல்லும் சி.டி இருப்பதாகச் சொன்னீரே... அதுமட்டும்தானா?”
‘‘இன்னும் சில தகவல்கள் கிடைத்துள்ளன. அதையும் சொல்லி விடுகிறேன்! கடந்த தி.மு.க ஆட்சியில் உளவுத் துறை அதிகாரியாக இருந்த ஜாஃபர் சேட்டுடன் கலைஞர் டி.வி-யின் சரத்தும் கனிமொழியும், கருணாநிதியின் செயலாளர் சண்முகநாதனும் பேசிய செல்போன் உரையாடல்கள் முக்கிய ஆதாரங்களாக நீதிமன்றத்தில் காட்டப்படப் போகிறதாம்.  மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிட்டுப் பரபரப்பை கிளப்பினார் அல்லவா? அந்த கேசட்தான் இதற்கு அடிப்படை!”
‘‘இதுபற்றி ‘2ஜி டிரிங்... டிரிங்’ என்ற தலைப்பில் 9.2.14 தேதியிட்ட ஜூ.வி இதழில் ஏற்கெனவே எழுதி இருக்கிறோமே?”
‘‘அதுதான்! (அந்த உரையாடலின் முக்கியமான பகுதிகள் பெட்டிச் செய்தியாக வெளியிடப்பட்டு உள்ளது!) இந்த உரையாடலின் பகுதிகளை ஆதாரமாகக் கொண்டுவந்து 30-ம் தேதி உச்ச நீதிமன்றத்​தில் அவிழ்க்கப் போவதாகச் சொல்கி​றார்கள். இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் எப்படி டீல் செய்யும் என்பதில் தி.மு.க வட்டாரத்துக்குப் பதற்றம் அதிகமாகி வருகிறது. கருணாநிதி, கனிமொழி ஆகியோர் பதற்றம் கூடுதலாகிக் காணப்படுகிறார்களாம். ‘இந்த விஷயத்தில் தன்னை தனிமைப்படுத்தி பழிவாங்கப்​பட்டதாக நினைக்கிறார் கனிமொழி. யாருக்காகவோ நான் பழிசுமக்​கிறேன் என்றும் அவர் நினைக்கிறார்’ என்றும் அவரது ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். கனிமொழிக்கு கருணாநிதி ஆறுதல் சொன்ன​தாகவும், இது ஸ்டாலினுக்குத் தெரியவந்து அவரும் கனிமொழியை சந்தித்துப் பேசிய​தாகவும் சொல்கிறார்கள். இதற்கிடையில் இன்னொரு தகவலும் சொல்லப்படுகிறது!”
‘‘அது என்ன?”
‘‘மாநிலங்களவையில் கனிமொழி பேசிய காட்சிகள் ஒரு தனியார் தொலைக்காட்சியில் அப்படியே ஒளிபரப்பப்பட்டது. ஆனால், தி.மு.க ஆதரவு தொலைக்காட்சியில் வரவில்லையாம். ‘உங்களுக்காக கஷ்டத்தை அனுபவித்தவர் அவர். நீங்கள்தானே கனிமொழி பேச்சை ஒழுங்காக ஒளிபரப்ப வேண்டும்’ என்றதாம் அந்தக் குரல். தீயாய் இருந்ததாம் அந்தக் குரல். அதன் பிறகுதான் இவர்கள் ஒளிபரப்பி இருக்கிறார்கள்!”
‘‘அந்தக் குரல் யாருடையது?”
‘‘கேட்கும் உரிமை உள்ளவரின் குரல்தான் அது! தங்கம் திருடியது யார் என்று சொல்ல வருகிறேன்!’’ என்று டாப்பிக்கை திருச்சி பக்கம் மாற்றினார்.

‘‘திருச்சி சுங்கத் துறை அலுவலகத்தில் இருந்து 15 கிலோ தங்கம் காணாமல்போனது பற்றி கடந்த இதழில் சொல்லியிருந்தேன் அல்லவா... அதில் நான் குறிப்பிட்டிருந்த செந்தில்குமார் (முருக கடவுள் பெயரைக் கொண்டவர்), பாரூக் (கிக்கானவர்!) ஆகிய இருவரும் தற்போது சஸ்பென்ட் செய்யப்​பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடக்கிறது. பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த மற்ற தங்கம் பாதுகாப்பாக இருக்கிறதா என்ற சந்தேகமும் தற்போது எழுந்துள்ளது. அதையும் விசாரிக்​கட்டும்!’’
‘‘ம்! அக்ரி கிருஷ்ணமூர்த்தி விவகாரத்தில் எதுவும் அப்டேட் உண்டா?”
‘‘அக்ரி கிருஷ்ணமூர்த்தியிடம் உதவி​யாளராக இருந்த பூவையாவை இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக சேர்த்துள்ளனர். ஏற்கெனவே அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ‘அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி சொல்லியபடி செய்தேன். அவர்தான் என்னை முத்துக்குமாரசாமியிடம் பேசி பணத்தை வசூலிக்க சொன்னார். அதற்காகப் பலமுறை அவரிடம் பேசினேன். இது தவிர, முத்துக்குமாரசாமிக்கும் எனக்கும் தனிப்பட்ட வகையில் எந்தப் பகையும் கிடையாது’ எனச் சொல்லியிருக்கிறார். இந்த விவரங்கள் வழக்கில் முக்கிய சாட்சியாக இருக்கும் என்பதால், அதனை நீதிமன்றத்தில் தெரிவிக்கும்படி சி.பி.சி.ஐ.டி போலீஸார் அறிவுறுத்தி உள்ளனர். அதனால் சங்கரன்கோவில் குற்றவியல் நீதித் துறை நடுவர் மன்ற நீதிபதி முரளிதரகண்ணன் முன்னிலையில் பூவையா 23-ம் தேதி ஆஜரானார். அப்போது பூட்டிய அறையில் சுமார் ஒரு மணிநேரம் அவர் நீதிபதியிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். அப்போது, இந்த வழக்கில் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு உள்ள தொடர்பு பற்றி பல முக்கிய சம்பவங்களை விளக்கமாகச் சொல்லியிருக்கிறார்.”
‘‘பூவையா வாக்குமூலம் கொடுத்தது அக்ரிக்குத் தெரியுமா?’’
‘‘ஜெயிலில் இருக்கும் அக்ரி கிருஷ்ண​மூர்த்திக்கு விவரத்தைச் சொல்லியிருக்​கிறார்கள். ‘யாரு என்ன வேணும்னாலும் சொல்லட்டும். எல்லோரையும் நம்பினதுக்கு நான் இப்போ அனுபவிக்கிறேன்!’ என்று வருத்தத்துடன் பேசியதாகச் சொல்கிறார்கள்’’ என்றபடி பறந்தார் கழுகார்.
படம்: வீ.சக்திஅருணகிரி

சி.பி.ஐ தாக்கல் செய்ய இருக்கும் சி.டி-யில் இருப்பது என்ன?
கலைஞர்  டி.வி-யின் நிர்வாக அதிகாரி சரத்துக்கும் முன்னாள் உளவுத் துறை 

அதிகாரி ஜாஃபர் சேட்டுக்கும் இடையில் நடந்ததாக வெளியான உரையாடல்..
(தேதி: 13.02.2011)

சரத்: ‘‘சார், அந்த சினியுக் ஆட்கள் டெல்லி, மும்பையில் இருந்து பேசினார்கள். அவர்களுக்குக் கிடைத்த தகவல்படி, அநேகமாக இந்த வாரம் (அதாவது சி.பி.ஐ அதிகாரிகளை சொல்கிறார்கள்!) வந்துவிடுவார்கள். இந்த தடவை கேள்விகளோடு மட்டும் வரமாட்டாங்க. இயக்குநர்களை கைதுசெய்யவும் வருவார்கள். அதனால் தயாராக இருக்குமாறு சொன்னார்கள். எப்படி இவ்வளவு உறுதியாகச் சொல்றீங்கன்னு நான் கேட்டேன். அதற்கு அவர், ‘எங்கள் தகவல் 100 சதவிகிதம் சரி. உங்கள் தலைவரிடம் சொல்லிவிடுங்கள்’ என்றார்கள். 

இது மதியம். இப்போது தலைவரிடம் சொல்ல முடியாது என்று நான் கூறினேன். ‘சரி, அப்ப இந்த விஷயத்தை எப்படிக் கையாளுவதென்று நீங்கள் முடிவு செய்துகொள்ளுங்கள். இதைத்தாண்டி எங்களால் எதுவும் சொல்ல முடியாது’ என்றார்கள். 

ஜாஃபர்:
 போன தடவையும் அவர்கள் இதைத்தானே சொன்னார்கள்... டி.வி அலுவலகத்​துக்கு வருவார்கள் என்று சொன்னார்கள். நினைவிருக்கிறதா?

சரத்: ஆமாம்... இப்போது சொன்னார்கள். எல்லாம் தயாராக இருக்கிறது. இப்போது அவர்கள் வருவது விசாரணைக்கு அல்ல. கைதுக்கு. ஆகையால் இது குறித்து நீங்கள்தான் முடிவுசெய்ய வேண்டும். நீங்கள் உங்கள் சோர்ஸ்களில் விசாரித்துவிட்டு, இதை உறுதி செய்யுங்கள்!
....................

ஜாஃபர்: பரிவர்த்தனை விவரங்களைத் தெரிவித்து விட்டோம். அவர் (கனிமொழி) இயக்குநர் இல்லை என்பதையும் பங்குகளை மட்டுமே வைத்துள்ளார். மற்றொரு இயக்குநர் அங்கே இல்லை. இதுபோன்ற விவகாரங்கள்...

சரத்: சார்.... அந்தப் பரிவர்த்தனை நடக்கையில் அவர் (கனிமொழி) அங்கே இருந்தார். அதுதான்...
ஜாஃபர்: என்ன..? என்ன...?
சரத்: சார், பரிவர்த்தனை நடந்தபோது அவரும் அங்கே ஓர் இயக்குநர்.
ஜாஃபர்: உண்மையாகவா?
சரத்: ஆமாம் சார்.
ஜாஃபர்: அன்றைக்கு இல்லை என்று சொன்னீர்களே...
சரத்: சார், அவர் டிசம்பர் மாதத்தில் இயக்குநர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். எல்லாம் பழைய தேதிகள் சார். நான் இப்போது உட்கார்ந்து சரிபார்த்துக் கொண்டிருக்கிறேன்.
ஜாஃபர்: இல்லை... டிசம்பரில் ராஜினாமா. அது உள்ளே வருகிறதா என்ன?
சரத்: சார், பணம் 2008-ல்தானே வந்தது?
ஜாஃபர்: ஓ... இந்த டிசம்பரில்தானே அவர் ராஜினாமா செய்தார்?
சரத்: ஆமாம் சார். இந்த டிசம்பரோ... போன டிசம்பரோ... ஆனால், அவர் அந்தக் காலகட்டத்தில் இயக்குநராக இருந்தார். நான் ஒரு 100 பக்கங்களைப் பின்தேதியிட்டு நேற்றுதான் கையெழுத்திட்டேன். எல்லாவற்றையும் நகல் எடுத்துப் படித்துக்கொண்டிருக்கிறேன்.
ஜாஃபர்: ம்ம்.
சரத்: பிரச்னை என்னவென்றால், நாம் பல விஷயங்களைக் கேள்விப்படுகிறோம். பல்வேறு 
கேள்வி​கள் எழுப்பப்படுகின்றன. அதற்குத் தகுந்தாற்போல, ஆவணங்களைத் திருத்துகிறோம். அதனால் பக்கங்கள் மாறிவிடுகின்றன.

ஜாஃபர்: ம்ம்...

சரத்: கனி மேடம் 2007-ல் இல்லை. 2007-க்குப் பிறகு பெரியம்மா (தயாளு அம்மாள்) இருந்தார்.
ஜாஃபர்: பெரியம்மா இருந்தது எனக்குத் தெரியும். அவருக்கு ஆங்கிலமும் தெரியாது, தமிழும் தெரியாது என்பதால் அவர் இருந்தார்.
....................

ஜாஃபர் சேட்டுக்கும், கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனுக்கும் இடையே நடைபெற்றதாக வெளியாகியிருக்கும் உரையாடல்.

ஜாஃபர்: ஜாஃபர்...

சண்முகநாதன்: சார் வணக்கம்... சண்முகநாதன்.

ஜாஃபர்: 
சார், பேசிட்டேங்க சார். அவர் மொதல்ல 60 ரெடி பண்ணிடறேங்கறாராம்.

சண்முகநாதன்: சரி.

ஜாஃபர்: 60 எல்லாம் ரெடியா இருக்குது. அட்வர்டைஸ்மென்ட் மாதிரி குடுத்துறேங்கறாராம். அஞ்சு வருஷத்துக்கு அட்வர்டைஸ்மென்டுக்குன்னு போட்டு குடுத்துடறேங்கறாராம். இன்னொரு 
20-க்கு வழிபண்ணித் தர்றேன். உடனே பண்ண முடியாதுங்கறாராம். என்ன சொல்றாருன்னா, 60 கன்ஃபர்ம் ஆயிடுச்சு. நான், சரி அந்த 60 மொதல்ல வொர்க் அவுட் பண்ணுங்கன்னு  சொன்​னேன். மீதி 40-க்கு வேற வழி வேணும்னு சொன்னேன். மொதல்ல 20-ஐ பேசுவோம். நான் இன்னொரு தடவை அவர்கிட்ட பேசிப் பாத்துட்டு சொல்றேன்னு சொல்லிட்டு, அஞ்சு வருஷத்துக்கு அட்வர்டைஸ்மென்ட் மாதிரி குடுத்துடறாருங்க சார். அதைக் கொடுத்து 60 குடுத்துடுறாரு இவங்க கம்பெனிக்கு.

சண்முகநாதன்: அட்வர்டைஸ்மென்டுனா கரெக்டா இருக்காதே...

ஜாஃபர்: 
நான் நேரா இன்னொரு தடவை பேசிடுறேன் சார். ஈவ்னிங் பேசடுறேன். 60 ரெடி பண்ணிட்டாரு. 60 ரெடி சார். இன்னும் 20 ரெடி பண்ணிடுறேன்னு சொன்னாரு சார். இன்னொண்ணு சொன்னாராம். நீங்க பர்மிஷன் வாங்கி சொன்னீங்கன்னா, எனக்குத் தெரிஞ்சு இன்னொருத்தர் இருக்காரு. அவர் மூலமா இன்னொரு 40 ரெடி பண்ணிடலாம்னு சொன்னாரு. அது யாருன்னு போன்ல வேணாம். நான் நேரா பாத்துட்டு ஈவ்னிங் சொல்றேன் சார். தேங்க்யூ சார்.

சண்முகநாதன்: தேங்க்யூ.

ஓ. ‘ஆன்மிக’ பன்னீர்!

ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு அவரது சொந்த ஊருக்கு வருவது இது மூன்றாவது முறை. ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டும் என்று தற்கொலை செய்து​கொண்டார் வடபுதுப்பட்டியைச் சேர்ந்த ராஜோக்கியம். அவரது வீட்டுக்கு இழப்பீடு கொடுப்பதற்காக தேனிக்கு வந்தார் பன்னீர். இறந்துபோனவர் வீட்டுக்குச் சென்று இழப்பீட்டுத் தொகையைக் கொடுத்துவிட்டு, பெரியகுளத்தில் உள்ள தனது வீட்டுக்குச் சென்றார். இரவு அங்கே தங்கியவர், மறுநாள் காலை பெரியகுளம் பாலசுப்ரமணியசுவாமி கோயிலுக்குப் போனார். அங்கிருந்து நேராக கைலாசநாதர் கோயில் சென்றார். மதியம் வீரபாண்டி கௌமாரியம்மன் கோயிலுக்குச் சென்றவர், அங்கிருந்த கொடிக் கம்பத்துக்கு தண்ணீர் ஊற்றி வணங்கினார்.


No comments:

Post a Comment