சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

18 Apr 2015

ஓ காதல் கண்மணி - படம் எப்படி ?

'ல்யாணம் தேவையா... இல்லையா?' - இதுதான் ‘ஓ காதல் கண்மணி’.
வீடியோ கேம் உருவாக்கும் ஜாலி ஐடி பாய் துல்கர் சல்மான். ஆர்க்கிடெக்ட் படிக்கிற ஜிலீர் பெண்ணாக நித்யா மேனன். ரெண்டு பேருக்கும் ஒரே மைண்ட் செட்... 'கல்யாணம்னாலே டார்ச்சர்’. அதே மைண்ட் செட்டோட மீட்டிங்... அப்பறம் டேட்டிங்... ஒரு கட்டத்துல நாம ஏன் கல்யாணம் பண்ணாமலேயே வாழக் கூடாதுன்னு யோசிக்கிறாங்க. முடிவு என்னாச்சுங்கறது மிச்ச கதை!

'மீட் பண்ணலாமா', 'வாயேன்', 'பக்கா', 'கல்யாணம்', 'ஆமா' ... இப்படி படம் முழுக்க மணிரத்னம் சிறப்பு கட் டு கட் வசனங்கள். மும்பையை வளைய வந்து சுத்திக் காட்டியிருக்கிறார்கள்.
’உஸ்தாத் ஹோட்டல்’, ‘100 டேஸ் ஆஃப் லவ்’ இப்படி மலையாளம் ஏரியா படங்களை மாறி மாறி பார்க்கும் ரசிகராக இருந்தால் துல்கர் சல்மான், நித்யா ஜோடி கொஞ்சம் பழசுதான். ஆனால், போஸ்டர்ல மட்டும்தான் பாத்திருக்கோம்னு சொன்னா, இவங்க கெமிஸ்ட்ரிக்கு இந்தப் படம் கேரன்டி.
ஒவ்வொரு சீன்லயும் துல்கர் சல்மான் துறுதுறு கேரக்டர். கவலையே இல்லாமல் வந்து, 'ப்ச்... நமக்கு இப்படி ஒரு வாழ்க்கை இல்லியே?'னு நினைக்க வைக்கிறாரு. நித்யா மேனன் ஒரு படி மேல. இப்படி ஒரு ஆபீஸ் எங்கேப்பா இருக்கு? அவங்க பாட்டுக்கு வராங்க, டக்குன்னு கிளம்பி காபி சாப்பிடப் போறாங்க. ஈரமான கண்கள், குண்டு கன்னம், சுருள் முடின்னு இப்படி ஒரு பொண்ணு நம்ம வீட்டுப் பக்கத்துல இல்லியேன்னு ஏங்க வைக்கிறாங்க.பிரகாஷ் ராஜ், லீலா சாம்சன் ஜோடிதான் கதையின் கனமான பாத்திரங்கள். மற்றபடி கனிகா கெஸ்ட் ரோல் மாதிரி மத்தவங்களும் வர்றாங்க... போறாங்க!
படத்துக்கு முக்கிய பலம் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள், பின்னனி இசை. முந்தைய மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியோடு ஒப்பிடும்போது இந்தப் படம் சுமார்தான். எனினும், படமே ஏ.ஆர்.ரஹ்மான் இசைதான் என்பதையும் மறுக்க முடியல. ’மென்டல் மனதில்’, 'மௌலாலா’ பாடல்கள் ஐபாட் லிஸ்ட். பி.சி.ஸ்ரீராம் மும்பையின் சந்துகள்ல நம்மை கையைப்பிடிச்சே அழைச்சுகிட்டுப் போறார். பாடல் காட்சிகளில் நமக்கு ஒரு ஜோடி இறக்கைகள் முளைத்துவிடும் போல்.

எனினும் என்ன பயன்? க்ளைமாக்ஸ் இதுதான் எனத் தெரிஞ்சுட்ட பிறகும் படம் பார்ப்பது, கொஞ்சம் கஷ்டமாதான் இருக்குது. தமிழ் சினிமா ரசிகர்கள் இப்ப வேற மாதிரின்னு சொல்லத் தோணுது. திரும்பத் திரும்ப அதே மாதிரி காட்சிகள், மீண்டும் மீண்டும் கட்டிப்பிடி கசமுசாக்கள்... கொஞ்சம் போர். ஒரு கட்டத்தில் 'அட முடிங்கப்பா'ன்னு தியேட்டர் இருட்டில் சத்தங்கள் கேட்குது.
சரி... படம் பார்க்கலாமா? பாப்கார்ன் சாப்பிட்டுகிட்டே கேர்ள் ஃப்ரண்டோட ஜாலியா ஒரு படம் பார்க்கணும்னா இந்தப் படம் 'ஒகே கண்மணி’. சீரியஸ் சினிமா ரசிகர்களுக்கு கொஞ்சம் நாட் ஓகே!



No comments:

Post a Comment