சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

10 Apr 2015

எல்லாத்துக்கும் தேவை புரதம்!


நான் சிக்ஸ்பேக் டிரை பண்றேன்... ஃபிட்டாக இருக்கணும்'' என்று ஜிம்முக்கு செல்பவர்கள் அதிக அளவில் பயன்படுத்தும் பொருள் புரோட்டீன் பவுடர். உடல் ஃபிட்டாக இருக்க மட்டுமல்ல, உடல் ஆரோக்கியம், முடி ஆரோக்கியம், பளபளப்பான சருமம் என ஒவ்வொன்றுக்கும் புரதச் சத்தின் தேவை மிக அதிகம்.
நம் உடலின் 60 சதவிகித்துக்கு மேல் நீர் உள்ளது. உடலின் உள்ள ஒவ்வொரு செல்களிலும், திசுக்களிலும் புர5தம் நிறைந்துள்ளது. உயிர் வாழ்வதற்கும், ஆரோக்கியமாக இருப்பதற்குமான முக்கியப் பணியை புரதம் செய்கிறது. புரதம் என்பது அமினோ அமிலங்களால் ஆனது. 20-க்கும் மேற்பட்ட வகையான அமினோ அமிலங்கள் நமக்குத் தேவைப்படுகின்றன. இவற்றில் முக்கியமான எட்டு வகைகளை, அத்தியாவசியமான அமினோஅமிலங்கள் என்கிறோம்.

புரதச்சத்துக்காக செயற்கை பானங்கள், பவுடர்களைப் பயன்படுத்தத் தேவை இல்லை. உண்ணும் உணவிலேயே போதுமான அளவுக்குப் புரதச்சத்து இருக்கிறது. இறைச்சி மற்றும் மீன் உணவுகள் மூலமாக புரதச்சத்தை எளிதில் பெறலாம். தாவர உணவுகளில் காய்கறிகளில் மிகக் குறைந்த அளவே புரதச்சத்து இருந்தாலும், விதைகள், பருப்பு வகைகள், கொட்டை வகைகளில் புரதச்சத்து நிறைவாகவே கிடைக்கின்றன.
'குழந்தைகளின் வளர்ச்சிக்கும், கர்ப்பிணிகள், விளையாட்டு வீரர்கள், உடல் உழைப்புமிக்கவர்களுக்கு புரதச்சத்து மிக மிக அவசியம்'' என்று கூறும் மூத்த டயட் கவுன்சலர் கிருஷ்ணமூர்த்தி, எந்தெந்த உணவுகளில் புரதச்சத்து நிறைவாக உள்ளது என்பது பற்றி விவரிக்கின்றார்.




No comments:

Post a Comment